Monday, August 15, 2022
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் பி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை!

பி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை!

-

செய்தி -73

மரபீனிந்த வருடம் அமெரிக்க நுகர்வோர் சந்தையில் மரபினி மாற்றப்பட்ட புதிய ரக மக்காச்சோளம் விற்பனைக்கு வந்துள்ளது.  மான்சாண்டோவின் தயாரிப்பான இதை, அமெரிக்காவைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனங்களான Whole Foods, Trader Joe’s , General Mills போன்றவை நுகர்வோர் நலக் குழுக்களின்  எதிர்ப்பைத் தொடர்ந்து தங்கள் கடைகளில் விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்து அறிவித்துள்ளன.

ஆனால், உலகின் சில்லறை வர்த்தகத்தின் மிகப்பெரும் பகாசுர நிறுவனமான வால் மார்ட், நுகர்வோர் குழுக்கள் மற்றும் மக்களின் எதிர்ப்புகளை மீறி மரபனு மாற்றம் செய்யப்பட்ட உணவுபொருட்கள் தன் கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று திமிராக அறிவித்துள்ளது. ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மரபினி மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பி.டி ரகத்தை சேர்ந்தது என்று எந்தவித முத்திரையும் இட்டு விற்பனை செய்யப்படுவதில்லை. நுகர்வோர் நலம் மக்கள் உரிமை என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே உணவு பொருட்களை அவை மரபணு மாற்றம் செய்யப்பட்டவையா இல்லையா என்று வடிக்கையாளர் அறிந்துகொள்வது கடினம் என்பது முக்கியமானது.

பல்வேறு ஆய்வு முடிவுகள் பி.டி உணவு உட்கொண்டால் அது உடல் நல பிரச்சனையை மட்டுமல்ல மரபணு ரீதியான பிரச்ச்னையையும் ஏற்படுத்தும் என்று சொல்கின்றன. 2009-ம் ஆண்டு சர்வதேச உயிரியல் இதழில் வெளிவந்த ஆய்வு முடிவுகள், பி.டி உணவு பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்ட எலிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தியது உறுதி செய்தது. 2011-ல் கனடாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பி.டி உணவுப்பொருட்களை உட்கொண்டு கருத்தரித்த பெண்களின் ரத்தத்திலும், தொப்புள் கொடியிலும் 80 சதவீதத்திற்கும் மேல் பி.டி. வேதியல் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பி.டி உணவுப்பொருட்கள் நுகர்வோருடைய உடல் நலனுக்கு தீங்கை ஏற்படுத்தாது, அதை விற்பனை செய்யலாம் என்பதற்கு எந்த வித அறிவியல் ஆய்வு முடிவுகளும் ஆதாரமாக இல்லை. சுயாதீனமான முறையில் நீண்ட கால உடல் நல, சுகாதார ஆய்வும் நடத்தப்படவில்லை. மான்சாண்டோவின் ’ஆய்வு முடிவுகளையே இவை பெருமளவு சார்ந்திருக்கின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை விற்பதற்கு கொள்ளை லாபம் என்கிற பெருளாதார காரணம் தவிர வேறு எந்த காரணமும் இல்லை.

அரசும் பன்னாட்டு கம்பெனிகளும் சொல்வது மட்டுமே உண்மை, அதை சந்தேகிக்கவோ எதிர்த்து கேள்வி கேட்கவோ எந்த உரிமையும் வாடிக்கையாளருக்கு அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி இல்லை. ஓரளவுக்கு நுகர்வோர் நலன் சார்ந்த சட்டங்களும் நடைமுறைகளும் கொண்ட அமெரிக்காவிலேயே மான்சாண்டோ, வால்மார்ட் போன்ற பகாசூர நிறுவனங்கள் இந்தளவுக்கு சட்டாம் பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளுமென்றால் பன்னாட்டு மூலதனத்தின் காலில் விழுந்து கிடக்கும் இந்தியாவில் எப்படி நடந்து கொள்ளும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்ற ஆண்டு இந்திய அரசு பி.டி கத்திரிக்காய், அதன் தீமை பற்றி பிரச்சாரம் செய்தால் ஓராண்டு சிறை, ஒரு லட்சம் அபராதம் என்று நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவந்தது. இதே அரசு வால்மார்ட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. மான்சாண்டோ, வால்மார்ட், இந்திய அரசு இவை ஒரே புள்ளியில் சந்திப்பது தற்செயலான ஒற்றுமை அல்ல என்று சொல்லவும் வேண்டுமா?

நுகர்வோர் பாதுகாப்பு என்பது பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்கான பாதுகாப்பு. அறிவியல் ஆய்வு முடிவுகள், அவை எந்த பன்னாட்டு கம்பெனியால் எந்த நலனுக்காக வெளியிடுகிறது என்பதை பொறுத்தே ஏற்றுக்கொள்ளப்படும். மக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஆய்வுகள், ஆதாரங்கள் இனி  செல்லாது!

இதையும் படிக்கலாம்

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. என்னே! பி டி கத்தரிக்காய் தீமை பற்றி பேசினால் ஒரு வருட சிறையா? ஒரு லட்சம் ரூபாய் அபராதமா? சொல்லவே இல்ல! அரசாங்கம் யாருக்காக நடக்கிறது மக்களுக்கா இல்லை கார்பரேட் கம்பனிகளுக்க?

  2. இந்தியாவில் GM உணவுப் பொருட்களுக்கு லேபிள் கட்டாயம் என்றுதான் விதி வருகிறது-ஜனவரி 2013 முதல்.அதாவது தெரியுமா.

  3. மரபீனி மாற்றுப் பயிர்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை என்கிற நாடாளுமன்ற வேளாண் நிலைக்குழுவின் அறிக்கை….. இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சம், பி.டி கத்திரிக்காயை அனுமதித்ததற்கு, மத்திய அமைச்சர் ஒருவரும், வேளாண் தொழில்துறை சார்ந்த சில நிறுவனங்களும் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று வெளிப்படையான குற்றச்சாட்டை உச்சநீதின்றம் நியமித்த நிலைக்குழுத் தலைவர் வாசுதேவ் ஆச்சார்யா தெரிவித்திருப்பதுதான்.

    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=645580&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=தலையங்கம்: முளைக்காத விதைகள்!

  4. அனுகுண்டைவிட ஆபத்தானது மரபணு மாற்றம்! எந்ததுறையில் ஆனாலும் , மறபணு மாற்றம் போதிய எச்சரிக்கையின்றி அனுமதிக்கப்படல் ஆகாது! போபால் விஷ வாயு படிப்பினைக்கு பிற்காவது நாம் விழித்துக்கொள்ள வேண்டாமா? அயல்னாட்டு தொழில்நுட்பஙகள், இறக்குமதியாகும் அணுகழிவு நிறைந்த பொருட் கள், மருந்துகள் மீது கடுமையான கட்டுப்பாடு அவசியம்! மனசாட்சியுள்ள விஞ்ஞானிகள் பொதுநலம் கருதி உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும்!ஏகாதிபத்திய சேவையில் மூழ்கியிருக்கும் அரசும், அரசு சார்ந்த துறைகளும் நெறி பிறள கூடும்! மற்ற வேற்றுமைகளை மறந்து மக்கள் சக்தி ஒன்றுபட வேண்டும்!

  5. //பல்வேறு ஆய்வு முடிவுகள் பி.டி உணவு உட்கொண்டால் அது உடல் நல பிரச்சனையை மட்டுமல்ல மரபணு ரீதியான பிரச்ச்னையையும் ஏற்படுத்தும் என்று சொல்கின்றன. 2009-ம் ஆண்டு சர்வதேச உயிரியல் இதழில் வெளிவந்த ஆய்வு முடிவுகள், பி.டி உணவு பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்ட எலிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தியது உறுதி செய்தது. 2011-ல் கனடாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பி.டி உணவுப்பொருட்களை உட்கொண்டு கருத்தரித்த பெண்களின் ரத்தத்திலும், தொப்புள் கொடியிலும் 80 சதவீதத்திற்கும் மேல் பி.டி. வேதியல் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.//

    proper citation needed. please provide link

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க