Saturday, February 4, 2023
முகப்புசெய்திசகாயத்தின் இறுதி ஊர்வலத்தை தடுக்காதே! ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

சகாயத்தின் இறுதி ஊர்வலத்தை தடுக்காதே! ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

-

சகாயம்
சகாயம், சடலமாக

சகாயத்தின் உடலை ஊர்வலமாக கொண்டு செல்வோம் என்று இடிந்தகரை பெண்களும், மீனவ இளைஞர்களும், ம.உ.பா மைய வழக்குரைஞர்களும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஊர்வலமாக கொண்டு சென்றால் வழியில் அணு உலை ஆதரவாளர்கள் தாக்கக் கூடும் என்றும், அதிலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் ஊர்வலம் வேண்டாம் என்று கூறுவதாகவும் அறிவுரை கூறுகிறார்கள் போலீசு அதிகாரிகள்.

தங்கள் அறிவுரையை கேட்க மறுத்தால், கண்ணீர் புகை குண்டுகள் மூலம் வேறு விதமான அறிவுரையை அவர்கள் தொடங்க கூடும். போலீசின் அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் கீழ்க்கண்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

கடலோரக் காவற்படை விமானத்தால் கொல்லப்பட்ட
மீனவர் சகாயத்துக்கு அஞ்சலி!

கடற்படை விமான அதிகாரிகளை
கொலை வழக்கில் கைது செய்!

அணு உலை இருக்கும் வரை
மீனவர் படுகொலை தொடரும்!
கடற்படை மிரட்டலை முறியடிப்போம்!
அணு உலையை மூடுவோம்!

தமிழக மீனவர்ளை வேட்டையாட
அந்தப் பக்கம் – சிங்கள இராணுவம்!
இந்தப் பக்கம் – இந்தியக் கடற்படை!

அமைதியாகப் போராடிய மக்கள் மீது விமானத்தை பறக்கவிட்டு, அநீதியான முறையில் ஒரு மீனவரைக் கொன்ற அரசு, இப்போது அவரது உடலைக் கண்டும் அஞ்சுகிறது.

அணு உலைக்கு எதிரான போராட்டத்தினை இறந்த பின்னரும் முன்னெடுத்துச் செல்கிறார் சகாயம். போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

  • இலங்கை இரானுவம் கொன்ராலும்,இந்திய இரானுவம் கொன்ராலும் பொழப்பு ஓடனும் என நினைக்கும் ஒரு இனம், இந்த உலகில் தமிழன் மட்டுமே….

   சொரனை கெட்ட பையா…

  • ஆடு நனையுதேனு ஓநாய் அழுகுது… அதுசரி உங்க பிராண்டு கலர் கும்பல் அரசியல் செய்வதற்கே நரபலி கேட்குதே, அவங்களுக்கும் ஓசில் யோஜனை சொல்றது….

 1. ஓ!
  அரசியல் செய்வது உங்களுக்கு வேதனையா? ஆனா, உங்க அரசு சாதாரண மக்களை புழுவை நசுக்குவதுபோல கொல்றது செத்த பிணத்தைக் கூட ஏதோ குப்பை மாதிரி தூக்கி கடாசுவதும் ஐ(பை)யாவுக்கு வேதனையை அளிக்கவில்லையோ!?!?! பேஷ்! பேஷ்!

  • சோக்கு,

   சகாயம் இறந்து போனதிலேயே பல விதமான வதந்திகள் உள்ளன…..அதில் உங்களுக்கு ஏதுவான வதந்தியீனை கெட்டியாகப்பிடித்திக்கொண்டு கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள்….ஒரு கண்காணிப்பு விமானம் தாழப்பறந்ததினால் மரிக்கும் அளவிற்கு பலவீனமனவராக சகாயம் தெரியவில்லை….அது மட்டும் இல்லாது அவ்வளவு கூட்டத்தில் அவர் மட்டும் மரிக்கும் வாய்ப்பும் இல்லை…அவர் தாழப்பறந்த விமானத்தைத்தொடுகிறேன் என்று தவ்விக்குதிது உயிர் விட்டிருக்கிறார்….வினவே முதல் கட்டுரயில் ஒரு சந்தேகமாகவே அவர் மரணத்தினை செய்தியாக வெளியிட்டிருந்தது,ஆனால் கொஞசம் கொஞ்சமாக அது மத்திய அரசின் திட்டமிட்ட கொலை என பிரச்சாரம் செய்யத்தொடங்கிவீடது…இதுவே அவ்ர் மரண்ச்த்தின் மீது செய்யப்படும் அரசியல் தானே..

 2. அவர் சாதரணமாக இறந்தவர் அல்ல இந்த கூடங்குள மக்களின் வாழ்வுக்காக போராடிகொண்டிருந்த சமயத்தில் இறந்தவர் அந்த போராளியின் உடலை ஊர்வலமாய் எடுத்து போராடாமல் இருப்பதுதான் மாபெரும் துரோகம்.

 3. என்னாங்கடா பையாவும் கரிகுமாரும் இப்படி உருகுறானுங்க, போனவாரம்தானே இவங்க ரெண்டு பேரும் பேராடுற எல்லாத்தையும் சுட்டுக்கொல்லனும்னு கருவிக்கிட்டிருதாங்க.

  • கீழே க்க்க்க்கரி க்குமாரின் பின்னூட்டத்தைப் படிங்க, அவங்க நீலிக்கண்ணீரின் காரணம் புரியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க