privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி!

அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி!

-

poonol

மே 2 தினத்தந்தியில் ஒரு செய்தி! ” குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை, கணவனை, ஜெயிலுக்கு அனுப்ப துடித்த மனைவி, சென்னை போலீசு நிலையத்தில் ருசிகரமான வழக்கு” – இதுதான் அந்த செய்தியின் தலைப்பு. தலைப்பை பார்த்ததும் ஏதோ வழக்கமான தந்தி பாணியிலான க.காதல் மேட்டர் என்றுதான் பலருக்குத் தோன்றும். முதலில் செய்தியைப் பார்ப்போம்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஷியாம் நாராயணன் அமெரிக்காவில் மாதம் நான்கு இலட்ச சம்பளத்தில் என்ஜினியராக வேலை பார்க்கிறார். அவரைப் போல அதே சம்பளம், படிப்புடன் அங்கேயே வேலை பார்க்கும் நந்தினி என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்கிறார் நாராயணன். இனிமேல்தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

நாராயணன் ஒரு சுத்த பத்தமான பார்ப்பன சாதியைச் சேர்ந்த அம்பி. நந்தினியோ தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அம்பி நந்தினியை ஏற்றுக் கொண்டதற்கு அவரது சம்பளம், படிப்பு, அமெரிக்க வாசம் என்பதைத் தவிர வேறு காரணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. நந்தினியைப் பொறுத்தவரை தன் சுயசாதி அவலத்தை ஒரு பார்ப்பனரை திருமணம் செய்வதன் மூலம் வென்றுவிட்டதாக நினைத்திருக்கலாம். எப்படியும் அமெரிக்காவில் செட்டிலான ஒரு தலித் பெண்ணுக்கு அம்மக்களின் போராட்ட உணர்வு இருக்கும் என்பதற்கு அவசியமில்லை. இருவரின் சாதியையும் தினத்தந்தி நேரடியாக குறிப்பிடவில்லை எனினும் நாம் உறுதியாகவே ஊகமின்றி அவர்களது சாதியை அறிய முடியும்.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்யும் போது அங்கே சமூகப்புரட்சி நடப்பதில்லை. தம்பிதியினர் இருவரும் யாரது சாதி படியெடுக்கில் மேலிருக்கிறதோ அந்த சாதியின் பண்பாட்டில் சங்கமித்து விடுவார்கள். இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். இங்கே நாம் கூற விரும்புவது நந்தினியும் அப்படி பார்ப்பனமயமாக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்பதைத்தான். அப்படியெல்லாம் அவர் மாறியிருக்கக் கூடுமென்றாலும் அம்பி நாராயணனின் பெற்றோர்கள் ஏற்பதாக இல்லை.

ஒரு தலித் பெண்ணின் உறவில், இரத்தக் கலப்பில் குழந்தை கூடாது என அவர்கள் அம்பியை மாம்பலத்தில் இருந்தவாறே நோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தலித் பெண்ணின் நான்கு இலட்ச ரூபாய் சம்பளத்தை உற்சாகமாக வரவேற்ற அம்பியும் இறுதியில் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று குழந்தை வேண்டாமெனவும் கடைசியில் தாம்பத்திய உறவே கூடாது எனவும் வக்கிரமாக நடந்திருக்கிறார். இந்தக் கயமைத்தனத்தை நான்கு ஆண்டுகளாக போராடியிருக்கிறாள் அந்த அபலைப் பெண். இறுதியில் இருவரும் சென்னை வந்திருக்கிறார்கள்.

தன் உறவில் குழந்தை  கூடாதென இழிவு படுத்தும் நாராயணனோடு சேர்ந்து வாழ்வதில் பயனில்லை என பெற்றோருடன் சேர்ந்து முடிவெடுத்த நந்தினி கூடுதலாக அம்பியின் மேல் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார். அவ்வாறே போலீசு ஆணையரிடம் புகார் பதிவு செய்தார். ஆணையரின் உத்தரவுப்படி அசோக் நகர் போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். முதலில் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து சேர்ந்து வாழ முயற்சி எடுத்த போலீசாரை நாராயணன் சட்டை செய்யவில்லை. நந்தினியுடன் சேர்ந்து வாழத்தயாராக இருப்பதாகவும் குழந்தை மட்டும் கிடையவே கிடையாது என அந்த திமிரெடுத்த மாம்பலத்துப் பார்ப்பான் உடும்புப் பிடியாக நிற்கிறார்.

கடைசியில் நாராயணன் மேல் தீண்டாமை சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக அறிவித்த போலீசு போனால் போகட்டுமென ஒரு நாள் சிந்திப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது. அமெரிக்காவில் ஆர்ப்பாட்டமாய் வாழ்ந்து விட்டு இப்போது புழல் சிறைக்கு செல்ல வேண்டுமா என பயந்து போன அம்பி அடுத்த நாள் நந்தினிக்கு அவர் விரும்பியவாறு குழந்தை தருவதாக ஒப்புக் கொண்டாராம். தலித் சாதி மக்களுக்கு மட்டும் தண்டனைகளை பாவம் பார்க்காமல் வாங்கித் தரும் போலீசு ஒரு அக்ரகாரத்துப் பார்ப்பானை தண்டிப்பதற்கு தயாராக இல்லை. என்ன இருந்தாலும் இது மேன்மக்களின் பிரச்சினையல்லவா! அப்புறமென்ன, அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து வரும்போது குழந்தையுடன் வரவேண்டுமென போலீசு வாழ்த்துக்களுடன் அவர்களை அனுப்பி வைத்ததாம்.

தலித் மக்களின் மீது ஆதிக்கத்தை அரிவாளின் மூலம் நிலை நிறுத்தும் தேவர் சாதி – வன்னிய சாதி வெறிகளைப் போல பாரப்பன சாதி வெறி வன்முறை செய்வதில்லை என சிலர் பேசுவது வழக்கம். ஆனால் இந்த பிரச்சினையின் வன்முறையும், அநாகரிகமும், அயோக்கியத்தனமும் அரிவாளை விட அணுதினமும் சித்திரவதை செய்யும் வல்லமை கொண்டது. எவ்வளவு நுட்பமாக பாரப்பன சாதி தன்னை தக்கவைத்துக் கொள்கிறது பாருங்கள்! இத்தகைய சாமர்த்தியங்களெல்லாம் நிச்சயமாக தேவர், வன்னிய சாதி வெறியர்களிடம் இல்லை. அதனால்தான் இவர்களை திருத்துவது முடியும் என்பதோடு பார்ப்பனர்களை திருத்துவது இயாலாததாக இருக்கிறது.

போகட்டும், நந்தினியின் இந்த கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற முடிவை நம்மால் ஏற்க முடியவில்லை. காதலித்து மணந்த ஒரு பெண்ணை உலகில் வேறு எவரும் இதைப் போல கேவலப் படுத்த முடியாது என்றளவுக்கு இலக்கணம் படைத்திருக்கும் இந்த நபரின் உறவை அவர் வழக்குப் போட்டு தண்டித்திருக்க வேண்டும். அந்த மண உறவையும் துண்டித்திருக்க வேண்டும். இவ்வளவு கீழான நடத்தை உள்ளவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்? ஆனாலும் இந்தியப் பெண்கள் இத்தகைய கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் அடிமை மனநிலையை நந்தினி அமெரிக்கா சென்றும் கூட வெல்ல முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

நாராயணன் இத்துடன் முடித்துக் கொள்ளும் ஆள்மாதிரி தெரியவில்லை. அமெரிக்க திரும்பியதும் சுலபமாக அந்த நாட்டு சட்டப்படி ஏதாவது ஒரு போண்டா காரணத்தைச் சொல்லிக்கூட விவாகரத்து செய்யலாம் என நினைத்திருக்கலாம். ஊர் உலகம் என்ன சொன்னாலும், எப்படியிருந்தாலும் பார்ப்பனர்கள் தமது இருப்பை தந்திரமாக காத்துக் கொள்வதில் விற்பன்னர்களாயிற்றே! பாவம் நந்தினி!!

  • நீங்கள் சொல்லும் இந்த தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையினோர் தாங்கள் பணம் படைத்தவராயின் அவர்கள் தங்கள் இனத்தில் பெண் எடுக்க விரும்புவதில்லையே. பிற இனத்தில் பெண் எடுத்து தங்கள் குடும்ப கவுரவத்தை நிலைநாட்டுவதாக நினைக்கின்றனர்.

   • மிகவும் சரியான நெத்தியடி .ஏதோ கொஞ்சம் மேலே வந்துவிட்டவுடனே தன்னைவிட வசதியில் கொறைவாக உள்ளவனை மட்டமாக எண்ணுவது இந்த தலித்துகள் மாற்றிக்கொள்ளவேண்டும் .மேலும் தன்னுடைய இன முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடுத்த சாதியில் திருமணம் எனபது சரியானது அல்ல .பிறகு எப்படி தாழ்த்தப்பட்ட இனம் முன்னேறும்.

    • தலித்துகள் இனிமேல் ரகு சொல்வதுபோல் கேட்க வேண்டும். பணம்படைத்த ஒரு தலித் பிற சாதி கோவிந்துவின் சகோதரியை மணம் செய்து அத்திம்பேர் என்று சொன்னால்… அந்தப் பணக்காரனுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். கோவிந்துவின் மனநிலையை பற்றி கொஞ்சமாவது எண்ணிப்பாருங்கள்.

   • சாதியைக் கடந்து, இதில் பணம் செயல்படுகிறது. இதை, தமிழனாகிய நீங்கள் எந்த வகையில் தவறாக நினைக்கிறீர்களோ தெரியவில்லை. உயர்சாதியில் பிறந்த ஒருவனுக்கு இப்படியான குணம் இருக்க முடியாது. தமிழர் பண்பாட்டில் மிச்சமிருக்கும் சில நல்லவைகளையும் தமிழன் குறை சொல்வது அழகல்ல.

 1. //நாராயணன் ஒரு சுத்த பத்தமான பார்ப்பன சாதியைச் சேர்ந்த அம்பி. நந்தினியோ தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அம்பி நந்தினியை ஏற்றுக் கொண்டதற்கு அவரது சம்பளம், படிப்பு, அமெரிக்க வாசம் என்பதைத் தவிர வேறு காரணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. நந்தினியைப் பொறுத்தவரை தன் சுயசாதி அவலத்தை ஒரு பார்ப்பனரை திருமணம் செய்வதன் மூலம் வென்றுவிட்டதாக நினைத்திருக்கலாம். எப்படியும் அமெரிக்காவில் செட்டிலான ஒரு தலித் பெண்ணுக்கு அம்மக்களின் போராட்ட உணர்வு இருக்கும் என்பதற்கு அவசியமில்லை. இருவரின் சாதியையும் தினத்தந்தி நேரடியாக குறிப்பிடவில்லை எனினும் நாம் உறுதியாகவே ஊகமின்றி அவர்களது சாதியை அறிய முடியும்.//

  அதெப்படி ஊகிக்கிறீர்கள்? வேறு ஏதாவது செய்தியை அறிந்துள்ளீர்களா? அல்லது காமாலைக் கண்ணனின் கதிதானா? அப்படியே இருந்தாலும் இந்த கேஸ் பற்றி மட்டும் பேசுங்கள். அதில் உள்ளவர்கள் ஜாதியை ஏன் நீங்கள் நோண்ட வேண்டும்?

  ஆனால் உங்களிடம் நியாயமான நடத்தையை எப்படி எதிர்பார்க்க இயலும்? வக்கீல்கள் அராஜகமாக செயல்பட்டு, சுப்பிரமணிய சாமியின் மீது முட்டை வீசிய போது ஒரு பாப்பானுக்கு அடிவிழுகிறது என்பதாலேயே விசிலடிக்காத குறையாக அதை பாராட்டியவர்தானே நீங்கள்?

  உங்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்http://dondu.blogspot.com/

   • எல்லா டோண்டுகளின்மீதும் முட்டையடிக்க வேண்டுமென்றால் நாமக்கலையே விலைக்கு வாங்கினாலும் பத்தாது. அது வெட்டிவேலை.

    • இந்த ஒரு கட்டுரைய வெச்சே வினவு என்கிற காழ்புணர்ச்சி கொண்ட பொய் மூட்டை வெளிச்சத்திற்கு வரிகிறது.

     இந்த ஷ்யாம் நாராயணன் என்னுடய நண்பன் மணிகண்டன் என்பவருடய அண்ணன் ஆவர்.

     இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் நந்தினி தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் கிடையாது, அவர் ஷ்யமாவிட பல மடங்கு அதிகம் பண பலமும், அரசியல் அதிகார பலமும் கொண்ட ஒரு பெண்.

     நந்தினியிடம் ஷ்யாம் நட்பாக பழகும் பொழுது அதை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு, ஷ்யாமை பல மடங்கு உளவியல் ரீதியாகவும் எமொதிஒநல் டோர்டுரும் செய்து நேரடியாகவும் ஷ்யாமின் பெற்றோர்களை மிரட்டல் விடுத்தது உண்மை,

     இந்த பெனின் சிற்றப்பன் காவல்துறை தீ ஐ கி ஆகா உள்ளார்,அவர் தம் தூண்டுதலின் பால் ஷ்யாமிற்கு இவளவு பிரச்சனைகள் உண்டாயின.

     இன்று அந்த அணைத்து மிரட்டல்களுக்கும் அடி பணிந்து ஷ்யாம் நண்டினியாய் ஏற்று கொண்டு அமெரிக்காவில் குடும்பம் நடத்துகிறார்,அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

     இந்த கட்டுரையில் என்னமோ பார்பன வகுப்பு பய்யன் ரொம்ப கொடுராமனவகவும் சித்தரிக்க பட்டு உள்ளது.

     எல்லாமே பொய், வழக்கின் உண்மையை அறியாமல் செய்து வெளியிடுவது வினாவுக்கு ஒன்னும் புதிதானது அல்ல.

     அஆனல் இணைக்கு ஆதாரத்துடன் மாடி கொண்டார் வினவு குரூப் வெட்டி பேச்சு வீரர்கள்.

     • அம்பியின் அயோக்கியத்தனம் பற்றி வாய் கிழிய எழுதினீர்களே, ஆம்படையாள் நந்தினி எப்படி? 4 லக்ஷ ரூபாய் சம்பளம், படிப்பு, மேல் ஜாதி மாப்பிள்ளைக்கு மயங்கிய அடிமைத்தனத்துக்கு ஐயோ பாவம் என்று பேரா? அது மட்டும் அயோக்கியத்தனம் இல்லையா? அவாளுக்கு எதிராக இவாளை சமூகப் புரட்சி பண்ணாமல் தடுத்தது பணத்தாசை தானே? அப்ப அவாளை மட்டும் குற்றம் சொல்றேளே, ஏன் அண்ணா?

  • அப்படியே இருந்தாலும் இந்த கேஸ் பற்றி மட்டும் பேசுங்கள். அதில் உள்ளவர்கள் ஜாதியை ஏன் நீங்கள் நோண்ட வேண்டும்? /////////////////////

   என்ன ஒரு சாதிப் பாசம் பொங்கி வழியுது ?.. என்ன டோண்டு … .சாதி காரணமாக குழந்தை பெற மறுத்தவனை சாதியை வைத்து நோண்டாமல் வேறு என்னவென்று நோண்டுவது டோண்டு ?..

   சொல்லு செல்லம் …

   • இந்த இஅட்ச்சனத்தில் .. கூட சிங்கி அடிக்க ரெண்டு சொங்கிகள் வேறு இந்த மானங்கெட்ட டோண்டுவுக்கு ….

 2. If the caste factor was a “gimmick” and there were serious issues with her (at least, according to her husband), what did he have to fear? Couldn’t he have established that in a court?

  You’re missing a few points: the problem is not whether or not it’s a crime to not have sex with your spouse or impregnate her. It’s the reason behind it. Something you would have understood had you actually read the post without getting restless because of your instinctive association with an aspect of the story i.e., caste.

  (And don’t use archaic, sexist words like “barren” to describe a woman’s inability to have children.)

  “Parents are universally” not the same! For one, caste is not universal and hence the racist expectations that follow.

  They didn’t come to know that they couldn’t have children. Read this a few times or better yet ask a Chinese guy to read it. I’m sure he’ll understand it better than you have:
  ஒரு தலித் பெண்ணின் உறவில், இரத்தக் கலப்பில் குழந்தை கூடாது என அவர்கள் அம்பியை மாம்பலத்தில் இருந்தவாறே நோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தலித் பெண்ணின் நான்கு இலட்ச ரூபாய் சம்பளத்தை உற்சாகமாக வரவேற்ற அம்பியும் இறுதியில் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று குழந்தை வேண்டாமெனவும் கடைசியில் தாம்பத்திய உறவே கூடாது எனவும் வக்கிரமாக நடந்திருக்கிறார்.

  So: It’s the parents who stopped them from having children; they also seemed to have influenced their son’s decision to not have sex with her. We don’t care whether he had erectile dysfunction and if that was the actual cause.

  You’re right, there’s no way of knowing if that is exactly what happened. But we assume culpability on Narayanan’s part simply based on how the case has unfolded. Note his complete backflip and capitulation to the case file against him.

  • The girl is very powerful,she emotional blackmailed him with suicide,cases and what not,this guy lost his whole life due to this spoilt girl’s bullshit possessiveness and now we have half baked idiots like vinavu wrting things without knowing the exact truth.

 3. சட்டப்படி தவறு இல்லேன்னா போலிஸ கண்டு ஏன் பம்மனும்?

  யோவ், தண்டனைக்கும் அதே பார்பன கருட புராணமா?

 4. dei vennai, Chidambaram temple is not someone’s personal property. It’s not surprising that you think that entry into temple’s “sanctum sanctorum” is someone’s personal issue.

  Nobody gives a crap about this stupid temple or that idiot with a rotten bag at the end of a stick; just like you don’t care about slums or wherever the poor live. The point here is accessibility. That is: “if and when you do care, can you?”

  When you personally believe that you are better than others by birth — because there’s a holy genetic marker that bestows a halo behind your “kudumi” head — you’re “personally” a racist. When your “personal racism” is set to interact with others in public, it translates into public racism. When you have the power to influence others, driven by your “personal beliefs”, it becomes fascism.

  Rules govern physical relationship and their corresponding taboos. Are you suggesting that this kodeeswara pichaikaran is like a “chaste” woman? He should probably be named Kanchi Kannagi!

  பெரிய public forum. உன்ன மாறி மர மண்டைங்கெல்லாம் பேசும்போது அவர் பேசுறதுல எந்த தப்பும் இல்ல. நீ சாத்து.

 5. Mr.Bhagath,
  When you dont believe Brahminism why do u want to get inside the temple and get inside the Karuvarai? Why do you want to hug Sankaracharya? DO you still think Kachi Sankaracharya is god and hugging him is the life time achievement. If someone has some beliefs why do you need to get inside their personal things. Its like someone complaining about not allowing to touch your wife or daughter. To prove yourself right you are getting into others personal things and crying unnecessarily.
  Think and have sense before writing in public forums.

  • Mr.Gopes… Well, we have done that already… We went inside the temple’s karuvarai… we break the brahministic rule… but to implement this in all temples..we need social revolution… We are a group, constantly figting against brahminism, untouchability,..etc
   Sangaraachaari has got a belief that Talits are untouchables.. well talits are sons and daughters of prostitute… Is it his personal belief? I should not oppose that..?
   I advice you to read about our organisation activities first before writing in this forum….

 6. why you are harrsing the caste brahmins? is it they are not asking anything and doing nothing.
  Just write about the other castes like gounder, naidu, etc. are you having guts to write like that?
  Like this things happens everywhere. dont do foolish things like that.

 7. மலேசியாவில் தேவாலயங்கள் இஸ்லாம் வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளன. இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

  • Ask someone who will write with justice and clarity in mind. Vinavu is afraid to write on this subject. If the moderator who reads this comment before publishing is really bold and truthful, let him write against attacks on church in malaysia, attack on ahamedis in pakistan, attack on buddhists in thailand, destruction of bamiyan buddha, xinxiang violence etc.

   Communism is also a terrorist force. Bihar elections are good example. For preventing election, they killed many polices. They didn’t think about the children and family of the police before killing them.

 8. உலகில் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்கள் இந்த பார்பனர்கள். பணம் மட்டுமே பிரதானம் இவர்களுக்கு

  • //உலகில் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்கள் இந்த பார்பனர்கள். பணம் மட்டுமே பிரதானம் இவர்களுக்கு//

   முழுக்க முழுக்க தப்பு. பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது பார்ப்பனர்களின் பிறப்புரிமை அல்ல. அந்தப் பட்டத்தை அவர்களுக்கு இவ்வளவு சுலபமாகக் கொடுத்துவிட்டால் மற்ற சாதிக்காரர்கள் “நாங்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்?” என்று கோரசாகக் கேட்டபடியே உங்களை பெண்டு எடுத்து விடுவார்கள். பத்திரம்.

   அதே போல பணம் பார்ப்பனர்களுக்குப் பிரதானம் அல்ல. தன்னைத் தவிர பிறரெல்லாம் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்று (அநியாயமான ஒரு கருத்தை) நிலைநாட்டுவதே அவர்கள் மனப்பால்.

   • நன்றாக சொன்னீர்! அடுத்த தலைமுறை பார்பனர்களாவது தாங்கள் மற்ற மனிதர்களை விட எந்த விதத்திலும் உயந்தவர்கள் இல்லை என்று உணரட்டும்!

 9. Whatever said and done all the threads only reveal a cynical and an inferiority complex.When these guys cannot compete with brahmins and need crutches to support them like reservations and Govt support what sort of threat do they face from Brahmins ?The only issue they want is to close all avenue for Brahmins.How come after all these Dravidan rule for 43 years TN is just going down with public accountablity and decorum in public life is totally gone?Is it reflective of their fitness to rule?

 10. Another Brahmin bashing…because soft targets like few in numbers and cant take on you all physically. The same old tactics used by Periyar. Dont worry, we ll be extinct in this county very soon. Live merrily. Take on the might of mukulathor, vaniyyar and gounders if you have guts to.

  • யா … ஹியர் கம்ஸ் ஒன் பீட்டர் . ஐயா பார்பன உச்ச குடுமியே … என்ன நடிப்புடா சாமி ….
   எப்படி இது உங்களுக்கு பொறக்கும்போதே வா இல்லை … நடுல தான் வந்ததா ? . என்ன நீ சொன்ன முக்குலத்தோன் , வன்னியன் , கவுண்டன் எல்லாப் பயலும் வந்து சவுடால் விட்டுப் போய்ட்டானுங்க .. நீ மட்டும் தான் பாவம் போல பேசி சிம்பதி உருவாக்குற .. உன் புத்தி .. பார்ப்பான் புத்தி அப்படியே இருக்குடா அம்பி …

 11. முந்திரிக்கொட்டை வினவு…
  நந்தினி பற்றிய ஹரிக்குமாரின் கருத்துக்கு எங்கே பதில் ?
  அரசியல், காவல் துறையில் பலம் வாய்ந்த மேல் சாதிப் பெண் ஒருவர் நடத்திய நாடகத்துக்கு வினவின் ஆதரவு வரிகளா.. அவமனாம், அவமானம்..
  தவறான தகவல் தந்தமைக்கும், சாதி காழ்ப்புணர்ச்சியின் எல்லை மீறிய கற்பனை கட்டுரைக்கும் மறுப்பு வெளியிடு, மண்ணிப்பு கோரு….

  • மாங்கொட்டை மனிதன்,

   இந்த கரிகுமார் ஒரு பொய்யான ஆள்.வினவு தளத்தின் விவாதங்களில் புகுந்து குழப்புவதற்காகவே உருவாக்கி விடப்பட்டinternet bot .இதற்கு முன்னால் இது சுப்பிரமணி என்ற பெயரில் பின்னூட்டங்கள் எழுதி வந்தது.வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டதால் சுப்ரமணியை சாகடித்துவிட்டு கரிகுமாராக பிறவி எடுத்து வந்துள்ளது.

   அது ரோபோ என்பதால்தான் ரொம்ப நாளா இங்கிலீஷ் லதான் எழுதும்.தமிழையும் இங்கிலீஷ் எழுத்துலதான் எழுதும்.நிறைய பேர் இந்த தமிங்கிளிஷை கண்டிச்ச பிறகு அதை உருவாக்கி உலவவிட்ட கேடி தமிழ்ல எழுதுற மாரி கொஞ்சம் வேலை செய்து கொடுத்த பின் இப்போ தமிழ்ல எழுதுது.

   அப்படியும் ரோபோ என்பதால் இந்த ”ஆதார” பின்னூட்டத்தில் கூட emotional torture ம் என்பதை எமோசனல் டார்ச்சரும் என எழுத முடியாமல் ”எமொதிஒநல் டோர்டுரும்” என எழுதி இருக்கு. D.I .G.யை எப்படி எழுதி இருக்கு என்றும் பார்க்கவும். அது வந்து பின்நூட்டப்பெட்டில english ஐ செலக்ட் பண்ணி வச்சுகிட்டு டைப் பண்ணி கடசியா தமிழ க்ளிக் பண்ணி அனுப்புது.அதனால்தான் இப்படி ஆவுது. உண்மையான மனுசன்னா அத சரி பண்ணலாம்.ரோபோவுக்கு ஏது அவ்வளவு அறிவு.

   சுப்பிரமணி/கரிகுமார் புரட்டு பற்றி அறிந்து கொள்ள பழைய பதிவுகளை சற்றே புரட்டிப் பார்க்கவும்.அதற்கு உதவியாக சுட்டிகள் சில
   https://www.vinavu.com/2012/02/22/kapaleeswarar-temple-property-stolen/#comment-57407

   https://www.vinavu.com/2012/03/14/jayas-govt-sucks/#comment-58614

   https://www.vinavu.com/2012/04/07/ramajayam/#comment-60204

   https://www.vinavu.com/2012/06/20/conversion-16/#comment-63859

   இந்த டுபாக்கூரின் உளறலை இது பெரிய ஆதாரம்னு தலையில் தூக்கி வச்சு ஆடும் மாங்கொட்டை மனிதா,இதற்காக வினவு மன்னிப்பு கேட்க சொல்ற யோக்கியரே இந்த தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள கரி ஏதேனும் வாய்ப்பு கொடுத்திருக்கா.ஒன்னோம் இல்லை.இந்த தகவலை உண்மை ன்னு நிரூபிக்க கரிக்குமார் அந்த D.I .G யோட பேரை சொல்லட்டும்.அப்படியானால் விசாரித்து உண்மையா பொய்யா ன்னு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு உருவாகும்.

   • இன்னைக்கு ஷ்யாமும் நந்தினியும் சந்தோஷமா வாழுறாங்க.

    எங்களுக்கு உண்மை தெரியும் அதான் நாங்க சும்மா இருக்கோம். வினவு கிட்ட இருந்து எங்களுக்கு எதுவும் வேணாம்.

    ஆனால் வெறும் ஒரு பெட்டி செய்தியை வைத்து விசாரணை இல்லாமல் யாரும் எந்த ஒரு முடிவுக்கும் வராதீர்கள்.

    இந்த அன்பு,பம்ப்பு இவுங்க எல்லாம் வெட்டியா சுத்திகிட்டு இருக்க க்ரூப்பு. எனைக்குமே இவுங்களால பிரச்சனய்க்கு சரியான தீர்வு சொல்லவே முடியாது.

   • \\இந்த கரிகுமார் ஒரு பொய்யான ஆள்.வினவு தளத்தின் விவாதங்களில் புகுந்து குழப்புவதற்காகவே உருவாக்கி விடப்பட்டinternet bot \\

    ஏனையா இப்படி காமெடி பண்றீங்க.. நீங்க கற்பனை பண்ணுற அளவுக்கு ஒரு ஆட்டோபாட் உருவாக்கி தமிழ் இணையதள விவாதங்களில் பதில் எழுத இன்னும் ஒரு ஐம்பது வருடமாவது ஆகலாம்… ஆனாலும் ஒரு ரோபோவை மதித்து அதன் கருத்துக்களுக்கு பதில் எழுதி தள்ளும் உங்கள் செயல் தான் தொட்டிலை கிள்ளி பிள்ளையை ஆட்டும் கிழத்தி வீட்டு கீரிப்பிள்ளை நிலையாக இருக்கிறது…

    • \\நீங்க கற்பனை பண்ணுற அளவுக்கு ஒரு ஆட்டோபாட் உருவாக்கி தமிழ் இணையதள விவாதங்களில் பதில் எழுத இன்னும் ஒரு ஐம்பது வருடமாவது ஆகலாம்//

     கிணத்து தவளை.தன்னால் செய்ய முடியாததை யாராலும் செய்ய முடியாது என நினைப்பது மடமை.

     \\ஒரு ரோபோவை மதித்து அதன் கருத்துக்களுக்கு பதில் எழுதி தள்ளும் உங்கள் செயல் தான் தொட்டிலை கிள்ளி பிள்ளையை ஆட்டும் கிழத்தி வீட்டு கீரிப்பிள்ளை நிலையாக இருக்கிறது…//

     ஏற்கனவே இதற்கு பதில் சொல்லி இருக்கிறேன்.ஆதாரமாக கொடுத்துள்ள நான்கு சுட்டிகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும்.

     https://www.vinavu.com/2012/03/14/jayas-govt-sucks/#comment-58614

     இந்த சுட்டியிலிருந்து

     \\.நீ ரோபோவாகவே இருந்தாலும் கவலையில்லை.கம்ப யூட்டர் கூட செஸ் விளையாடுற மாதிரி உன்னை உருவாகிய அந்த பார்ப்பனியம் நிரம்பிய மூளையுடந்தான் விவாதம்.//

     நான் எழுப்பிய கேள்விக்கு என்ன பதில்.

     \\நான் சொன்னது எல்லாமே உண்மை . இதுக்கு ஆதாரம் எல்லாம் குடுக்க தேவை இல்லை. நீங்க என்ன போலீசா நீதிமன்றமா ?
     ஆதாரம் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை ?//

     \\உன்னை போய் மலை போல நம்பி வினவை மன்னிப்பு கேட்க சொன்ன மனிதன்தான் இதுக்கு பதில் சொல்லணும்//

     வினவு மன்னிப்பு கேட்கனும்னு இப்பவும் வலியுறுத்துகிறீர்களா.

    • இதுல இருக்குற இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்ன இந்த அன்பு பெரிய ஒபாமா , இவுர ஆட்டோ பாட் எல்லாம் வெச்சு கலைகிரான்கலாம் .

 12. மொக்கை அன்பு,

  எனக்கு google transliteration ஒழுங்க பயன்படுத்த தெரியலன்னா அது ஒரு பிரச்சனையா?

  எழுது பிழை எல்லாம் சரி செஞ்சிட்டா நீ வேற மாதிரி பின்னூட்டம் போடா போறியா, இல்ல உன் பெயர வெறுப்புன்னு மாத்திக்க போறியா ?

  நான் சொன்னது எல்லாமே உண்மை . இதுக்கு ஆதாரம் எல்லாம் குடுக்க தேவை இல்லை. நீங்க என்ன போலீசா நீதிமன்றமா ?

  ஆதாரம் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை ?

  உண்மையா எழுதறேன்னு வலைத்தளம் வெச்சு நடத்துறீங்க இல்லை ,உண்மையா கண்டுபுடிச்சு நீங்களே எழுதுங்க.

 13. மறுபடியும் ரோபோன்னு காட்டுற.

  \\எங்களுக்கு உண்மை தெரியும் அதான் நாங்க சும்மா இருக்கோம். வினவு கிட்ட இருந்து எங்களுக்கு எதுவும் வேணாம்.//
  என்று சொல்ற நீ எங்கே சும்மா இருந்த.
  \\அஆனல் இணைக்கு ஆதாரத்துடன் மாடி கொண்டார் வினவு குரூப் வெட்டி பேச்சு வீரர்கள்.//
  என்று என்ன _____ பின்னூட்டம் போட்ட.இப்போ ஆதாரம் குடுன்னு கிடிக்கி பிடி போட்டவுடன் \\வினவு கிட்ட இருந்து எங்களுக்கு எதுவும் வேணாம்//.ன்னு வுட்டா போதும்னு ஓடுற.மனுஷ மூளையா இருந்தா இப்படி வெட்கமே இல்லாம பேசுமா.

  \\நான் சொன்னது எல்லாமே உண்மை . இதுக்கு ஆதாரம் எல்லாம் குடுக்க தேவை இல்லை. நீங்க என்ன போலீசா நீதிமன்றமா ?
  ஆதாரம் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை ?//
  உன்னை போய் மலை போல நம்பி வினவை மன்னிப்பு கேட்க சொன்ன மனிதன்தான் இதுக்கு பதில் சொல்லணும்.D.I.G.பேரை சொல்லுன்னு கேட்டவுடன் வெடவெடக்கும் நீ குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்கிற கதையா வீரம் பேசுறியா.

 14. உங்கள மாதிரி நாங்க வெட்டி கெடையாது, என்கள நம்பி குடும்பம் எல்லாம் இருக்கு.

  DIG ய பகைசிக்குற அளவுக்கு நாங்க முட்டாள் கெடயாது, அப்படி செஞ்சு இன்னைக்கு ஒண்ணும் நடக்க போறதும் இல்ல.

  உங்க கிட்ட பெயர சொன்னா நீங்க என்ன செய்வீங்க , ஷ்யாமுக்கு ஆதரவா போராட்டம் பண்ணுவீங்களா?

  அப்படி பண்ணுனா என்ன மிஞ்சும் ? இன்னைக்கு அவுங்க ரெண்டு பெரும், சந்தோஷமா இருக்காங்க புள்ளயோட.

  திரும்ப திரும்ப வெட்டி விவாதத்துக்கு ஆள செக்குரதுலையே குறியா இருக்கீங்களே , தினத்தந்தி பெட்டி செய்திய manipulate செய்யுற அளவுக்கு தான் உங்க மூளை வளர்ந்து இருக்கு.

  நான் மறுபடியும் சொல்றேன், உன் கூட எல்லாம் வெட்டி விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இல்ல. ஷ்யாம் பெயர் கேட்டு போக கூடாதுன்னு தான் நாங்க இங்க இந்த உண்மையை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.

  • \\DIG ய பகைசிக்குற அளவுக்கு நாங்க முட்டாள் கெடயாது, அப்படி செஞ்சு இன்னைக்கு ஒண்ணும் நடக்க போறதும் இல்ல.//

   கோழைகளின் சொர்க்கத்தில் நீடூழி வாழ்க.

   \\உன் கூட எல்லாம் வெட்டி விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இல்ல. //

   எப்படியோ ஒழிஞ்சு போ.எங்களுக்கு மட்டும் இந்த வெட்டி விவாதத்தில் சந்தோசமா என்ன.

 15. பார்ப்பன கும்பல் கல்ல மட்டும் விட்டுட்டு எங்காவது ஒளிந்து கொள்ளும். கேட்டா , அங்க போறாளே அவாதான் எரிஞ்சான்னு சொல்லும்.

 16. Vinavu are you proud of blaming brahmins and high caste people. whatever they do you apply caste image on it, this is also an casteist attitude. marriage and divorce is a common issue, your prejudiced mind wants to create a wrong image..
  what you think you can achieve from this kind of news. nothing you alienated a sect of people from the general thinking. don’t create any upper caste lower caste rift. Everyone can rise up and do well in life. Stop propagating this non sense articles. Fighting for people’s right and questioning injustice is a good thing but asking to completely topple the social set up is unachievable and will never happen.. Even your maoist know that. Who is sponsering moaists China Pak !!! no it is the same MNC companies that you are ever balming. Maoists are paid by corporate companies to spare them and not hinder their mining work. So vinavu pls change.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க