30.07.2023

மும்பை ஐஐடியில் நவீன தீண்டாமை!

கண்டன அறிக்கை!

மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள உணவகத்தில் சைவம் உண்பவர்களுக்கு மட்டுமே உட்கார அனுமதி (VEGETERIAN ONLY ARE ALLOWED TO SIT HERE) என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

பெருநகரங்களில் இருக்கும் பார்ப்பனர்களின் வீடுகளின் வாடகைக்கான விளம்பர அட்டையில் (TOLET veg only) சைவம் உண்பவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என்று குறிப்பிட்டு பலகை வைத்திருப்பார்கள். இது அவர்கள் கடைப்பிடிக்கும் ஒரு தீண்டாமை. அதேபோல், மும்மை ஐஐடி விளம்பர அட்டை வைத்திருக்கிறது. இது மும்மை ஐஐடி மாணவர்கள் மீது ஏவும் ஓர் நவீன தீண்டாமை.

மும்மை ஐஐடி உணவகத்தில் சைவ உணவு உண்ணும் மாணவர்கள் மட்டுமே அமர வேண்டுமாம்! அசைவ உணவு உண்ணும் மாணவர்கள் அமரக் கூடாதாம்! சைவ – அசைவம் என இரண்டு தட்டுகளாக பிரித்து வைத்திருக்கிறார்களாம்! சமையல் அறையிலும் கூட சைவம் – அசைவம் என தனித் தனி அடுப்புகள், தனித் தனி பாத்திரங்கள் என பிரித்து வைத்திருக்கிறார்களாம். எதற்கென்றே விதிமுறைகள் இருக்கிறதாம். அதைக் கடைப்பிடிக்காத மாணவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுமாம்!


படிக்க: எஸ்.எப்.ஐ தலைவர் அரவிந்த் சாமி அவமதிப்பு – ஆளுநர் ரவியின் எடுபிடி போலீசுத்துறையை கண்டிக்கிறோம்! || புமாஇமு


உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு சமத்துவத்தையும் பகுத்தறிவையும் போதிக்க வேண்டும்.. ஆனால் மும்பை ஐஐடியோ மாணவர்களுக்கு பார்ப்பனியத்தை போதிக்கிறது, நடைமுறை படுத்துகிறது. மீறினால் அபராதம் என்கிறது. சமீபத்தில் வந்த தரவுகள்  கூட ஐஐடிகளின் இந்த பார்ப்பனிய ஒடுக்கு முறையை மெய்ப்பிக்கிறது. அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற ஐஐடிக்களில் பயின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 25,583 பேர்  படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். 98 பேர் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் ஒரு அங்கம்தான் மும்பை ஐஐடி.

மும்பை ஐஐடியின் இந்த நவீன தீண்டாமையை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

மும்பை ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பார்ப்பனிய நவீன தீண்டாமையை முறியடிக்கக் மாணவர் படையாய் களமிறங்குவோம்.

பேராசிரியர்கள் – கல்வியாளர்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் இணைந்த
கூட்டு நிர்வாகமே சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்து ஜனநாயகத்தை உறுதி செய்யும்


மாநில ஒருங்கிணைப்புக்குழு,
பு.மா.இ.மு,
தமிழ்நாடு.

9444836642

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க