ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!

40

iit-sperm-wanted

சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தகுதியான என்றால்………?

ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான  ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர். (மதிப்பெண்கள் (CGPA) மற்றும் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தையும் நிபந்தனையாக வைக்க மறந்து விட்டனரோ). இதற்காக தானம் செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஐ.ஐ.டி பொலிகாளைக்கு  20,000 ரூபாய் தரவிருப்பதாகவும் விலை நிர்ணயித்துள்ளனர்.

படிப்பதற்கு நாராசமாக இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் சமூகத்தின் பிற தளங்களிலும் பிரதிபலிக்கின்ற காரணத்தால், அது விளைவிக்கவிருக்கும் அபாயத்தையும் இங்கு பரிசிலிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு குழந்தையில்லாத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது கூட பல நிகழ்ச்சி நிரல்களை அல்லது பிற்போக்குத்தனங்களை மனதில் நிறுத்தியே தங்கள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு உடன்படுகின்றனர். தத்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த சாதியிலேயே பிறந்த குழந்தை அல்லது சமூகக் கட்டுமானத்தில் அவர்களுக்கு மேலிருக்கிற சாதியில் பிறந்த குழந்தை, நோய் நொடியில்லாமல் அங்க பாதிப்பெதுவும் இல்லாத குழந்தை போன்றவையே பிரதான கோரிக்கையாயிருக்கின்றன.

குறிப்பாக இவர்கள் வைக்கிற  முக்கியமான நிபந்தனைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிச்சைக்காரர்கள் அல்லது தெருவோரங்களில் வசிப்பவர்களுடையதாக இருக்கக் கூடாது என்பதே, இதற்கு அவர்கள் வைக்கிற வாதம் அக்குழந்தைகளைத் தத்தெடுத்து தத்தம் குடும்பச் சூழ்நிலைகளில் வளர்த்தால் கூட அது தனது இரத்த உறவின் சாதிய குணநலன்களையே கொண்டிருக்கும் என்பதே. ஆக சாதியின், வர்க்கத்தின் மேல்நிலையில் உள்ளவர்களே அதிக அறிவைக் கொண்டவர்களாகவும், ஒழுக்கச் சீலர்களாகவும் இவர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

மேலும் இவர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதையே வழக்கமாகக்  கொள்கின்றனர். இது தத்தெடுத்தவர்கள் இறுதிக் காலங்களில் ஆண் குழந்தைகளை அண்டி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பெண் என்றால் கல்யாணம் ஆனவுடன் சென்றுவிடுவார்கள், சட்டப்படி சொத்துரிமை கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும் விளைந்ததே. ஆக எக்காலத்திலும் சொந்தக் குழந்தையானாலும், தன் பொருளாதார, சாதி நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். சீரழிந்து வருகிற ஒரு சமூகம் தான் விரும்பும் வாழ்க்கைக்கான விழுமியங்களை எத்தகைய விலை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்ளத் தயங்காது என்பதற்கான ஆதாரமே இது.

இதற்குச் சற்றேதும் குறைவில்லாத விழுமியங்களுடன் கொண்ட விளம்பரத்தைத்தான் அத்தம்பதியினரும் கொடுத்துள்ளனர். மேற்கொண்டு இச்செய்தியை அறிவியல் கொண்டு பார்த்தால்………… விளம்பரத்தில் கோரியுள்ளபடியே அத்தம்பதியினர் தாங்கள் விரும்பிய ஐ.ஐ.டி பொலிகாளைகளின் விந்தைப் பெற்று, செயற்கை முறையில் கருவுறுதல் மூலம் குழந்தை பிறந்தால் கூட அக்குழந்தை வளர்ந்து அதன் இலக்கை அடைய முடியுமா என்பது நிச்சயமற்றது.

ஏனெனில் சிந்தனை, செயல் மற்றும் வாழ்வு போன்றவை அவரவர் வாழும் புறச்சூழலைப் பொருத்தே அமையும். அதன் தாக்கமே ஒருவர் பகத்சிங்காக மாறுகிறாரா அல்லது எட்டப்பனாக மாறுகிறாரா என்பதை முடிவு செய்யும். அது ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் மரபணுக்களைப் பொருத்து அமைய எள்ளளவும் வாய்ப்பில்லை. மரபணுக்கள் மூதாதையரின் உடல் கூறுகளின் தன்மைகளான நிறம், கண்ணின் கருவிழி, உடலின் வாகு போன்றவற்றைத் தான் கடத்தும். அன்றி, கருத்து, சிந்தனைக் கூறுகளை அல்ல.  ஆகையால் அது அப்துல் கலாம் விந்தணுவாக இருந்தால் கூட பிறக்கும் குழந்தை அவரைப் போன்று காமடி அறிவாளியாகப் பிறக்கும் என்பது அறிவீனம். இருந்தும் தற்போது நிலவுகிற சமனற்றச் சமூகத்தில் பெருஞ்சுயநலமிக்க பெற்றோர்களின் வளர்ப்பாலும், அவர்களால் ஊட்டப்படுகின்ற சமூகத்தைப் பற்றிய கருத்தோட்டங்களாலும் வளர்ந்து வருபவன் சுயநலம் மிகுந்த பிழைப்புவாதியாக மாறவே வாய்ப்புள்ளது. அரிதும் அரிதான வாய்ப்புகளில் மட்டுமே இவர்கள் சமூகப் பிரக்ஞையுள்ளவர்களாக மாற இயலும். இதுவும் அத்தகைய அரசியல், தொடர்பு, இயக்கங்கள், மூலமே சாத்தியம். ஆக பிறக்கப் போகும் குழந்தையின் திறனை விந்தணுக்களின் மூலம் நிர்ணயிப்பதென்பது அறிவீனம்.

ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது, அவர்கள் நன்றாகப் படிக்க கூடிய நல் விழுமியங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதைத் தாண்டி பெரும்பாலானவர்கள் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படி மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என்ற பார்ப்பன மேட்டிமைத்தனமின்றி வேறல்ல.

தங்கள் பேச்சு முதல் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்கம், சாங்கியம் பார்த்தல் வரை அனைத்தையும் பார்ப்பனர்களைப் போலவே (இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட ஒரு படி மேலே) செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் சிந்தனைச் சொரிதலால் வந்த குழந்தையே இது போன்ற விந்து விருப்பம். ஐ.ஐ.டியனர் ஏதோ இயற்கையிலேயே அறிவுச் செழிப்புடன் பிறந்தவர்கள் போலவும் மற்றவர்கள் இவையெதுவும் இல்லாததால்தான் மற்ற கல்லூரிகளில் படிப்பதாகவுமான ஒர் கருத்து இவ்விளம்பரத்தின் மூலம் பிதுங்கி வருவதைக் காணலாம்.

நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் குறிப்பாக பார்ப்பன பனியா சாதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டி கனவுகளை ஊட்டி அதற்குத் தேவையான பாடங்களை எந்திரகதியில் மனதில் உருவேற்றிவிடுகிறனர். மாணவர்களுக்கோ சிறு வயது முதல் வாழ்வின் அத்துனை அம்சங்களையும் இழந்தாலும் ஐ.ஐ.டி ஒன்றே வாழ்க்கை போன்ற என்ணங்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தேர்வுகளில் தான் விழுங்கியதைத் துப்பும் வேலையை கச்சிதமாகச் செய்வதால் இடமும் கிடைத்துவிடுகிறது. இதில் அறிவிற்கு என்ன வேலை?

பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இது போன்று சிறு வயதில் இருந்தே பயிற்சியெடுக்க வாய்ப்பில்லாமல் போவதாலும் இங்கு இடஒதுக்கீடு இல்லாதபடியாலும் அவர்கள் இங்கு சேர்வதைப்  பற்றி யோசிப்பதில்லை. ஆக தான் வாழும் சமூகம் சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதையும் பார்க்காத/பார்க்க விரும்பாத இவர்களின் குருட்டுக் கண்களுக்கு பணத்தின் இருப்பு மற்றும் அதன் மீதான அதீத காதல் மட்டுமே தேவை என்பதாக கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் பிற்காலத்தில் அதுவாகவே ஆகின்றனர். எனவே இங்கு சேர்வதற்கான தகுதி திறமை எல்லாம் சாதி வர்க்க ரீதியில் அமைந்தது என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  அதனால் தான் நன்றாகச் சம்பாதிக்கப் கூடிய, சந்தையில் அதிக விலைபோகும் ஐ.ஐ.டி பொலிகாளைகளை இவ்விளம்பரம் கோருகிறது.

இந்த ‘அறிவுஜீவி’களின் யோக்கியதையை, இச்சமூகத்தில் குறைந்த பட்சம் தனது இருத்தலுக்கான போராட்டத்தைக் கூட செய்ய லாயக்கற்ற குப்பைத் தொட்டிகளாக விளங்குவதன் மூலம் காணலாம். தன் கூடப் படித்த சக மாணவன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்து கண்டும் காணாமல் வாய் மூடி ஊமைகளாய் இருக்கும் மாணவர் சமூகத்தை படைப்பதுதான் இந்த ஐ.ஐ.டிக்கள். சமீப காலங்களில் ஐ.ஐ.டிக்களில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளும், சென்ற மாதம் இந்திய அறிவியல் கழகத்தில் (IISC- Bangalore) மன உளைச்சல் மற்றும் தனிமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பராக் சதாலே என்ற பேராசிரியரைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

அதீத மன உளைச்சல், தனிமை என்றால் சாவு ஒன்றுதான் தீர்வு போல, குறைந்தபட்சம் அதை எதிர்த்துப் போராடக்கூட வக்கில்லாமல் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இச்சமூகத்தின், இக்கல்விமுறையின் பலிகடாக்கள், அதன் நேரடித் தோல்வியால் ஏற்பட்ட விளைபொருட்கள், ஒட்டுமொத்த வினைகளின் எதிர்வினைகள்.

டிசைனர்-பேபிஇது போன்ற விளம்பரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தாலும் இவ்வகையறா விளம்பரங்கள் மேலை நாடுகளில் பரவலாகக் காணமுடியும். அங்கு அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் வருகின்றன. டிசைனர் விந்தணு, டிசைனர் பேபி போன்ற மாய்மால வார்த்தைகள் அங்கு பிரபலம். பிறக்கப் போகும் உங்களுக்கான குழந்தைகளை உங்கள் விருப்பப்படி டிசைன் செய்து கொள்ள வேண்டுமா? நல்ல அறிவுடன், பச்சை நிறக்கண்களுடன், அழகான முடியுடன், பளிச்சென்ற நிறத்துடன், உயரமாக வேண்டுமா ! இது போன்ற சொற்களைத் தாங்கிய விளம்பரங்களும் சர்வ சாதாரணமே.

ஆனால் நமக்கு இது போன்ற விளம்பரங்கள்  வருவது புதியதாயினும் இலை மறை காயாக அத்தகைய விழுமியங்கள் நம் சமூகத்தில் காலங்காலமாகவே இருந்து வருகின்றன. வெகு நாட்கள் மூடியுள்ள முகத்திரையால் பயனேதும் இல்லை என்பதால் தனது போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளது அவ்வளவே! தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியினூடாக இது போன்ற செயல்கள் தவறானதல்ல என்றும், அது தனிமனிதர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது என்றும் நிலைநிறுத்தப்படுகிறது.

ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வுள்ள, அசமத்துவப் படிநிலைகளைக் கொண்ட இச்சமூகம் இது போன்ற வீரியமிக்க ஒட்டுரக டிசைனர் குழந்தைகளை உருவாக்கும் பட்சத்தில் (உயிரித் தொழில் நுட்பம் மூலமாக சாத்தியமே என்கிறார்கள் அறிஞர்கள்) அது இச்சமூகத்தில் தனக்கான முரண்பாடுகளை அதிகமாக ஏற்படுத்திக்கொள்ளுமே ஒழிய அதனால் வேறெதுவும் பயனில்லை. இது போன்ற டிசைனர் குழந்தைகள் சமூக, பொருளாதார மற்றும் அறிவுத்தளங்களில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டு அசமத்துவத்தின் புதிய படிநிலையில் விட்டு விடும் அபாயமும் உள்ளது. ஆனால் இங்கு விந்தை தானமாகக் கொடுப்பவரின் பின்புலம் பற்றி அறிய சட்டம் இடம் கொடுக்காது என்ற போதிலும் நிலவுகின்ற சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தாங்கள் விரும்பும் டிசைனர் விந்துவைப் பெற சாத்தியம் இருக்கவே செய்கிறது. டிசைனர் குழந்தைகள் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அப்பெற்றோர்களால், குழந்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதற்கான முகாந்திரங்களும் உள்ளது.

மரபணு தொழில்நுட்பம் (Genetic Engineering)  இல்லாமல் இயற்கையாகவே டிசைனர் விந்துக்களைக் கொண்டுள்ளதாகக் கற்பிக்கப்படும் பார்ப்பன ஐ.ஐ.டியினர், பொலிகாளைகளாக மாறும்பட்சத்தில், வீரியமற்ற இம்’மலட்டு’ச்சமூகம் மேலும் மலடாகி போகுமே அன்றி அறிவார்ந்த சமூகமாக மலர முடியாது.

அறிவும், திறனும், சமூக பிரக்ஞையும் சமூக நடைமுறைகளில்தான் மலருமே அன்றி டிசைனர் விந்துவால் உருவாக்க இயலாது. உடல் ஆரோக்கியத்தின் மேம்பட்ட தன்மையை வேண்டுமானால் டிசைனர் விந்து கொண்டு வரலாம். ஆனால் சமூக ஆரோக்கியத்தை இது வழங்கி விடாது. மூதாதையரின் உடற்கூறுகளைத்தான் மரபணு தாங்கி வருகிறதே அன்றி அவர்களின் சமூக வரலாற்று உணர்வை அல்ல. அது வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் வடிக்கப்படும் ஒன்று.

–    குட்டக்கொழப்பி

40 மறுமொழிகள்

 1. ஐடிஐ படித்து, அப்புறம் கேம்பஸ் இன்டர்வியூ செலக்ட் ஆகி, வேலை செய்து, சம்பாதித்து…..

  அதைவிட ஸ்ரெயிட் ஃபார்வெர்ட்…

  இந்தத் தம்பதியர் ஒரு ஓட்டல் முதலாளியாகிவிட ஒரு சரவணபவன் அண்ணாச்சி விந்துவைக் கோரலாம்.
  அல்லது
  குறுக்கு வழியில் கோடி கோடியாகச் சம்பாதித்த ‘டூப்ளிகேட் ஸ்டேம்ப்’ புகழ் டெல்கியின் விந்துவை, எயிட்ஸ் இருந்தாலும் பரவாயில்லைஎன்று, கோரலாம்.
  அல்லது
  அகிலவுலக புகழ் சினிமா டைரக்டராகிவிட, கிழவனாயிருந்தாலும் பரவாயில்லையென்று மணிரத்தினத்தின் விந்தைக்கோரலாம்.
  அல்லது
  நல்ல மக்களைக் கவரும் முக்கியஸ்தராகிவிட கலாமின் விந்துவைக் கோரலாம்
  அல்லது கொஞ்சம் செலவு ஆனாலும் பரவாயில்லை என்றால் மேற்கூறிய மொத்தப்பேரிடமும் விந்துவை வாங்கி ஒரு குலுக்கு குலுக்கி, அனைத்தும் கலந்த பேராற்றல் பெற்ற ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்!!

 2. /தேர்வுகளில் தான் விழுங்கியதைத் துப்பும் வேலையை கச்சிதமாகச் செய்வதால் இடமும் கிடைத்துவிடுகிறது/

  எனக்கு தெரிந்த வரை செரித்துத் துப்பாமல் IIT -JEE தேர்வுகளில் தேறமுடியாது

 3. மாட்டு பண்ணைகளில் உறைந்த விந்து ஊசி மூலம் செலுத்தப்படுவது பசு நிறைய கறக்க வேண்டும் என்ற வர்த்தக நோக்கிலன்றி வேறில்லை.ஐ ஐ டி யன் தான் ஒரிஜினல் ஆம்பிள்ளை என்று ஒரு ஐ ஐ டி பெண் கூட சொல்ல மாட்டாள்.அந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தால் வளர்ந்த பிறகு ஒரு ஐ ஐ டி மாப்பிள்ளையை தேடுவார்களா, இல்லை அவர்கள் தான் ஆண்மை முறுக்கோடு அலைகிறார்கள் என்று அவள் தான் காதலிப்பாளா?

  • ஆரோக்கியமான, கெட்ட பழக்கம் ஏதும் இல்லாத …… it is totally contradictory …. the advertiser considers drinking, smoking etc as bad habits …. but, semen cannot be extracted without masturbation …. then, this also, according to their dictionary and values, is a bad habit 😉 Then how you are going to get it !!!!!! lol !!! Stupids
   (I got this comment from the above link)

  • பத்ரி அந்தப்பதிவு எழுதி ஒரு மாமாங்கம் ஆச்சு. வினவு ரொம்ப லேட்…இருந்தாலும் தலைப்பைப் பார்த்தீங்களா? சும்மா வினவு பானியில ‘மாட்டடி’ தலைப்பு இல்ல?!

 4. // ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது, அவர்கள் நன்றாகப் படிக்க கூடிய நல் விழுமியங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதைத் தாண்டி பெரும்பாலானவர்கள் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படி மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. //

  பார்ப்பனராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதையும் நிபந்தனையாகச் சேர்க்க இவர்களுக்கு என்ன தயக்கம் இருக்கக்கூடும்?!

  IIT-மாணவர்கள் எனக் குறிப்பாகக் கேட்டிருப்பதால், உடல் திறன், கலை நாட்டம், இவைகளைப் பற்றி விளம்பரதாரர்கள் அதிகம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அறிவும், திறமையும் ஈடுபாடு, முயற்சி, பயிற்சி இவற்றின் விளைவு என்பதை அறியாத இந்த அறிவிலிகளுக்கு மலட்டுத்தனம் கீழே மட்டுமில்லை மேலே மூளையிலும் உள்ளது.

  • //பார்ப்பனராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதையும் நிபந்தனையாகச் சேர்க்க இவர்களுக்கு என்ன தயக்கம் இருக்கக்கூடும்//

   விந்து கேட்டவங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் இருப்பதாகவே தோன்றுகிறது…..இல்லைஎன்றால் 90% பாப்பானுங்க படிக்குற எடத்துல எதுக்கு வ்ந்து கேக்கணும்.வேற நல்லா படிக்குறவனா பாத்து இவங்களே ஆஸ்பத்திரிக்கு கூட்டுட்டு போயிருக்கலாமே…..

   இல்ல பப்ளிக்கா அப்டி கேட்டா ஒத கெடக்கும்னு தெரிஞ்சிருக்கும் அதான்.

   • there are very few pappans studying in any IIT now on a percentage terms,when i say pappan,i only refer to anyone belonging to parents referring themselves to the brahmin community,most are OBCs.

 5. ஐஐடி-ல படிக்கற பசங்க எல்லாம் எப்படி பொறந்தாங்க? அவங்க அப்பா அம்மா எல்லாம் ஐஐடி மேதைகளா என்ன? கொஞ்சம் யோசிச்சு பாத்திருந்தா இந்த மாதிரி விளம்பரம் எல்லாம் குடுத்திருக்க மாட்டாங்க. அறிவிலிகள்!

 6. எனக்கென்னமோ சும்மா ஒருவித சமூகவியல் ஆய்வுக்காக, என்ன எதிர்வினைகள் வருது என்று பார்ப்பதற்காக யாராவது போலியாக இப்படி விளம்பரத்தைத் தந்திருப்பார்களோ என்று தோன்றுகிறது! ஏன், ஐ.ஐ.டி.யையும், பார்ப்பனியத்தையும் சாட ஒரு வாய்ப்புக்கிடைக்குமே என்று வினவுவே செய்திருக்கலாம்!

  இன்னொரு சந்தேகம் – இரத்தத்தைப் பணத்துக்கு விற்பது சட்ட விரோதம். விந்து தானத்துக்குப் பணம் பெறுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளதா? (இதில் அனானிமிட்டி காக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இரத்தம் போல, பெறுபவர் இன்னார் என்று தெரிந்து கொடுப்பது சட்டப்படி சாத்தியமில்லை.)

  • இல்லிங்க சரவணண், இப்படி ஒண்ணு நடந்தா வினவு என்ன எழுதுவாங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் மேலிட நீங்களே அந்த விளம்பரத்தை கொடுத்திருக்கனும்னு நான் நினைக்கிறேன், ரெஸ்பான்ஸ் எப்படி?

 7. பெர்னாட்ஷா மீது விருப்பம் கொண்ட ஒரு அழகிய பெண்மணி அவள் ஒருநாள் அவரிடம் வந்து, “நான் பேரழகி. நீங்கள் அறிவுச் சுரங்கம். நாமிருவரும் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை என்னைப் போல் அழகாகவும், தங்களைப் போல அறிவாளியாகவும் இருக்கும்” என்றாள்.

  பெர்னாட்ஷா உடனே சொன்னார், “சரி… என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்டதாகக் குழந்தை பிறந்தால் என்னாவது?” என்றார்.

  அந்தப் பெண்மணி தலைகுனிந்து நின்றாள்.
  http://www.muthukamalam.com/muthukamalam_sirikka%20sirikka55.htm

 8. ஏழாவது அறிவு திரைப்படத்தில் போதி தர்மனின் மரபணு கூறுகளை அவனது வம்ச வழிப்பட்டவனுக்குள் புகுத்தினால் அவனது நோக்கு வர்மம் முதலிய கண்ட கருமாந்திரங்களும் 20 நூற்றாண்டு புது தர்மனுக்குள் வந்து விடும் என்று கதை எழுதியுள்ளனர். இதைப் பார்த்துதான் இந்த மலட்டு மூடர்கள் இப்படியொரு விளம்பரம் செய்தனரோ. அப்படி பெற்றுக்கொள்ள இந்திய திருநாட்டு சட்டங்களில் இடமில்லை. (இவர்களுக்கு ஒரு அட்வைஸ். இவர்கள் விரும்பியது போல் பிள்ளை வேண்டும் என்றால் நேரடியாகவே கழுத்துக்கும் இடுப்புக்கும் நடுவே நூல் சுற்றிக்கொண்டு திரிபவர்களை வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு தண்ணியெல்லாம் கொடுத்து புருசனை விளக்கு பிடிக்க வைத்து இயற்க்கை முறையிலேயே பெற்றுக்கொள்ளலாமே. இந்து மத சட்டங்கள் அதை அனுமதிக்கின்றன.உம். ராமனும் அவன் தம்பிகளும் பிறந்த கதை, தருமனும் அவன் தம்பிகளும் பிறந்த கதை)

 9. // ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது,//அவர்கள் விருப்பம்.இதில் மூக்கை நுழைக்க என்ன இருக்கிறது? சமூகத்திற்கு எந்த பாபதிப்பும் இல்லையே!!வினவு கிடைத்த அவல்!!!!!

 10. //ஆகவே இஷ்டத்துக்கு மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிற சாதியினரை மட்டுமல்ல, பிற மாநிலத்தவரை, பிற நாட்டவரை! கலப்புக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
  இது இப்படி இருக்க, குறிப்பிட்ட அந்த தம்பதியினருக்கு தமக்கு விருப்பமான விந்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உள்ளதா, என்றால் நிச்சயம் உண்டு. ஆனால் அதனால் அவர்கள் விரும்பும் விளைவுகள் ஏற்படுமா என்றால் அழுத்தம்திருத்தமாகப் பதில் சொல்வது கடினம்.

  நடக்கும் அல்லது நடக்காது!/// nanri BADRI!!!

  • சரி சரி….எல்லாம் இருக்கட்டும்…பத்ரி தன்னோட பொண்ண ஒரு பறயனுக்கு கட்டிவெக்க முடியுமானு கேளுங்க அண்ணாத்தே……

 11. சில சமயங்களில் எனக்கு இருக்கும் சிறிய அறிவும் குழம்பிப்போய்விடுகிறது இது மாதிரியான விளம்பரங்களைப் படிக்கும்போது. இதை முற்போக்கான செயல் என எடுத்துக்கொள்வதா? இதிகாசக் கதைகளை நிகழ்த்திப் பார்க்க விரும்புகிறார்களா? என்னமோ போங்கள், ஒன்றுமே புரியமாட்டேங்கிறது.

 12. “சிந்தனை, செயல் மற்றும் வாழ்வு போன்றவை அவரவர் வாழும் புறச்சூழலைப் பொருத்தே அமையும். அதன் தாக்கமே ஒருவர் பகத்சிங்காக மாறுகிறாரா அல்லது எட்டப்பனாக மாறுகிறாரா என்பதை முடிவு செய்யும். அது ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் மரபணுக்களைப் பொருத்து அமைய எள்ளளவும் வாய்ப்பில்லை.

  “மரபணுக்கள் மூதாதையரின் உடல் கூறுகளின் தன்மைகளான நிறம், கண்ணின் கருவிழி, உடலின் வாகு போன்றவற்றைத் தான் கடத்தும். அன்றி, கருத்து, சிந்தனைக் கூறுகளை அல்ல.

  இந்த இரு உண்மைகளையும் நாம் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளை உற்று நோக்கினாலே விளங்கும்.

  நம்மிடையே உற்று நோக்குதல் இல்லாததே பல அபத்தமான நம்பிக்கைகளுக்கு அடிப்படை.

  விளம்பரம் கேவலமானதாக இருந்தாலும் இந்த விளம்பரமும் வினவின் கட்டுரையும் நம்முடைய சிந்தனையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது.

 13. ஒரெ குடும்பதை சேர்ந்த அனைவருமா ஐஐடி யில் சேர்ந்து விடுகிரார்கல்

 14. பந்தியில் உக்காந்தாச்சு -இலையும் போட்டாச்சு! – சாப்பாடு போட்டால் தானே விந்தணு தானம் போட்டியில் கலந்துகொள்ள முடியும் தானே???

  இந்தியாவின் எந்த மூலையிலும் ஒதுக்கீடு யில்லாமல் இல்லை?- ஆனாலும் ஆதிக்கம் அப்படியே தான் உள்ளது!!! காரணம் என்ன???

  Pl c link which is self explanatory:
  http://obcreservation.net/ver2/reservation-mainmenu-9/statictics-mainmenu-101/obc-job-status-mainmenu-79.html

  பந்தியில் உக்காந்தாச்சு -இலையும் போட்டாச்சு! – சாப்பாடு போட்டால் தானே???ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்- இதுக்கு ஒரு வைக்கம் போராட்டம் வரவேண்டுமோ

 15. அடுத்தவர் விந்துவில் தான் குழந்தை என்றாகி விட்ட பின்… சரி ஒரு நல்ல நிறமான அறிவான குழந்தைக்கு ஆசைப்படுவதில் தவறில்லை ,ஆனால் அந்த ஐ ஐ டி மாணவருக்கு அமெரிக்காவில் சம்பளம் கொடுக்கப்போகிறவர் ஒரு கருப்பராக இருந்தாலும் அதை அவர் இங்கே வந்து சொல்லாமல் இருக்க வேண்டும்.அப்புறம் கறுப்பர் விந்துவிற்கு வந்துவிடும் டிமாண்டு.

 16. Needed: An IITian sperm donor!
  Renu Singh, TNN Jan 12, 2012, 11.24AM IST
  Tags:
  sperm|IIT|fertility|family

  (Needed: An IITian sperm donor!)
  My wife and I are looking for a suitable sperm donor for fresh In Vitro procedure very soon! Ideal candidate should be IIT student, healthy, no bad habits, tall and fair if possible but will consider the right donor regardless of looks etc. Time is of the essence, so please call asap. Compensation twenty thousand rupees cash. Call or email asap. Authentic ad, we need donor within two weeks most likely. Please help us start a family filled with love and prosperity. References will be required and checked (sic).

  The above is the text given in an advertisement of a website that has created a stir nationally within the student community. While doctors admit that the childless couple has unofficially expressed the desire to have high IQ guys as sperm donors, this is the first time that they’ve come across such an advertisement. As for students’ reactions, they range from bizarre to being okay with this desire of the parents-to-be.

  Says Dr Prateek Tambe from a Mumbai-based fertility and IVF centre, “I’ve come across cases where people have specially mentioned that they want sperm donors with IIT or IIM background. Generally, people feel that doing so will ensure an intelligent baby! Demands are high for foreign donors as well. But up until now, such requests were made within the four walls of a doctor’s chamber. Placing an ad is something new.”

  Sunny Puruswani, a third year B Tech student from IIT Chennai, feels the couple from Chennai has been misguided by a fraud doctor. Says Rohit Khattar, a third year B Tech student from IIT Bhubaneswar, “There is nothing wrong if a person can be of help to a couple. Surrogacy or IVF is neither a new concept nor is it legally unacceptable. What’s the harm if an IITian is approached for this? But if someone comes to me with such an offer, I will make him understand that just being an IITian doesn’t guarantee anything about a person’s ability or aptitude. It requires a lot more to be a perfect human being.”

  Prateek Kishore, a second year student of IIT Kharagpur, feels it’s futile to debate this issue. “I’d say, it makes no sense to talk about this issue at all. To each his own. A person from an arts background can have a higher IQ compared to any IITian,” Prateek insists.

  Vivek Agarwal, a final year B.Tech. student from IIT Kanpur, wouldn’t oblige if such a request came by. “That’s because this is all about donating a part of my body. There is an emotional connect involved in it. I don’t think, this will be acceptable to society at large. Nobody is born an Einstein. A person’s dedication and hard work decide his fate. Success is not hereditary that gets transmitted from one generation to another,” Vivek explains.
  Meanwhile, Monish Sipani, a third year B.Tech. student, IIT Bombay, says “I too have come across this classified ad circulating in social networking sites. Everybody is criticizing the whole purpose of trying to rope in an IITian. Personally, I don’t support this. I don’t understand the mindset of people who have come up with such an ad. Both scientifically and biologically, it is impossible to expect a child to have all traits of his parents.”

  Ujjawal Kalra, a third year student from IIT Guwahati, finds this a funny situation. “I don’t know how this couple came up with this brilliant idea of a child inheriting the IQ of the parents. A child can never be expected to be the carbon copy of his parents. It’s ultimately his hard work that’ll decide his success.”

  Just targeting an IIT or IIM student is like undermining the intelligence of people from other fields. Is there any guarantee that a couple from IIT will have a child who will be talented enough to join the same institute?

  – Vivek Agarwal, a final year B.Tech. student from IIT Kanpur

  I’d say, it’s a personal choice. But judging a person based on his profession or academic record is wrong. I can’t accept that under any circumstances.

  – Prateek Kishore, a second year student of IIT Kharagpur

  I am appalled that someone could come up with this idea. Why don’t people understand that success doesn’t come only if a person is born to talented parents?

  – Ujjawal Kalra, a third year student from IIT Guwahati

 17. அப்துல் கலாம் கூட ஐஐடி மாணவர்தான். அவர் செயல் திறனையெல்லாம் பார்த்த பின்புமா? இப்படி எல்லாம் விளம்பரம் வருது.போங்கப்பா தல சுத்துது.

 18. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலேஅது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளைப்பினிலே

 19. சுத்த ரத்த ஆரியர்கள் இந்தியாவின் இமயமலைப் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் அதற்காக ஹிட்லர் கூட கலப்பு இல்லாத ஆரிய மதத்தைத் தேடி இன்கு ஆள் அனுப்பினானாம்……விந்து வேண்டுபவர்கள் இவர்களைத் தேடிப் புடிக்கலாமே….

 20. இது இன்னொரு வகையான விபசாரம் என கருதுவதர்கு வாய்ப்பு உன்டு

 21. I.Q இல்லாமல் யாரும் வெற்றி பெற்முடியாது. ஆனால் I.Q. பார்ப்பானுக்கு மட்டும் சொந்தம் கிடையாது .வேதம் இதிகாசம் பொய் என்று நிரூபிக்கும் அறிவியலின் வளர்ச்சியை மட்டும் ஏத்துக்குவான். தன்னுடைய ஜாதி ஆதிக்க வெறியை மட்டும் விடமாட்டார்கள்.

 22. // தமிழக அரசின் ஒளவையார் விருதைப் பெற உள்ள திருமதி ஒய்.ஜி.பி. புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார். பத்மா சேஷாத்ரி பால பவன் கல்வி குழுமத்தை நிறுவி, அதன் இயக்குநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்.
  சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் இவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இதற்காக இவருக்கு 2010-ல் “பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப் பட்டது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இவரது மகன் ஆவார்.//

  தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை உல்டாவாக கடைபிடித்ததினால் சிறந்த கல்வியாளர் விருது பெறுகிறாரோ??? அரசு படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா?

  அனைத்து சாதி மக்களை சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்!

  ஹி..ஹி..ஹி.. நினைவில் கொள்ளவும் அவர்கள் ஊருடன் கூடி வீட்டில் வாழ்கிறார்கள். மேலும் இதை சமன் செய்யத் தானே தானே ராமர் பாலத்தை பாதுகாக்க முயற்சி எடுக்கிறோம்???

 23. விந்து மட்டும் கேட்பது அராஜகம். போசாம ஒரு நைட்டு…… எத்தனை ஐஐடி மாணவங்க கியுவில நிற்பாங்க….காமடி பண்ணாதீங்கப்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க