Tuesday, September 27, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்

வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்

-

முன்னுரை:

emc21905-ம் ஆண்டு இன்றைய தேதியான ஏப்ரல் 11 அன்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற சிறப்பு சார்பியல் தத்துவத்தை வெளியிடுகிறார். அதை நினைவு கூர்ந்து இந்த ஆவணப்பட விளக்க கட்டுரையை வெளியிடுகிறோம். நெடிய இந்த கட்டுரை ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளை வரலாற்றுப் பார்வையோடு விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, கூடவே அதன் நெடிய பாதையில் அரசியலும், மக்கள் புரட்சிகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் எப்படி பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதையும் இங்கே புரிந்து கொள்ள முடியும். மதங்களையும், கடவுள்களையும் அருங்காட்சியகத்திற்கு மட்டும் அனுப்ப வேண்டிய அடையாளங்கள் என்பதை ஐன்ஸ்டீனது கண்டுபிடிப்புகள் நமக்கு வலியுறுத்துகின்றன. அறிவியலை கற்பது என்பது அரசியல் போராட்டம், மனித குல வரலாறு கற்பதோடு பிரிக்க முடியாத ஒன்று என இந்த ஆவணப்படம் எடுத்துக் கூறுகிறது. படியுங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்!

வினவு

___________

வீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? உண்மையில் இச்சமன்பாட்டின் பொருள் என்ன? அது எப்படி உருவானது? அது மனித வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்மில் வெகுசிலரே அறிந்திருக்கிறோம்.

நோவாவின் “ஐன்ஸ்டீனின் பெரும் சிந்தனை” என்ற ஆவணப்படம் பார்ப்பதற்கு எளியதாக தோன்றும் இந்த சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், கருதுகோள்கள் ஒரு வெற்றிடத்திலோ அல்லது ஒரு விஞ்ஞானியின் மூளைக்குள்ளிருந்து மட்டும்  உருவாக்கப்படுவதில்லை. மனிதகுலம் பல நூற்றாண்டு காலமாக திரட்டிய அறிவுச் செல்வத்தின் மீது நின்று கொண்டு அறிவியலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் அவை கட்டியெழுப்பபடுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

இளம் ஐன்ஸ்டீன்
இளம் ஐன்ஸ்டீன்

E=mc2 என்ற சமன்பாட்டை நினைக்கும் போது ஐன்ஸ்டீனை வெள்ளை முடியும் சுருக்கம் விழுந்த வயதான மனிதராக பலர் உருவகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இச்சமன்பாட்டை உருவாக்கிய போது ஐன்ஸ்டீன் வயோதிகர் இல்லை; துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.

அவருக்கு முன் இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கப் போராடிய, பலருடைய வேலையை கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து அவற்றைக் கொண்டு ஒரு கோட்பாட்டு பாய்ச்சலை செய்ததுதான் ஐன்ஸ்டீனின் மேதைமை. இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு பின்னாலும் சாதனை, தோல்வி, சண்டை, பகை, காதல், போட்டி, அரசியல் மற்றும் பழிவாங்கும் கதைகள் உள்ளன.

E = mc2 சமன்பாட்டின் கதை ஐன்ஸ்டீனுக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ஆற்றல் மாறும் கோட்பாடு கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது.

E – ஆற்றல்

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகள் ஆற்றலை அடிப்படையாக கொண்டு உலகை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கவில்லை. அவர்கள் காற்றின் சக்தி, கதவு மூடப்படும் விசை, மின்னலின் சக்தி இப்படி ஒவ்வொன்றையும் விசைகளாகவும், சக்திகளாகவும் தனித்தனித் தீவாக ஆய்ந்து வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை  ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனிமுதலானவை, தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை.

அக்காலகட்டத்தில் அறிவியல் என்பது மேன்மக்களுக்கான துறையாகவே இருந்தது. அவர்களுக்கே அறிவியல் கல்வி கற்கவும், ஆய்வுகள் நடத்தவும் வாய்ப்புகள் கிடைத்தது. ஒவ்வொரு சக்தி அல்லது விசையின் பின்னிருந்து இயக்கக் கூடிய, அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் இன்னும் அந்த மேன்மக்களிடையே உருவாகவில்லை. இது அறிவியலின் அன்றைய வரம்பு என்பதோடு கனவான்களின் புத்தார்வ தடைகளும் சேர்ந்த ஒன்று. கல்விக்கும், அறிவியலுக்கும் பிறப்பு காரணமாக அனுமதி மறுப்பில்லை என்ற மேலை நாடுகளிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் அவை வளராமல் சிக்குண்டிருந்தன எனலாம். இந்த பின்னணியில்தான் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் இயற்கையின் புதிர்களை புரிந்துகொள்ளும் உந்துதல், ஆற்றல் குறித்த அறிவியல் கோட்பாட்டை மாற்றியமைப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.

மைக்கேல் ஃபாரடே - 1842ல்
மைக்கேல் ஃபாரடே – 1842ல்

ஒரு இரும்புக் கொல்லரின் மகனான மைக்கேல் ஃபாரடே, புத்தகம் பைண்டிங் செய்யுமிடத்தில் பழகுநராக வேலை செய்து வருகிறார். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில் புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில் உழைக்கும் மக்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவர்கள் சிறுபட்டறைகளிலும், தொழிற்கூடங்களிலும் தொழில் பழகுனராக சேர்ந்து தொழில் கற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. ஃபாரடே பைண்டிங் தொழிலின் திறனை கற்றுக் கொண்டதோடு நில்லாமல், அவர் கைகளுக்கு வரும் எல்லா புத்தகங்களையும் படித்து சுயமாக கல்வி கற்கிறார்.

தனது வேலையை விட அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் அதிகம் கொண்டிருந்த ஃபாரடே, தனது சொற்ப வருமானம், ஓய்வு நேரம் அனைத்தையும் சுயகல்வி கற்பதிலும், இயற்கை விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதிலும் செலவிட்டார். அன்றைய சமூகத்தில் விஞ்ஞானிகள் நட்சத்திர அந்தஸ்து உடையவர்களாக மதிக்கப்பட்டதுடன் அவர்களை சந்திப்பதோ, அவர்களுடைய விரிவுரைகளுக்கு செல்வதோ சாதாரண மக்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்பாகவே இருந்தது. இளம் ஃபாரடேயின் உற்சாகத்தையும், பேரார்வத்தையும் கண்ட வாடிக்கையாளர் ஒருவர், பிரபுகுலத்தை சேர்ந்தவரும் அக்காலத்தைய மிகப்பிரபலமான வேதியியலாளருமான சர் ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்பதற்கு ஃபாரடேவுக்கு அனுமதிச்சீட்டு பெற்றுத் தருகிறார்.

ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்ட ஃபாரடே உற்சாகமடைந்து அவரை தனது ஆதர்ச நாயகனாக மதிக்க ஆரம்பிக்கிறார். ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளில் தான் எடுத்த குறிப்புகளை புத்தகமாக தொகுத்து அதை அவரை நேரில் சந்தித்து பரிசளிக்கிறார். கட்டுப்பாடுகள் மிகுந்த, அறிவுத் தேடலை முடக்கிப் போடும் மற்றும் சுயநலம் மிகுந்த வர்த்தக உலகிலிருந்து தான் விடுபட விரும்புவதாகவும், சுதந்திரமும், முற்போக்கானதும் தனது மனதிற்கினியதுமான அறிவியலுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும் கோரி டேவியின் உதவியாளராக சேர விண்ணப்பிக்கிறார். டேவி ஆரம்பத்தில் ஃபாரடேவை அவமானப்படுத்தி அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். பின்னர் ஆய்வகத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமுற்ற பிறகே தனது ஆய்வுகளில் உதவி செய்ய ஃபாரடேயை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

சர் ஹம்ப்ரி டேவி
சர் ஹம்ப்ரி டேவி

அக்காலத்தின் கவர்ச்சிகரமான அதிசயிக்கத்தக்க ஒன்றான மின்கலமும் மின்சக்தியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. விசித்திரமான மின்சக்தியை குறித்து அறிந்து கொள்ள அனைத்து விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு வந்த போதிலும் அதைப் பற்றி இன்னும் சரியாக மதிப்பிடப்பட்டிருக்கவில்லை.

1821-ல் டேனிஷ் (டென்மார்க்) ஆய்வாளர் மின்சாரம் பாயும் மின் கடத்தியின் அருகில் காந்த திசைகாட்டியை கொண்டு செல்லும் போது அதன் ஊசி செங்கோணத்தில் விலக்கப்படுவதை கண்டறிந்தார். மின்கடத்தியின் எந்த பக்கத்தில் வைத்தாலும் ஊசி செங்கோணத்தில் விலக்கப்பட்டது.

உயர்கல்வி கற்ற மேன்மக்களான அப்போதைய அறிவியலாளர்கள் மத்தியில், குழாயினுள் நீர் பாய்வதைப்போல் மின்கடத்தியினுள் மின்சாரம் பாய்வதாக கருத்து நிலவி வந்தது. அப்படித்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது என்று அவர்கள் ஃபாரடே போன்ற ‘தற்குறி’களுக்கு இடித்துரைக்கவும் செய்கின்றனர். ஆனால், ஃபாரடே மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது அதை சுற்றிலும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது எனும் கருத்தை முன்வைத்தார். அக்காந்தப்புலமே காந்த திசைகாட்டியின் ஊசியை விலக்குகிறது என்றும் விளக்கினார்.

அத்துடன், நிலை காந்தத்தின் அருகில் வைக்கப்படும் மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது, கடத்தியை சுற்றி உருவாகும் காந்தப்புலத்திற்கும், நிலை காந்தப்புலத்திற்கும் இடையேயான எதிர் வினை விலக்குவிசையை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார். இதுவே அந்நூற்றாண்டின் மிகப்பெரும் கண்டுபிடிப்பான மின் மோட்டார் ஆகும். இவ்வாய்வே எல்லா இயக்க சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பற்றிய கோட்பாடு உருவாக காரணமாக அமைந்தது.

பிரிட்டனின் உயர் அறிவியல் அமைப்பான ராயல் சொசைட்டியில் – அவ்வமைப்பின் தலைவராக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஹம்ஃப்ரி டேவி, ஃபாரடேவை கருத்து திருடர் என குற்றம் சுமத்தி ஆய்வறிக்கையை திரும்பப் பெறுமாறு நிர்பந்தித்ததையும் மீறி – ஃபாரடே தனது ஆய்வை சமர்ப்பிக்கிறார்.

ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பின் ஃபாரடே தனது பணிகளுக்கான அங்கீகாரத்தை பெற்றதோடு தனது புகழ்பெற்ற அடுத்த கண்டுபிடிப்பான மின்காந்த தூண்டல் விதிகளை கண்டறிந்தார். அதாவது, மின்கடத்தியை சுற்றியுள்ள காந்தப்புலம் மாறுதலடையும் போது கடத்தியுள் மின்சாரத்தை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார்.

இவ்விரு கண்டுபிடிப்புகளும், மின்சக்தியும், காந்தசக்தியும் ஒன்றை ஒன்று சார்ந்தியங்குகின்றன என்பதையும் ஒன்று மற்றொன்றை தூண்டுகிறது என்பதையும் வெளிக்கொணர்ந்ததுடன், ஆற்றல் அழிவின்மை விதி உருவாக காரணமாக அமைந்தன.

ஃபாரடேவின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தைத் தொடர்ந்து ஐன்ஸ்டீன் ஆற்றல் பற்றிய இயற்பியலில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதை இந்தப் படம் விவரிக்கிறது.

குழந்தை ஐன்ஸ்டீன்
குழந்தை ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் குழந்தைப்பருவத்திலிருந்தே அவருக்கு நம் கண்களுக்கு தெரியாத மின்சக்தி, காந்தசக்தி போன்றவற்றின் மீது கவர்ச்சி ஏற்பட்டது. அவரது பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் இயற்பியல், கணிதம், தத்துவம் ஆகிய துறைகளில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவரது பள்ளி, கல்லூரி பேராசிரியர்களை பொருத்தமட்டில் உலகின் எல்லா ஆற்றலும் – சக்தியும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஐன்ஸ்டீன் பின்னாட்களில், ஒரு புதிய, கண்டறியப்படாத மீப்பெருமளவிலான ஆற்றலை பொருட்களின் இதயமான அணுவில் கண்டறிந்து அவர்களுடைய கருத்து தவறென்பதை நிருபிக்கப்போகிறார்.

E=mc2 சமன்பாட்டில் M என்பது Mass – நிறையை குறிக்கிறது. இதை பற்றி அறிந்து கொள்ள ஐன்ஸ்டீன் பிறந்ததற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலபிரபுத்துவ அரசு அல்லது எதேச்சதிகார முடியாட்சியை எதிர்த்த மக்கள் புரட்சி (முதலாளித்துவ புரட்சி) காலகட்டத்திலான பிரான்சுக்கு செல்லவேண்டும். அதுவரை திருச்சபைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவியலை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு துறையையும் பகுத்தறிவின் மூலம் பிரித்தாய்ந்து வளர்த்தெடுத்த காலம் அது. இந்தியாவில் அத்தகைய அரசியல் புரட்சி நடப்பதற்கு பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை மட்டுமின்றி காலனி ஆதிக்கமும் சடுதியில் நிலைநாட்டப்பட்டது.

பிரான்சில் பிரபுகுலத்தை சேர்ந்த அன்டோன் லவாய்சியர், பிரபலமான வேதியலாளரும், மன்னர் பதினாறாம் லூயி-யின் வரிவசூலிக்கும் அதிகாரியும் ஆவார். வரி வசூலை பெருக்குவதற்கு பாரிஸ் நகரத்தைச் சுற்றி சுவரெழுப்பி நகரத்தினுள் நுழையும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி வசூலிக்கும் முறையை கொண்டு வந்து மக்கள் மத்தியில் ‘இழி’புகழ் ஈட்டிய பணியை செய்தவர். ஆனால், அவரது முக்கிய பங்களிப்பு வேதியல் துறையில், வேதி வினைகளில் பொருட்களின் நிறை மாறாமல் இருக்கும் கோட்பாட்டை நிரூபிப்பதில் இருந்தது.

அவர் மொத்த இயற்கையும் மூடிய அமைப்பாக இருப்பதையும், வேதியல் நிலைமாற்றங்கள் அனைத்திலும், எந்தப் பொருளின் நிறையும் அழிவதுமில்லை, புதிதாக உருவாவதுமில்லை என்பதை ஆய்வுக்கூடத்தில் நிருபித்துக் காட்டினார். அவருடைய ஆய்வுக்கூடத்தில் செஞ்சூட்டிலிருக்கும் இரும்புக் குழாயின் வழியாக நீராவியை செலுத்தி மறுபுறம் அதை சேகரித்து குளிர்வித்தார். (அதாவது இரும்புக் குழாயை துருப்பிடிக்க வைக்கும் வேதி வினையை நிகழ்த்தினார்).

சூடேற்ற பயன்படுத்திய நீரின் நிறைக்கும், இறுதியில் குளிர்வித்து பெறப்பட்ட நீரின் நிறைக்கும் இருந்த வித்தியாசம் வேதி வினையின் போது வெளியான வாயுவின் நிறை மற்றும் இரும்பு குழாயின் அதிகரித்த நிறையின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருந்தது. இச்செயல் முறையை பின்னோக்கி – தலைகீழாக – செய்து காட்டி தனது கோட்பாட்டை நிரூபிக்க அவர் முயன்றார்.

லவாய்சியர்
அன்டோன் லவாய்சியர்

லவாய்சியரின் சிறப்பு துல்லியமான அளவீடுகளிலும், தரவுகள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து ஆய்வு செய்யும் நேர்த்தியுமாகும். லவாய்சியர் வரிவசூல் அதிகாரியாக ஈட்டிய செல்வம் அனைத்தையும் தனது அதிதுல்லியமான ஆய்வுக்கூடத்தை மேம்படுத்துவதற்கே செலவிட்டுக் கொண்டிருந்தார். லவாய்சியரின் ஆய்விலிருந்து எந்த பொருளும் தப்பவில்லை.

அவருடைய கோட்பாடு பொருள் முதல்வாதத்திற்கு நிரூபணமாகவும், எல்லாப் பொருளும் எல்லா வகையான நிலைமாற்றங்களிலும் வேறொன்றாக மாறுவதாகவும், அவற்றின் அடிப்படை துகள் (பருப்பொருள்) அழிவதில்லை என்ற நிறைமாறாக் கொள்கை (நிறை அழிவின்மை கொள்கை) உருவாகவும் காரணமாக அமைந்தது.

அவருடைய பங்களிப்பு விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனினும், அப்போதைய சமூக சூழலில் உயர் பிரபுகுலத்தோர் சமூகத்தின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரம் வகித்ததுடன் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வாய்ப்புகளை ஏகபோகமாக ஒதுக்கிக் கொண்டனர். ஆனால், இந்த ஆதிக்கத்தை எதிர்த்த பரந்து பட்ட மக்களின் போராட்டமும் வலுப்பெற்று வந்தது.

ஜோன் பால் மாரட் என்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அறிவியல் ஆர்வலர் நெருப்பின் துகள்களை திரையில் படம்பிடிக்கும் கருவியை தாம் கண்டறிந்துள்ளதாக லவாய்சியரிடம் வருகிறார். மாரட்டின் சோதனைச்சாலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத வர்க்க பின்னணியையும், அறிவியல் ஆர்வத்தையும் கணக்கில் கொள்ளாத லவாய்சியர், நெருப்பின் துகளை பிடித்து அதை துல்லியமாக அளவிட்டிருந்தால் மட்டுமே மாரட்டின் கண்டுபிடிப்பை தான் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று அவரை அலட்சியப்படுத்தி அனுப்பி விடுகிறார்.

1789-ல் மகத்தான பிரஞ்சு புரட்சி நடக்கிறது. எதேச்சாதிகாரத்தின் தலைகளை மக்களும் புரட்சியாளர்களும் கில்லட்டினால் வெட்டியெறிகின்றனர். இப்போது ஜேகோபின் புரட்சியாளர்களில் ஒருவராக இருக்கும் ஜோன் மாரட், வரி வசூலிக்கும் அதிகாரியாக மக்களை ஒடுக்கிய லவாய்சியருக்கு சம்மன் அனுப்ப, லவாய்சியரும் கில்லடினுக்கு தப்பமுடியவில்லை.

சமூக அலைவீச்சில் அடித்துச் செல்லப்பட்டு குறுக்கப்பட்ட லவாய்சியேவின் வாழ்வைத் தொடர்ந்து ஐன்ஸ்டீனை ஒளியைப் பற்றி சிந்திக்க வைத்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.

பேராசிரியர் ஃபாரடே
பேராசிரியர் ஃபாரடே (முதிய வயதில்)

ஐன்ஸ்டீனின் இளம்பருவத்தில் அவரை அதிகம் கவர்ந்த, அவர் அதிகம் சிந்தித்து கொண்டிருந்த விசயம் ‘ஒளி’யைப் பற்றியது. கல்லூரி நாட்களில் அவர் தனது நண்பர்களுடன் மட்டுமின்றி தனது காதலியான மிலெவா மாரிக்குடனும் ஒளியைப் பற்றியும் அதன் வேகத்தை பற்றியும் விவாதிப்பதில் நேரத்தை செலவிடுகிறார். ஐன்ஸ்டீனின் ஒளியை பற்றிய பேரார்வம், பின்னர் ஆற்றலையும், பருப்பொருளையும் (நிறை) ஒருங்கிணைத்து மனிதகுலத்தின் பிரபஞ் பார்வையையே மாற்றியமைத்தது.

E=mc2 சமன்பாட்டின் அடுத்த பகுதி c என்பது ஒளியின் திசைவேகத்தைக் குறிக்கிறது. 19-ம் நூற்றாண்டிற்கு வெகுகாலத்திற்கு முன்னரே அறிவியலாளர்கள் ஒளியின் திசைவேகத்தை செயல்முறை அளவீடுகள் மூலம் கணக்கிட்டிருந்தனர். உலகின் அறியப்பட்ட அனைத்திலும் அதிவேகமாக பாய்வது ஒளி. அதன் வேகம் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர்.

ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பிறகு ஃபாரடே, பேராசிரியர் ஃபாரடேவாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மின்சக்தியும், காந்தசக்தியும் மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் இரு வடிவங்கள்தான் என்ற அவரது கருதுகோளையும், ஒளியும் அதே மின்காந்த அலையின் ஒரு வடிவம்தான் என்பதையும் அறிவியல் உலகம் ஏற்க மறுத்தது. தன்னுடைய கருதுகோளை நிரூபிக்கத் தேவையான உயர்கணித புலமை ஃபாரடேவிடம் இருக்கவில்லை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வயது முதிர்ந்த ஃபாரடேவின் உதவிக்கு வருகிறார் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல். உயர்கணிதம் கற்ற இளம் பேராசிரியர் மேக்ஸ்வெலும் ஃபாரடேவும் வயது வரம்பைத் தாண்டிய நண்பர்களாயினர். மேக்ஸ்வெலின் புதிய உயர்கணித சமன்பாடுகள் மின்விசையும் காந்தவிசையும் ஒன்றையொன்று சார்ந்தும் ஒன்று மற்றொன்றை தூண்டுவதாகவும், அவை மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் கூறுகள் என்பதை உறுதி செய்தன. அம்மின்காந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் ஒன்றையொன்று தூண்டி பரவுவதாக அச்சமன்பாடுகள் உறுதிசெய்தன. அவ்வேகம் ஒளியின் திசைவேகமான வினாடிக்கு 3லட்சம் கிலோமீட்டர் என்பதை மேக்ஸ்வெலின் சமன்பாடுகள் நிரூபித்தன. இவ்வகையில் ஃபாரடேயின் மின்காந்த அலை என்ற கருது கோளும், ஒளியும் மின்காந்த அலையின் ஒரு வடிவமென்பது கணிதவியலால் உறுதி செய்யப்பட்டது. மேலும், மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் ஒளியின் வேகம் அளக்கப்படும் ஆதாரத்தைப் பொறுத்தும், நிலைமத்தொகுதிகளை (Inertial Frame) பொறுத்தும் வேறுபடா மாறிலி என்று முன் வைத்தது.

இப்போது ஒளியின் வேகம் எந்த நிலையிலும் மாறுவதில்லை என்ற மேக்ஸ்வெல் கோட்பாட்டை சார்பியல் தத்துவமாக வளர்த்தெடுக்கும் நிகழ்முறை ஐன்ஸ்டீனின் வாழ்வில் எப்படி உருவாகிறது என்பதை பார்க்கலாம்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்

ன்ஸ்டீன் தான் பார்க்கக்கூடிய அனைத்தையுமே ஒளியின் பண்புகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முற்பட்டார். உதாரணமாக ஆற்றில் படகு நீரைக் கிழிப்பதால் ஏற்படும் அலைகள். படகும் அலைகளும் ஒரே வேகத்தில் செல்வதால் படகில் அமர்ந்திருகும் பயணியைப் பொறுத்தமட்டில் நீரலைகள் நிலையாக இருக்கிறது. கரையிலிருந்து பார்க்கும் பார்வையாளரோ அலைகள் படகின் வேகத்தில் நகர்வதாக காண்பார். ஒளியுடன் இதை ஒப்பிட்டால், நாம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது நம் முன் இருக்கும் கண்ணாடிக்குப் போய்ச் சேரும் ஒளி திரும்பி நம்மை வந்து அடையாமலே போய் விட, கண்ணாடியில் நமது உருவம் தெரியாமல் இருக்கும். இது எப்படி சாத்தியம்?

மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின்படி படி ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தாலும் ஒளியின் c என்ற அளவை விட குறையாத வேகத்தில் நம்மை விட்டு விலகிச் சொல்லும். மற்ற அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த கோட்பாட்டை அங்கீகரிப்பதன் மூலம் ஐன்ஸ்டீன், பருப்பொருள் (நிறை), ஆற்றல், ஒளியின் வேகம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் மிகை யதார்த்த (Surreal) அண்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்.

E=mc2 என்ற சமன்பாட்டில் அடுத்து பார்க்க வேண்டியது கணிதக்கூறான நிறையை வேகத்தின் வர்க்கத்தால் (c Squared) பெருக்குவதை பற்றி. பிரெஞ்சு புரட்சி ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், அறிவியலாளர்கள் பொருட்களின் இயக்கத்தை அளவிடவும் வரையறுத்துக் கூறவும் முயன்று வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ பிரான்சில் உயர்குலத்தைச் சேர்ந்த எமிலி டு சாட்லே என்ற பெண் அடுத்த 150 ஆண்டுகளில் கூட பெரும்பாலான பெண்களுக்கு வழங்கப்படாத சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றார். சிறுவயது முதலே அறிவு தேடலில் நாட்டம் கொண்டிருந்த எமிலி, அறிவியல், உயர்கணிதம், தத்துவத்துறைகளில் சிறப்பான பயிற்சியை பெற்றார். பிரான்சின் பிரபல கணிதவியலாளரும், நியூட்டன் இயற்பியல் வல்லுனருமான பியர் டி மாபெர்டசிடம் (Pierre de Maupertuis) உயர்கணிதம் கற்கிறார்.

பிரஞ்சு இராணுவ அதிகாரி ஒருவரை மணந்த எமிலியைச் சுற்றி அப்போதைய அறிவுஜீவிகள் கூட்டம் நண்பர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்தனர். பிரஞ்சு புரட்சியின் வித்தகர்களில் ஒருவரும் கவிஞருமான வால்டருடன் எமிலிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. முடியரசையும், திருச்சபையையும் கடுமையாக விமர்சித்ததால் வால்டர் இரு முறை சிறை தண்டனைக்குள்ளாகிறார். ஒரு முறை இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படுகிறார். நாடு திரும்பும் வால்டருக்கு எமிலியும் அவரது கணவரும் அடைக்கலம் தருகின்றனர். அன்றைக்கு அறிவியலாளர்களும் அரசியல் புரட்சி ஆர்வமும் பிரிக்க முடியாத படி இருந்ததை இது காட்டுகிறது.

எமிலி டூ சாட்லே
எமிலி டூ சாட்லே

நியூட்டனின் இயக்கம் பற்றிய பிரபலமான கட்டுரையான பிரின்சிபா (Principia) வை எமிலி பிரஞ்சு மொழியாக்கம் செய்கிறார். இன்று வரை பிரான்சின் கல்வி நிலையங்களில் எமிலியின் மொழி பெயர்ப்பே பாடப்புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நியூட்டனின் கோட்பாட்டின்படி, ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளினது நிறையின் மடங்கு திசைவேக அளவு (E=mv) இருக்கும். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த கோட்ஃபிரைட் லெப்னிஸ் (Gottfried Leibniz) ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளின் நிறையின் திசைவேகத்தின் இருபடி மடங்காக (E = mv2) இருக்கும் என்று முன்மொழிந்தார். அதை பெரும்பாலான அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கோட்ஃபிரைடின் கோட்பாட்டின் மீது ஈர்ப்படைந்த எமிலி, நியூட்டனின் விதியை சந்தேகிக்க ஆரம்பித்தது, அவருடைய வழிகாட்டிகளான மேதைகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உண்மை என்பது நடைமுறையில் சோதித்தறியப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று எனும் அறிவியல் அணுகுமுறையின்படி எமிலி கோட்ஃபிரைடின் கோட்பாட்டை பரிசோதனை மூலம் உறுதி செய்கிறார். 1740-ம் ஆண்டு மிகப் பிரபலமானதும், சர்ச்சையைக் கிளப்பியதுமான இயற்பியலின் நிறுவன விதிகள் (Institutions of Physics) என்ற கட்டுரையை வெளியிடுகிறார்.

“பெண்ணாகப் பிறந்த மிகச்சிறந்த ஆண்மகனென்று” எமிலியைப் பற்றி வால்டர் வருணித்தார். எமிலி அவருடைய 43-ம் வயதில் கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த பின் நோய்தொற்றினால் உயிரிழந்தார். தன் காலத்தின் தளைகளை உடைத்துக் கொண்டு அறிவியல் தேடலில் ஈடுபட்டு அறிவியலுக்கு அழியா பங்காற்றிய முன்னோடிகளில் ஒருவராக எமிலி தூ சாட்டலே விளங்குகிறார்.

இப்போது, ஐன்ஸ்டீன் எப்படி ஆற்றலையும், நிறையையும் இணைத்து 20-ம் நூற்றாண்டின் நவீன அறிவியலுக்கு அடித்தளம் இடுகிறார் என்று பார்க்கலாம்.

1903-ம் ஆண்டு தன்னுடன் பயின்ற மிலெவா மாரிக்கை மணந்து கொண்ட ஐன்ஸ்டீன் பல்கலைக் கழகங்களில் வேலை தேடுவதற்கு தேவையான பரிந்துரைகளை அவரது பேராசிரியர்கள் யாரும் தரத் தயாராக இல்லாத நிலையில் சுவிட்சர்லாந்தில் வடிவுரிமை அலுவலகத்தில் ஒரு கீழ்நிலை எழுத்தராக வேலை செய்து பொருள் ஈட்டுகிறார். மரபுகளை உடைத்துக் கொண்டு ஒரு துறையின் இயற்பியல் விதியை இன்னொரு துறைக்கு பொருத்தி இயற்கையின் அடிப்படை இயக்க விதிகளை, அதாவது இப்பிரபஞ்சத்தை படைத்த கடவுளின் சிந்தனையை அறியும் தேடலில் இருக்கும் ஐன்ஸ்டீனுக்கு பதவி உயர்வு, கூடுதல் ஊதியம், குடும்ப வாழ்க்கை, துணைவியின் குறிக்கோள்கள் அனைத்துமே அற்ப விசயங்களாகப்படுகின்றன. எழுத்தர் வேலையில் கவனத்தை செலுத்தாததால் பதவி உயர்வு மறுக்கப்படுகிறார். குடும்பச் சுமை தன்னுடைய சுயத்தையும் மேல் கல்வி கற்கும் வாய்ப்பையும் முடக்கிப் போடுவதை உணரும் மிலெவா, ஐன்ஸ்டீனுக்கு ஊதிய உயர்வு கிடைக்காமல் போனதைக் கேட்டு ஆத்திரப்படுகிறார். அவர்களுடைய திருமண வாழ்க்கை முரண்பட ஆரம்பிக்கிறது.

Albert_Einstein_(Nobel)ஐன்ஸ்டீன் தன்னுடைய நெருங்கிய நண்பரான மிக்கேல் பெஸ்ஸொவுடன் நகரில் உலாவச் செல்லும் போது வெவ்வேறு தொலைவிலிருக்கும் கோபுர கடிகாரங்களிலிருந்து வரும் ஒளி தங்களை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது மிக முக்கியமான நுண்ணறிவுப் புரிதலை அடைந்தார்.

மேக்ஸ்வெலின் சமன்பாடு முன்னறிவித்து ஒளியின் வேகம் மாறாதது என்பதை ஏற்றுக் கொண்டு நாமறிந்த மற்ற எல்லா நிகழ்வுகளையும் அத்துடன் பொருத்த முயன்றார். அப்படி பொருத்துவதற்கு இயங்கும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க நேரம் குறுக்கப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.

அது வரை காலம் என்பதை தனிமுதலான ஒன்றாக அதாவது காலம் என்பது கடவுளின் கையிலிருக்கும் கடிகாரத்திலிருப்பதை போல் எல்லா இடங்களுக்கும் மாறாத நிலையான ஒன்றாக அறிவியலாளர்கள் கருதி வந்தனர்.

ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அப்பொருளின் காலம் சுருங்கிக் கொண்டே போவதால்தான் ஒளிஅலை அதனின்று வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்ற மாறா வேகத்தில் விலகிச் செல்கிறது என்று ஐன்ஸ்டீனின் முன் வைத்தார். 1905-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் ஐந்து மிக முக்கியமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். அவற்றுள் நான்காவது ஆய்வறிக்கையில் விளக்கப்பட்ட ‘சிறப்பு சார்பியல் தத்துவத்தின்’ (Special Relativity) படி ஐன்ஸ்டீனின் பிரபஞ்சத்தில் தனிமுதலான மாறிலி (constant) காலமோ, வெளியோ அல்ல. ஒளியும், அதன் வேகமும் தான் மாறிலியாகும்.

வேகமாக செல்லும் ரயில் வண்டியை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் வேகத்தை கூட்ட ஆற்றலை அதாவது மேலும் மேலும் கூடுதல் எரிபொருளை போட்டுக் கொண்டே செல்கிறோம். அதன் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க ஒளி அதை விட்டு மாறா வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டரில் விலகிச் செல்லும், ரயில் வண்டியினுள் காலம் சுருங்கும் எனில் நாம் உயர்த்திக்கொண்டே செல்லும் ஆற்றல் எங்கே செல்கிறது?

E = mc2

அது நிறையாக மாறுகிறது. ஆம் ஆற்றல் பருப்பொருளாக மாறுகிறது. ஆற்றலும் பொருளும் ஒன்றை ஒன்று சாராத தனிமுதலானவை அல்ல. ஆற்றல் பொருளாக மாறும், பொருள் ஆற்றலாக மாறும், பொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

ஒரு பொருளில் உறைந்திருக்கும் ஆற்றலை கணக்கிட அதன் நிறையுடன் ஒளியின் வேகமான 3 லட்சம் மீட்டர் என்பதன் “வர்க்க”த்தை (அதாவது 9 ஆயிரம் கோடியை) பெருக்க வேண்டும். அவ்விதத்தில் பருப்பொருள் (அணு) ஒவ்வொன்றும் உறைந்திருக்கும் ஆற்றலின் சேமக்கலனாக உள்ளது. ஒரு பேனாவின் நிறை முழுவதையும் ஆற்றலாக மாற்றினால் அது அணுகுண்டு வெடிப்பதற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரே ஆண்டில் இயற்பியல் உலகைக் குலுக்கிப் போடக் கூடிய 5 ஆய்வறிக்கைகளை வெளியிட்ட ஐன்ஸ்டீனின் சாதனைக்கு எதிர்வினையாக என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் பதில். ஐன்ஸ்டீனின் சராசரி, காப்புரிமை அலுவலக எழுத்தர் வேலையும், சச்சரவுகள் நிறைந்த திருமண வாழ்வும் தொடர்ந்தன. அடுத்த 4 ஆண்டுகளில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் குறித்து ஒவ்வொன்றாக கடிதங்கள் வர ஆரம்பித்தன. அவை அனைத்துக்கும் ஐன்ஸ்டீனை பொறுமையாக பதில் எழுதினார். இறுதியில் மேக்ஸ் பிளாங்க் என்ற முக்கியமான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ரசிகர் மன்றத்தின் ஒரே உறுப்பினராக சேர்கிறார். அவரது உதவியால் ஐன்ஸ்டீன் ஜூரிக் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவி நியமனம் பெறுகிறார்.

ஐன்ஸ்டீனின் வெற்றி அவரது திருமண வாழ்க்கையின் தோல்வியாக முடிந்தது. 1919-ம் ஆண்டில் ஐன்ஸ்டீன், மிலேவாவை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டார்.

E=mc2 இயற்பியல் உலகின் புனிதக் கோட்பாடாக மாறியது. அணுக்களில் பூட்டப்பட்டிருக்கும் ஆற்றலை விடுவிப்பதற்கு குறைந்தது 100 ஆண்டுகள் பிடிக்கும் என்று ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால், அவர் இரண்டாம் உலகப் போரையும், ஹிட்லரின் ஜெர்மனியில் பணியாற்றிய ஒரு யூதப் பெண்ணின் மேதமையையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.

1907-ம் ஆண்டு ஆஸ்திரியவைச் சேர்ந்த 28 வயதான யூதப் பெண் லிசா மைட்னர் கதிரியக்கத் துறையில் ஆய்வு மேற்கொள்வதற்காக பெர்லின் நகருக்கு வருகிறார். அன்றைய ஜெர்மனியில் பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் பெண் ஆய்வாளர்களை பணிக்கமர்த்துவதில்லை.

ஆட்டோ ஹான்
ஆட்டோ ஹான்

ஜெர்மானிய வேதியலாளர் ஆட்டோ ஹான், லிசாவுக்கு உதவ முன்வருகிறார்.  கதிரியக்கம் பற்றிய தனது ஆய்வில் லிசாவை சககூட்டாளியாக சேர்த்துக் கொள்கிறார். 1912ல் அவ்விருவரும் கைசர் வில்ஹெல்ம் (Kaiser Wilhelm) ஆய்வு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். பல்கலைக் கழகத்தின் பிற பேராசிரியர்கள் லிசா மைட்னரை தொடர்ந்து புறக்கணித்து அவமதிக்கின்றனர். ஆனால் ஆட்டோ ஹானுடனான நட்பும் இயற்பியல் மீதான வேட்கையும் அவரை தாக்குப்பிடிக்க வைக்கிறது.

லிசா மைட்னர் ஜெர்மனியின் முதல் பெண் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார்.

1930-களில் பருப்பொருளின் அடிப்படைத் துகளான அணுவின் அணுக்கரு புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்பது கண்டறியப்பட்டிருந்தது. அந்த ஆண்டுகள் அணுக்கரு ஆய்வுகளின் பொற்காலமாக திகழ்ந்தன. அன்றைக்கு அறியப்பட்ட தனிமங்களில் மிகப்பெரிய உட்கருவைக் கொண்டிருந்த தனிமம் யுரேனியம். 238 புரோட்டான்களும் நியூட்டான்களும் கொண்ட யுரேனியத்தின் உட்கருவுக்குள் நியூட்ரான்களை செலுத்தி புதிய தனிமங்களை உருவாக்கும் ஆய்வில் லிசாவும் ஆட்டோவும் ஈடுபட்டிருந்தனர். ஆய்வின் வேதியல் செயல்முறைகளை ஆட்டோவும், இயற்பியல் கோட்பாடுகளை லிசாவும் பங்களித்து வந்தனர்.

1930-களில் ஆட்சிக்கு வந்த நாஜிக்கள், இனவெறி காரணமாக யூதர்களை அறிவுத்துறையில் இருந்து வெளியேற்றத் துவங்கினர். அதனால் 1933-ல் ஐன்ஸ்டீன் நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆய்வுகளில் தீவிரமாக இருந்த லிசாவுக்கு எதிராகவும் நாஜிக்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். நாஜி எதிர்ப்பு கருத்துக்களை கொண்ட ஹான், லிசாவை பாதுக்காக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆயினும், சூழ்நிலை மோசமடைந்து லிசா ஜெர்மனியில் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவரைக் காப்பாற்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் அமைப்புகளிலிருந்தும் அறிவியல் உரையாற்ற அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. ஆனால், நாஜிக்கள் அவரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. ஆட்டோ ஹானும், லிசாவுக்கு சார்பான தனது போராட்டங்களை கைவிடுகிறார்.

1938-ம் ஆண்டு சூழ்நிலை மிகவும் மோசமடைய, டச்சு நண்பர் ஒருவரின் உதவியுடன், தனது வாழ்நாள் முழுவதும் ஈட்டிய பொருட்கள், ஆய்வுப் பணிகள் அனைத்தையும் விட்டு விட்டு ஒரு பெட்டியுடன் அகதியாக ஹாலந்துக்கு தப்பிச் செல்கிறார் லிசா. பெர்லினில், நடந்து வரும் ஆய்வு விபரங்களை கடிதம் மூலம் பெற்று ஆட்டோ ஹானுக்கு தனது வழிகாட்டல்களை அளித்து வருகிறார்.

யுரேனியம் அணுக்கருவில் நியூட்ரானை உட்செலுத்திய சோதனையில் பேரியம் உருவாக்கப்படுவதாக ஆட்டோ ஹான் தகவல் அனுப்புகிறார். எதிர்பார்த்தபடி பெரிய தனிமத்தை உருவாக்காமல் சிறிய தனிமம் எப்படி உருவானது என்பதை ஆட்டோ ஹான் புரிந்து கொள்ள முடியவில்லை. லிசா, அதைப்பற்றி தனது மருமகனும் அறிவியலாளருமான ஒட்டோ ராபர்ட் ஃபிரிட்சுடன் விவாதிக்கிறார். ஒரு பெரிய நீர்க் குமிழி  எந்த நேரமும் உடைந்து சிதறும் நிலையில் இருப்பதைப் போல பெரிய உட்கருவான யுரேனியத்துக்குள் நியூட்ரானை செலுத்தும் போது, அது ஆட்டோ ஹான் மற்றும் பிற அறிவியலாளர்கள் நினைத்தது போல பெரிய தனிமத்தை உருவாக்காமல், சிறிய தனிமங்களாக உடைகிறது என்று லிசா உணர்கிறார்.

லிசா மைட்னர்
லிசா மைட்னர்

ஆனால், உட்கரு பிளவுபட்டால் இரண்டு பகுதிகளும் உயர் ஆற்றலுடன் (இரு அணுக் கருக்களுக்கிடையிலான எதிர்விசை சுமார் 200 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் இருக்க வேண்டும்) ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து விலக வேண்டும். அவ்வாற்றல் எங்கிருந்து  பெறப்படுகிறது என்று இருவரும் ஹானின் ஆய்வு முடிவுகளை சரிபார்க்கிறார்கள். பிளக்கப்பட்ட அணுக்களின் நிறைகளின் கூட்டுத்தொகையானது யுரேனியம் அணுவின் நிறையை விட, புரோட்டானின் நிறையில் ஆறில் ஒரு பங்கு குறைவாக இருந்தது. அந்நிறையை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டில் பொருத்திப்பார்க்கும் போது அது கிடைக்கும் ஆற்றல் அவர்கள் பரிசீலிக்கும் அணுப்பிளவில் எதிர்பார்க்கும் அளவிலானது என்பதை லிசா மெய்ட்னர் கணக்கிடுகிறார்.

“அவர் (ஆட்டோ ஹான்) அணுவை பிளந்து விட்டார்” என்கிறார் லிசா. அவரது மருமகனோ, “இல்லை! இல்லை! நீங்கள் அணுக்கருவை பிளந்திருக்கிறீர்கள்!” என்கிறார்.

ஐன்ஸ்டீன் சொன்னது மிகச்சரியென நிரூபிக்கப்பட்டாகி விட்டது. யுரேனியம், ரேடியம் போன்ற தனிமங்கள் கதிரியக்கத்தின் மூலம் ஆற்றலை வெளியிடுவதை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டின் மூலம் விளக்க முடிந்தது.

லிசா மைட்னரும் பிரிட்சும் தங்களது கண்டுபிடிப்பான அணுக்கரு பிளப்பை பற்றிய ஆய்வுக்கட்டுரையை வெளியிடுகிறார்கள். ஆனால், ஜெர்மனியில் ஓட்டோ ஹான் தனது ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்கும் போது நாஜிக்களின் நெருக்குதலால் அதில் யூதரான லிசாவின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிடுகிறார். அணுக்கரு பிளப்பிற்கு 1944-ம் ஆண்டில் ஹானுக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரும் கூட ஹான், லிசா மெய்ட்னரின் பங்களிப்பை அங்கீகரிக்காமல் தாமே அணுப்பிளவை கண்டறிந்ததாக கூறுகிறார். ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் காரணங்கள் கூட ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை கண்டு கொள்ளாமல் செய்து விடும்.

1942-ம் ஆண்டில் அமெரிக்காவில் “மான்ஹட்டன் திட்டம்” என்ற பெயரில் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவந்தன. அத்திட்டத்தில் பணிபுரிய லிசாவுக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்து விடுகிறார். அவருடைய மருமகன் ராபர்ட் பிரிட்ஸ் நாஜி ஜெர்மனை தோற்கடிக்க அணு ஆயுதம் தேவை என நம்பி அத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உணர்ச்சி சார்ந்த உத்வேகத்தை மக்கள் போராட்டங்களும், ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுமே வழங்குகின்றன.

அமெரிக்காவின் மான்ஹட்டன் திட்டத்தில் செய்யப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று 1945 ஆகஸ்டு 6ம் நாள் ஜப்பானின் ஹிரோசிமாவிலும் மற்றொன்று மூன்று நாட்களுக்கு பின் நாகசாகியிலும் போடப்பட்டு, மனித குலம் இதுவரை கண்டிராத பேரழிவு நிகழ்த்திக் காட்டப்பட்டது. நூற்றாண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பும், தியாகமும் முதலாளிகளின் கையில் பேரழிவுக்கு பயன்படுத்தப்படுவது அதற்கு முன்பும், பின்னரும் தொடர்ந்து நடக்கின்றன.

ன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாடு நமது சூரியனின் இயக்கத்தைப் பற்றியும், அதனுள் நடக்கும் அணுக்கரு பிணைப்பில் நிறை உருமாறி வெளிப்படும் பேரளவு ஆற்றலை விளக்க உதவுகிறது. நட்சத்திரங்களின் தோற்றத்தையும், வாழ்வையும், மறைவையும், பிரபஞ்சம் தோன்றியதையும், இயங்குவதையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

முதலில் பெரும் அழுத்தத்தில் இருந்த பேரளவு ஆற்றல், பெருவெடிப்பாக வெடித்து சிதறியது. அப்போது ஆற்றல், நிறையாக – பருப்பொருளாக மாறி இப்போது நாம் காணும் பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கிறது.

இன்று அறிவியலாளர்கள், அணுத்துகள் முடுக்கிகளில் அணுத்துகள்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பெருவெடிப்பை ஆய்வக அளவில் செய்து பார்க்கின்றனர். சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட அத்தகைய ஆய்வில் தான் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு உலகத்தைப் பற்றிய மனிதகுலத்தின் பார்வையையே ஐன்ஸ்டீனுடைய சமன்பாடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு சில நேரங்களில் மகிழ்ச்சியானதாகவும், சில நேரங்களில் வலிமிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இயற்கையை புரிந்து கொள்ள முனையும் மனிதனின் பேரார்வம் எப்போதும் முடிவுறுவதில்லை.

இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதன் எண்ணிலடங்கா இயக்கங்களையும், விசித்திரங்களையும் கடவுள்கள் தோற்றுவித்திருப்பதாக மதங்கள் இன்றைக்கும் ஊளையிடுகின்றன. கீதையிலும், குர்ரானிலும், பைபிளிலும் அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.

ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் கடமையை மனித குலம் தனது கூட்டுழைப்பு சமூகப் போராட்டத்தால் சாதித்து அதை அறிவியலாளர்கள் மூலம் நிரூபித்திருக்கிறது.

இன்றைக்கு முதலாளித்துவம் அறிவியலை பிடித்து வைத்துக் கொண்டு அறிவுக்கு எதிராகவும், சந்தைக்கு ஆதரவாகவும் நடந்து வருவதால் நாம் மதங்களை முறியடித்து அறிவியலை அதன் பீடத்தில் வைத்து மரியாதை செய்ய முடியாமல் இருக்கிறது.

ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.

–    மார்ட்டின்.

 1. என்னது ஐன்ஸ்டீன் லவ் செய்தாரா ?

  வினவு வர வர Maxim Gorky ரேஞ்சுக்கு “எதார்த்தமா”[Socialist realism format ] கட்டுரைகள் கூட எழுத்துகின்றது !

  நன்று Socialist realism பாணியிலான இலக்கிய பணி வினவில் தொடரட்டும்.

  //துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்//

  • ஆம் ஐன்ஸ்டீன் காதல் செய்தார் என்று வேறு ஒரு புத்தகத்திலும் நான் படித்திரிக்கிறேன் . ஏன் அறிவியலாளர்கள் காதல் செய்யக்கூடாதா?

   • வினவு வர வர Maxim Gorky ரேஞ்சுக்கு “எதார்த்தமா”[Socialist realism format ] கட்டுரைகள் கூட எழுத்துகின்றது !

    நன்று Socialist realism பாணியிலான இலக்கிய பணி வினவில் தொடரட்டும்.

    //அறிவியலாளர்கள் காதல் செய்யக்கூடாதா?

 2. இவரின் கண்டு பிடிப்பு இன்று அழிவு சக்திக்காகவே பயன் படுகிறது.

  இந்த பூமியில் வாழும் கோடானு கோடி மனிதர்கள் விலங்குகள் உயிரினங்கள் தாவரங்கள் பல்கிபெருகுவது, கடல் மலைகள் மண் காற்று ஆகியவை அனைத்தும் தானாகவே உருவாகி இருக்கிறது என்று கூறுவதும், இரவும் பகலும் மாறி மாறி வருவது தானாகவே என்று கூறுவதும், கடலில் உள்ள உப்புநீர் மேக கூட்டங்களாக மாறி சுவை மிகுந்த நன்னீராக தானாகவே மழை பொழிகிறது என்று கூறுவதும், பூமியில் விளும் விதை தானாகவே முளைத்து பூத்து காய் கனிகளை தருகிறது என்று கூறுவதும், ஆண் செலுத்தும் விந்து பெண்ணின் கர்ப்பத்தில் உண்டாகி உயிருள்ள மனிதனாகிறான் என்பது தானாகவே நிகழ்கிறது என்று கூறுவதும், மரணித்த மனித உயிர் எங்கோ சென்று விடுகிறது என்று கூறுவதும், உலகில் உள்ள உயிரினங்கள் அனைதிற்க்கும் தானாகவே உணவளிக்கபடுகிறது என்று கூறுவதும், சந்திரன் பூமியை சுற்றுவது, பூமி சூரியனை சுற்றுவது தானாகவே நடைபெறுகிறது என்று கூறுவதும், விண் வெளியில் உள்ள கோள்கள் அனைத்தும் குறிபிட்ட ஒழுங்கில் இடம் பெயர்தல் தானாகவே நடைபெறுகிறது என்று கூறுவதும், இந்த அனைத்து கட்டமைப்புகள் யாருடைய ஆட்சியில் இல்லை என்று கூறுவதும், இறைவனின் வேதங்களையும் தூதர்களையும் மறுப்பதும், நாம் அறியாத இறைவனின் படைப்புகளை மறுப்பதும், அனைத்தும் இறைவன் விதிப்படி நடக்கிறது என்பதை மறுப்பதும், நாம் இவ்வுலகில் செய்த செயல்களுக்கு உரிய கூலி வழங்கும் தீர்ப்பு நாளை மறுப்பதும் சிந்தித்து அறியும் மனிதனுக்கு அறிவுடைமை ஆகாது. இவை அனைத்தும் ஒரு இறைவனின் ஆட்சியில் உள்ளது ஆகும். இதனையும் மீறி இறைவனை நிராகரிப்பது இறை நிராகரிப்பு (குப்ர்) ஆகும்.

  http://muminabdullah.blogspot.in/2013/02/blog-post.html

  • //இதனையும் மீறி இறைவனை நிராகரிப்பது இறை நிராகரிப்பு ஆகும்///

   இது எங்களுக்கு தெரியாதா? இதுக்காக உட்கார்ந்து 15 லைன் கமெண்ட் போடனுமா? இல்லை 5 வருசம் உட்காந்து இஞ்சினீயருக்கு படிக்கனுமா?

   அய்யோ அல்லாவே, என்னய ஏன் இந்த “அறிவார்ந்த” கமெண்ட்ட எல்லாம் படிக்கவைக்கிறே…

  • நீங்க மதராசால படிச்சீங்களா? பள்ளி கூடத்துல படிச்சிருந்தீங்கனா physics, chemistry, maths, biology புத்தகங்கள எடுத்து கொஞ்சம் படுச்சு பாருங்க உங்க கேள்விக்கு விடை கிடைக்கும்.

   பாஸ் குரானைத்தவிர மத்த புத்தகங்களையும் படிங்க.

   • முற்போக்கு,Univerbuddy,ஆணி,

    muslimmoomin செய்யும் நகைசுவையை ரசிக்காமல் பதில் வேற கொடுக்கிறிங்களே !

    muslimmoomin நீங்க என்ன வடிவேலுக்கு தம்பியா ?

    ஹலோ வடிவேலுக்கு தம்பி, இண்டர்நெட்டு கூடத்தான் “இன்று அழிவு சக்திக்காகவே பயன் படுகிறது”, எனவே இந்த பக்கம் வாராதிங்க என்ன ?

    //இவரின் கண்டு பிடிப்பு இன்று அழிவு சக்திக்காகவே பயன் படுகிறது.//

   • ஒருவன் பள்ளி – கல்லூரி நாட்களில் physics, chemistry, maths, biology ஆகிய பாடங்களை ஒழுங்கா புரிஞ்சு படிச்சா அவனுக்கு இறை நம்பிக்கை கண்டிப்பாக வராது. இறை நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமேயானால் அவன் மேற்கண்ட பாடங்களை ஒருங்காக படிக்கவில்லை என்று பொருள்; புரிந்து படித்தவன் இறை நம்பிக்கை பற்றி பேசுகிறான் என்றால் அவன் நடிக்கிறான் என்று பொருள். நடிப்புப் பேர்வழிகளே (படித்தவர்களில்)நாட்டில் அதிகம்.

    அறிவை ஆண்டவனா கொடுக்கிறான்?
    http://hooraan.blogspot.com/2011/03/blog-post_15.html

  • மூமின் அய்யா,

   கொஞ்சம் அறிவியல் புத்தகங்களையும் அடிக்கடி படியுங்கள். படிக்க கடினமாக இருந்தால் கொஞ்சம் டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியாக்ரபி, போன்ற விடியோக்களையும் அப்பப்போது பாருங்கள். மத நூல்கள் மட்டுமே அறிவை தராது. நாமும் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும்.

   நீங்கள் இப்போது பதிவு செய்யும் தளம், கணினி இவை அனைத்தும் வெறும் மத நூல்களை மட்டும் படித்து கொண்டு இருந்தால் கிடைத்திருக்குமா? கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசியுங்கள் நண்பரே.

   மின்சாரம், இயந்திரங்கள், வேதியியல், மருத்துவம், மற்றும் ஏனைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் தீர்ப்பு நாளை மனதில் கொண்டு வெறும் வேத நூல்களை மட்டும் படித்தால் எப்படி வந்திருக்கும்.

   நான் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் குறை சொல்ல மாட்டேன். எல்லா மதங்களிலும் உள்ள நல்ல விடயங்களை கடைபிடியுங்கள், தற்காலத்துக்கு உகந்தாத விடயங்களை தவிருங்கள். இதை உங்கள் மதத்தவருக்கு மட்டும் சொல்லவில்லை. எல்லா மதத்தவருக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

  • //கடலில் உள்ள உப்புநீர் மேக கூட்டங்களாக மாறி சுவை மிகுந்த நன்னீராக தானாகவே மழை பொழிகிறது //

   //சந்திரன் பூமியை சுற்றுவது, //

   //பூமி சூரியனை சுற்றுவது //

   //விண் வெளியில் உள்ள கோள்கள் அனைத்தும் குறிபிட்ட ஒழுங்கில் இடம் பெயர்தல் //

   மேற்கூறிய கருத்துக்களெல்லாம் குரானில் எந்த அத்தியாயத்தில் உள்ளன muslimmoomin அவர்களே…???

  • அந்தந்த நிலப் பகுதிகளுக்கு ஏற்ற சிந்தனைகள்தான் மதங்களில் சொல்லப்படுகின்றனவே ஒழிய உலகப் பொதுமறை என்றோ அனைத்தும் மத நூல்களில் அடக்கம் என்று கூறுவது மடமை . இந்துமதம் இமயமலையைத் தாண்டியும் குரான் பாலைவனத்தை தாண்டியும் சிந்தித்ததில்லை . அங்கே கிறித்துவத்தில் பூமி தட்டைதான் . இதை வைத்துக்கொண்டு எல்லாம் எங்கள் மதத்திலேயே சொல்லியிருக்காங்க என்று கஷ்ட்டப்பட்டு கண்டு பிடிக்கிறத கேவலப்படுத்தாதிங்க நண்பரே .

  • நாத்திகர்களுக்கு மரண அடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு ,நாத்திக வாதத்தை மிக அழகாக முன் மொழிந்துள்ள முஸ்லிம் மூமின் அவர்களுக்கு நன்றி !

   • நண்பா நீங்கள் கூறியது உண்மை நன் நாத்திகன் என்பதில் பெருமை அடைகிறேன் காரணம் இப்பொழுதுதான் என்னால் மிகச்சரிய்ய்யக யோசனை செய்யமுடிகிறது அறிவு கூர்மையாக உள்ளது இப்பொழுதுதான் நான் என் என்னை நம்புகிறேன் அதனால் என் வாழ்க்கையை சரிவர கொண்டுசெல்ல என்னால் முடியும்

  • முதலில் பெரும் அழுத்தத்தில் இருந்த பேரளவு ஆற்றல், பெருவெடிப்பாக வெடித்து சிதறியது. அப்போது ஆற்றல், நிறையாக – பருப்பொருளாக மாறி இப்போது நாம் காணும் பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கிறது.

   இன்று அறிவியலாளர்கள், அணுத்துகள் முடுக்கிகளில் அணுத்துகள்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பெருவெடிப்பை ஆய்வக அளவில் செய்து பார்க்கின்றனர். சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட அத்தகைய ஆய்வில் தான் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு உலகத்தைப் பற்றிய மனிதகுலத்தின் பார்வையையே ஐன்ஸ்டீனுடைய சமன்பாடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

   அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு சில நேரங்களில் மகிழ்ச்சியானதாகவும், சில நேரங்களில் வலிமிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இயற்கையை புரிந்து கொள்ள முனையும் மனிதனின் பேரார்வம் எப்போதும் முடிவுறுவதில்லை.

   இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதன் எண்ணிலடங்கா இயக்கங்களையும், விசித்திரங்களையும் கடவுள்கள் தோற்றுவித்திருப்பதாக மதங்கள் இன்றைக்கும் ஊளையிடுகின்றன. கீதையிலும், குர்ரானிலும், பைபிளிலும் அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.

   ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் கடமையை மனித குலம் தனது கூட்டுழைப்பு சமூகப் போராட்டத்தால் சாதித்து அதை அறிவியலாளர்கள் மூலம் நிரூபித்திருக்கிறது.

   இன்றைக்கு முதலாளித்துவம் அறிவியலை பிடித்து வைத்துக் கொண்டு அறிவுக்கு எதிராகவும், சந்தைக்கு ஆதரவாகவும் நடந்து வருவதால் நாம் மதங்களை முறியடித்து அறிவியலை அதன் பீடத்தில் வைத்து மரியாதை செய்ய முடியாமல் இருக்கிறது.

   ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.

 3. /// பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை ///
  அப்பப்ப முற்போக்கு பட்டத்துக்காக ஓம் நமஹான்னு – அதுதான் பார்ப்பனீயம்தான் காரணம்னு சொல்ல வேண்டியது..இத பாக்கும் போது எனக்கு ஒரு பழைய பாட்டு தோணுதுண்ணா..
  அடுப்பே அடுப்பே ஏன் எரியல.. விறகு ஈறம்.. விறகே விறகே ஏன் ஈரம்.. மழை வந்துச்சு.. மழையே மழையே ஏன் வந்த.. இடி இடிச்சுது.. இடியே இடியே ஏன் இடிச்ச.. மேகம் வந்துச்சு.. மேகமே மேகமேன்னு பாடிக்கிட்டே போகும்…. அது போல.. நம்மாளுங்க எதையும் செய்யல.. அத ஒத்துக்காம, வீணா ஏதோ குடுமி கெடச்சுன்னு அத போட்டு இழுத்துக் கிட்டு என்ன பண்ணப் போறோம்.. விடுங்கண்ண…

  • பாப்பார பசங்களா,

   நீங்க தானே இத்துன வருடமா கல்வித் துறையில் இருந்தீங்க…, என்னத்த கண்டு பிடிச்சீ பூடுங்கனிங்க?

   சாம்பார் வைக்க ,மிக்சர் செய்ய கண்டு பிடிச்சா மட்டும் போதுமா ?

   //அப்பப்ப முற்போக்கு பட்டத்துக்காக ஓம் நமஹான்னு – அதுதான் பார்ப்பனீயம்தான் காரணம்னு சொல்ல வேண்டியது//

  • இத்துன வருடமா ஒன்னுமே கண்டுபீடிக்காத நீங்க டுபாகூர் பாப்பார பசங்க தானே ?

 4. //அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல//

  I agree this without any ifs, buts, half measures and disclaimers.

  • //அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல//

   வெள்ளைக்காரன் கண்டுபிடிக்க வேண்டும் . நாம் சினிமா பார்த்து கொண்டே , அடுத்தவர் செய்யும் கண்டுபிடிப்புகளுக்கு உரிமை கோரி கொள்ளலாம் .

   எங்க தாத்தா சைபர் கண்டுபிடிக்காட்டி நீங்க எதுவுமே கண்டுபிடிச்சு இருக்க முடியாது. என்று வசனம் பேசலாம்

   • Mr. Raman,

    We are not sure who invented zero. But what we are sure is that the whites, blacks, browns, yellows, and shades in between are all our relatives and we all are entitled to benefit from one anothers’ work.

    • //We are not sure who invented zero.//

     Learn your history.

     //sure is that the whites, blacks, browns, yellows, and shades in between are all our relative nd we all are entitled to benefit from one anothers’ work//

     Hey world, Did you hear? Univerbuddy is “entitled” for your hard work. Please share everything you invent with him for free.

     • Mr. Raman,

      //Learn your history//

      Where is the absolute proof on who invented 0?

      By the by,

      I said ‘one another’s work’. The relation is mutual. I am contributing to the betterment of the humanity. My comments, blogs, etc also are part of my contribution. In addition, the scientists and inventors did/do not work for themselves. And as this article itself explained, all of them have benefited from the forerunners. I hope now you would understand.

 5. “அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு ” என்னும் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது .

  அறைவ்யலாளர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் எப்படி விவாதித்தார்கள் , எப்படி சண்டை போட்டார்கள் , மதங்கள் , கார்பரேட் நிறுவனங்கள் எதிர்ப்பு பின்னனி போன்றவை மிக சுவாரஸ்யமாக எழுதப்பட்டு உள்ளது

 6. //இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? //

  Ada ariveketta padhargalaa.. Appadi mass-energy equivalence principle padi vadivamaicha koodangulam nuclear reactor’a edhirthaa eppadi saathiyam aagum????

 7. /// பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை ///

  முற்றிலும் உண்மையில்லை..

  பார்ப்ப்னீயம் இருந்த காலத்தில் தான் ஆர்யபட்டா பாஸ்கர போன்றவர்கள் அறிவியல் நூல்கள் எழுதியிருக்காங்க..
  ஆனா கிபி 1100 முதல் 1600 வரையிலும் அதுக்கு அப்புறம், ஆங்கிலேயர்கள் கையிலும் மாட்டிகொண்டதும் நம்ம ஊரில் அறிவியல் வளர்ச்சி த்டைபட்டக்கு பெரிய காரணம்..

  • சிலருக்கு எது எழுதினாலும் பார்ப்பனீயம் என்ற சொல்லை தொடர்ந்து சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும். ஆங்கிலேயர் வந்த பின்னர் தான் இந்தியாவில் பொருளாதாரம் சீரழிந்தது. ஆங்கிலேயரும், அவர்களுக்கு முன்னர் வந்த மங்கோலிய, துருக்கிய இஸ்லாமியப்படை எடுப்பாளர்களும் இந்தியாவில் இருந்து கொள்ளை அடித்துச் சென்றது ஏராளம். மேலே ஒரு நண்பர் மறுமொழியில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு அழிவு வேலைக்கு பயன்படுகிறது என்று சொல்லியுள்ளார். அதற்கு ஐன்ஸ்டீன் எப்படி அய்யா பொறுப்பாவார். கத்தி காய்கறி நறுக்கவும் , பிறமனிதரை கொலை செய்யவும் கூட பயன்படும். அதனால் கத்தியை கண்டு பிடித்தவர் மேல் குற்றம் சொல்வது முறையா ? மதங்கள் ஒழிவது உலகில் உள்ள மனித சமுதாயத்துக்கு நல்லது. ஆனால் கடவுள் நம்பிக்கை வேறு மதம் வேறு.மதம் என்றால் பித்து என்று ஒரு பொருள் உண்டு. கடவுள் என்றால் எல்லை கடந்து எங்கும் வியாபிக்கும் பரம்பொருள் என்று பொருள். மதத்துக்கும் கடவுளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மதம் என்பது கொள்ளையர்கள் தங்கள் சுரண்டலை மறைக்கவும், அதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் பெறவும் ரோமானியர்களாலும், அதன்பிறகு சவூதி அரேபியாவிலும் உருவாக்கப்பட்ட தீய சக்திகள் ஆகும். மதம் மனிதனுக்கு தேவை அற்றது. ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது மனித இனம் இருக்கும் வரை இருக்கும். மதத்துக்கும் கடவுளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

 8. வினவு….

  //ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.//

  அப்படியா.. ஐன்ஸ்டீன் மிக பெரிய விஞ்ஞானி என்பது உலகு அறிந்த உண்மை தான்.. ஆனால் வினவிற்கு ஒன்று புரியவில்லை. மகாபாரதத்தின் ஒரு அங்கம் தான் பகவத் கீதையும். அந்த பகவத் கீதை தான் தன்னுடைய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு உத்வேகத்தை அளித்தது என்று கூறிகிறார்.. அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்,

  “I have made the Bhagwad Gita as the main source of my inspiration and guide for the purpose of scientific investigations and formation of my theories”.

  “When I read the Bhagavad-Gita and reflect about how God created this universe everything else seems so superfluous”.

  மேலும், இந்தியர்களின்(இந்துக்களின்) விஞ்ஞான அறிவை பற்றி கூறும்போது..

  “We owe a lot to Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made”. ஐன்ஸ்டீனின் இந்த கூற்று உலகம் அறிந்த ஒன்று..

  //கீதையிலும்,……………. அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.//

  அவர் மட்டும் இல்லை அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் அணு சக்தி ஆயுதத்தின் தந்தை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் பணியாற்றிய இராபர்ட் ஓப்பன்ஹீமர்(Julius Robert Oppenheimer) தன்னுடைய அணு ஆயுத கண்டுபிடிபிற்கு மிக உத்வேகம் அளித்தது பகவத் கீதை தான் என்று கூறியுள்ளார்…தன்னுடைய ஆய்வு கூடத்திற்கு செல்லும் போதெல்லாம் எப்போதுமே பகவத் கீதை நூலை உடன் கொண்டு செல்வது அவருடைய வழக்கம்.. அவர் கூறுவது …

  Oppenheimer later recalled that, while witnessing the explosion, he thought of a verse from the Hindu holy book, the Bhagavad Gita (XI,12):

  If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one …

  Years later he would explain that another verse had also entered his head at that time: namely, the famous verse: “kālo’smi lokakṣayakṛtpravṛddho lokānsamāhartumiha pravṛttaḥ” (XI,32), which he translated as “I am become Death, the destroyer of worlds.”

  In 1965, he was persuaded to quote again for a television broadcast:

  We knew the world would not be the same. A few people laughed, a few people cried. Most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita; Vishnu is trying to persuade the Prince that he should do his duty and, to impress him, takes on his multi-armed form and says, ‘Now I am become Death, the destroyer of worlds.’ I suppose we all thought that, one way or another.//

  அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்த ஓப்பன்ஹீமர் சோதனைச்சாலையில் அணுசக்தியின் வெடித்து கிளம்பும் நெருப்பு பிழம்பின் ஆற்றலை கண்டு மகிழ்ச்சி அடைந்த அவர் அந்த ஆற்றலை பகவத் கீதையில் வரும் 11 அத்தியாயத்தில் வரும் 12 ஸ்லோகத்தோடு ஒப்பிடுகிறார்

  “If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one” … அதாவது,

  “வானத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒருமிக்க உதித்திருக்குமானால் அது ஒரு மகாத்மாவின் ஒளிக்கு ஒப்பாகும்” என்கிற வரிகளை தான் தன்னுடன் பணியாற்றிய சக விஞ்ஞானிகளிடம் உணர்ச்சி பொங்க கூறினார்..

  பின்னாளில் 1965ஆம் ஆண்டு அவர் தொலைக்காட்சி பேட்டியில் கூறும்போது….

  //We knew the world would not be the same. A few people laughed, a few people cried. Most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita; Vishnu is trying to persuade the Prince that he should do his duty and, to impress him, takes on his multi-armed form and says, ‘Now I am become Death, the destroyer of worlds.’ I suppose we all thought that, one way or another//

  தனுடைய ஆராய்ச்சியில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் தனக்கு உத்வேகம் தருவது பகவத் கீதையில் வரும் 11ஆம் அத்தியாயம் 32 ஆம் ஸ்லோகத்தில் கூறப்படும்..

  “உலகங்களை அழிக்க வல்ல காலம் நான். உலகங்களை சங்கரிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரினின்று பின்வாங்கினால் , எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழ மாட்டார்கள்”.

  என்னும் வரிகள் தான் என்று கூறினார்.. இந்த ஸ்லோகத்தின் மொத சாரத்தை அவர் சுருக்கமாக ‘Now I am become Death, the destroyer of worlds.’ என்று கூறினார். இதற்குள் ஒளிந்திர்க்கும் தத்துவம் யாதெனில்.. இந்த படைப்புகளுக்கு காரணமாக விளங்கும் அணுசக்தி(atomic fusion ). அழிக்கவும் செய்யும் என்பதுதான் அதன் உள்ளர்த்தம்..

  ஜப்பானின் கொட்டத்தை அடக்கி ..இதன் மூலமாக தான் இரண்டாம் உலக போர் ஒரு முடிவுக்கு வந்தது…

  மேற்கண்ட வற்றிற்கான ஆதாரம்

  The Gita Of J. Robert Oppenheimer நூலில் கண்டு கொள்ளலாம் …

  ஆதாரம்:http://en.wikipedia.org/wiki/J._Robert_Oppenheimer

  அவரின் தொலைக்காட்சி பேட்டி…

  http://www.youtube.com/watch?v=e67mIPR6ryA

  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இராபர்ட் ஓப்பன்ஹீமர் மட்டுமல்ல இந்து வேத சாஸ்திரங்களை அறிந்த பல உலக விஞ்ஞானிகள் பாராட்டி கூறி இருக்கிறார்கள். தேவை என்றால் அதையும் ஆதாரத்துடன் அளிக்க தயார். இந்து வேத சாஸ்திரத்தின் அருமை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். ஏனென்றால், அவர்கள் படித்தவர்கள் மேலும் விஞ்ஞான மேதைகள்.. எதையும் நுண்மையாக அராய்ச்சி செய்யும் அறிவு அவர்களுக்கு இருக்கிறது.. பெரியார் போன்றும் அவரை பின் பற்றி நடக்கும் பெரியாரிஸ்டுகள் போன்றும் எதையும் மேலோட்டமாக பார்க்கும் முட்டாள்கள் அல்ல அவர்கள்..

  • மோசடியாளர் தாயுமானவன் பிள்ளை,
   ”உலகத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் 3000 வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக்கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக கூறிக்கொள்ளும் அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகளின்” வகையினத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனை சேர்க்கும் கயமைத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

   கீதையை பற்றி – இந்து மதத்தை பற்றி ஐன்ஸ்டீன் சொன்னதாக நீங்கள் குறிப்பிட்டவற்றுக்கு தகுந்த ஆதாரம் கொடுக்க வேண்டும்.

   நீங்கள் ஆதாரமாக காட்டிய ஓப்பன்ஹீமரின் மேற்கோள்கள் கீதை தனக்கு மன உந்துதல் அளித்ததாகவும், தமது ஆன்மீக தேடலகளுக்கு உத்வேகமளித்ததாகவுமே குறிப்பிடுகின்றனவே அன்றி எங்கும் கீதையிலிருந்து அவர் அறிவியல் கருத்துகளை பெற்றுகொண்டதாக குறிப்பிடவில்லை. சாரமாக அவை பேரழிவு ஆயுதங்களை தயாரித்ததற்காக பாவ மன்னிப்பு கோருவதாகவோ மற்றும் தனது செயலை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளாகவுமே உள்ளன.

   ஆதாரமின்றி ஓப்பன்ஹீமரின் மேற்கோள்களையும் லிங்குகளையும், வைத்துக்கொண்டு ஐன்ஸ்டீன் கீதையை பற்றி புகழ்ந்து பேசியதாக பித்தலாட்ட மோசடி செய்யக்கூடாது.

   இத்தகைய பித்தலாட்டங்களை செய்ய தேர்ந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களால் தான் முடியும். இதை தான் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் செய்து வருகின்றார்கள். முன்னர் தோழர் அசுரன் தனது தளத்தில் நடந்த விவாதங்களில் அவர்களின் காக்கி டவுசரை கழற்றியிருக்கிறார்.

   ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பன பரிவாரங்களுக்கு மோசடியும் பித்தலாட்டமும் கைவந்த கலை. இதைத்தானே ஆயிரம் வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறீர்கள்.

   பெரியார் மட்டும் உங்கள் கீதையை – உங்கள் பொந்து மத அயோக்கிய தனங்களை அம்பலப்படுத்தவில்லை. இந்து வேத சாஸ்திரங்களை அறிந்த இந்திய விஞ்ஞானியான டி.டி.கோசாம்பியே கூட அம்பலப்படுத்தியிருக்கிறார்.

   அந்தக்கால சாருவாகர்களில் ஆரம்பித்து ராகுல சாங்கிருத்தியாயன், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா உள்ளிட்டு பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கேசாம்பி போன்றோர் வேதம், கீதை, உபநிசத்துகள் அனைத்தும் இந்திய பழங்குடி மரபுகளை களவாடி உட்செரித்தன என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர். இதில் டி.டி.கோசாம்பி ஒரு தலை சிறந்த அறிவியலாளர், என்பதுடன் அவர் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஓப்பன்ஹீமருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

   அன்று பழங்குடி மரபுகளை களவாடி சுவீகரித்து கொண்டு தான் வேதங்களும், சாஸ்திரங்களும் உருவாகின. கருத்து முதல்வாத வேத மரபை எதிர்த்து கேள்விக்குட்படுத்திய பொருள்முதல்வாத சாங்கியம், சாருவாகம், பவுத்தம், போன்ற வேத எதிர்ப்பு மரபுகளை அழித்தொழித்த சுவீகரித்துக் கொண்டதால் தான் வேத மரபு நிலைத்திருக்க முடிந்தது.

   அன்று கருத்து பித்தலாட்டத்தை செய்தவர்கள் இன்று உலகில் கண்டுபிடிக்கப்படுபவை எல்லாம் ஏற்கனவே தங்கள் வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் இருப்பதாக கதைவிட்டு தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.

   கீதையிலும், வேத சாஸ்திரங்களிலும் எல்லாமும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதென்றால் அதை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எவரையும் படிக்கவிடாமல் தாங்கள் மட்டுமே படித்து வந்த பார்ப்பனர்கள் எதையுமே கண்டுபிடிக்கவில்லையே ஏன்?

   தாங்கள் எதையுமே செய்யாமல், யார் எதை கண்டுபிடித்தாலும், இது ஏற்கனவே சொல்லப்பட்டாகிவிட்டது என்பது மிக மலினமான மோசடி யுத்தி என்பது பார்பன மூளைக்கு மட்டும் புரியமாட்டேன் என்கிறது.

   ஐன்ஸ்டீன் எங்கு எப்போது கீதையைப்பற்றி பேசியுள்ளார், எழுதியுள்ளார்? புத்தகம் அல்லது லிங்க் ஆதாரம் கொடுங்கள்.

    • பச்சரிசியில்தான் பொங்கல் வைக்க முடியும்.. புழுங்கல் அரிசியிலும் வைக்கலாம்.. ஏதோ அரிசியில்தான் பொங்கல் வைக்க முடியும் என்பது அறிவியல் உண்மையாகும்.. ஆணிக்கு அரிசியின் மேல் உள்ள வெறுப்பு அவரது அறிவியல் பார்வையை மறைக்கிறது என்ற உண்மையை நுட்பமாக எடுத்துக்காட்டிய உங்கள் நயம் நன்று, நன்று..

   • திருத்தம் :

    “பச்சரிசி” உணவை உட்கொள்ளும் பிராணிகளின்” வகையினத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனை சேர்க்கும் கயமைத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • ஐன்ஸ்டினும், சில விஞானிகளும் பாராட்டிவிட்டார்கள் என்பதாலேயே பகவத்கீதை சரியானது என்று பேசக்கூடாது. பாசிசத்தை ஆதரித்த விஞ்ஞானிகள் கூடத்தான் இருந்தார்கள், அதற்காக விஞ்ஞானிகளே கூறிவிட்டார்கள் என்று பாசிசத்தை ஆதரிக்க முடியுமா? பகவத்கீதை சரியானது என்பதை அதன் உள்ளடக்கத்திலும், பயன்பாட்டிலிருந்தும் வாதிட வேண்டும். ஆனால் கீதையால் நேர்மைறை பயன் எதுவும் இல்லை, அது பெரும்பாண்மை மக்களுக்கு எதிரானது என்பதால் நீங்கள் அதன் பயன்பாட்டிலிருந்தும் பேச முடியாத துர்பாக்கிய நிலையிலிருக்கிறீர்கள். கீதையின் பக்கம் நின்று கொண்டு நன்மையை தேடினால் அதற்கு நங்கள் என்ன செய்ய முடியும் அய்யா?

   மேலும், ஐன்ஸ்டின் சோசலிசத்தை ஆதரித்து கட்டுரை எழுதியிருக்கிறார் தெரியுமா?

 9. \ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் பணியாற்றிய இராபர்ட் ஓப்பன்ஹீமர்(Julius Robert Oppenheimer) தன்னுடைய அணு ஆயுத கண்டுபிடிபிற்கு மிக உத்வேகம் அளித்தது பகவத் கீதை தான் என்று கூறியுள்ளார்…தன்னுடைய ஆய்வு கூடத்திற்கு செல்லும் போதெல்லாம் எப்போதுமே பகவத் கீதை நூலை உடன் கொண்டு செல்வது அவருடைய வழக்கம்..\

  1. அணு ஆயுத கண்டுபிடிப்பிற்கு மிக உத்வேகம் அளித்தது பகவத் கீதையா?, லிசா மெய்ட்டனரா? யுரேனியத்தைப் பிளந்த பொழுது மிகக்குறைந்த அணு எடை கொண்ட பேரியம் ஏன் வருகிறது என்பதை விளக்குவதற்கு பயன்பட்டது தைத்ரிய பிரமணாவா? அல்லது ஜெர்மனியில் இருந்து தப்பி கடிதம் மூலம் விளக்கிய லிசா மெய்ட்டனரா? கட்டுரையை கொஞ்சம்வாவது வாசியுங்கள் தாயுமானவன் அவர்களே.

  2. ஒபன் ஹெய்மர் தினமும் ஆய்வகத்திற்கு பகவத் கீதையை எடுத்துச் சென்றாரோ இல்லையோ லிசா மெய்ட்டனரின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்யும் தன் நைச்சியமான இதயத்தை எடுத்துச் சென்றிருப்பார்!

  3. ஒன்று உண்மை. நோபல் பரிசு வாங்கிய பொழுது, அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமென்பதை ஹெய்மர் நினைத்திருக்கும் பொழுது கீதையின் அந்த சிறப்பான “உலகங்களை அழிக்க வல்ல காலம் நான். உலகங்களை சங்கரிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரினின்று பின்வாங்கினால் , எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழ மாட்டார்கள்” என்பதை நினைத்திருப்பார் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்!!

  4. அடுத்தவர் வேலையை தன் வேலையாக காட்டிக் கொள்வதற்கு ஒருவரால் வேதத்தில் இருந்து மேற்கொள் காட்டமுடிகிறவரதென்றால் “அகம் பிரம்மாஸ்மி’ என்பதை மேக்ஸ் முல்லர் எவ்வளவு சிறப்பாக ஜெர்மன் மொழியில் பெயர்த்திருப்பார் என்பதை நினைக்கும் பொழுது ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதைப் போல் இருக்கிறது!

  “I have made the Bhagwad Gita as the main source of my inspiration and guide for the purpose of scientific investigations and formation of my theories”.
  “When I read the Bhagavad-Gita and reflect about how God created this universe everything else seems so superfluous”.

  வேதத்திற்கு ஹெய்மர். புராணத்திற்கு ஐன்ஸ்டீன்!

  வருண சிந்தாமணி நூலில் (1905), தன் சாதிப் பெருமைக்காக புராணங்களை புரட்டு என்று சொல்லிய வேளாளர்களை ஐன்ஸ்டீனுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. தாயுமானவருக்கு கூடவா தெரியாது? புராணங்களைப் பற்றி அப்பொழுது ஒரு நிலைப்பாடு. அதை தக்காட்டுவதற்கு இப்பொழுது ஒரு நிலைப்பாடு என்றால் எது உங்கள் நிலைப்பாடு?

  சித்துர் அதாலாத் கோர்ட் தீர்ப்பு கனகசபாபதி பிள்ளையால் 1930ல் வெளியிடப்பட்டது. அத்தீர்ப்பில் ஆசாரிமார்கள் விஸ்வகுலப் பிராமணர்களான நாங்களே பெரியவர்கள் என்றும் வேதோக்தா முறையில் கலியாணம் செய்வதற்கு பார்ப்பனர்கள் தேவையில்லை என்பதையும் புராணங்களும் கீதையும் கட்டுக்கதை என்று விவாதித்து குண்டைய பிராமணர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். இரண்டும் வானமாமலையின் தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்ட கருத்துக்கள் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.

  நம்முடைய வரலாற்றில் புராணங்களும் வேதங்களும் சாதிப் பெருமை பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட பொழுது ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்கு இவை எப்படி inspiration ஆக இருந்தது என்பதை விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

  \ஏனென்றால், அவர்கள் படித்தவர்கள் மேலும் விஞ்ஞான மேதைகள்.. எதையும் நுண்மையாக அராய்ச்சி செய்யும் அறிவு அவர்களுக்கு இருக்கிறது.. பெரியார் போன்றும் அவரை பின் பற்றி நடக்கும் பெரியாரிஸ்டுகள் போன்றும் எதையும் மேலோட்டமாக பார்க்கும் முட்டாள்கள் அல்ல அவர்கள்..\
  நீங்களாவது முட்டாள் இல்லையென்றால், வேதத்தில் மாட்டுக்கறி பிரதான உணவாக இருக்கும் போது, இந்து வெறியர்கள் ஏன் பசுமாட்டை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் என்பதையும், செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் அடித்தே சொல்லப்பட்டனர் என்பதையும் அம்பலப்படுத்துவதற்கு எங்களுடன் நீங்கள் வருவீர்களா தாயுமானவன்.

  நீங்கள் வரமாட்டீர்கள் என்று தெரியும். தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த நிலைப்பாட்டில் ஏற்கனவே ஒருமுறை இப்படிச் சொன்னீர்கள் “சரி,வேண்டுமானால், உங்கள் வீட்டில் ஏதாவது திருமண விசேஷம் என்றால் மறக்காமல் என்னை கூப்பிடுங்கள். வந்து வயிறார தங்களின் பொற்கரங்களால் பரிமாற பட்டு உண்டு. (ஆனால், உணவு கண்டிப்பாக சுத்த சைவமாக தான் இருக்க வேண்டும்) மணமக்களுக்கு பகுத்தறிவு புஸ்தகங்களை பரிசளித்து விட்டு, வாழ்த்தி செல்கிறேன்.”

  “…gam alabhate [2]; yajno vai gauh; Yajnam eva labhate; atho annam vai guah; Annam evavarundhe….”
  ‘(At the horse-scarifice) he (the Adhvaryu) seizes (binds) the cow (i. e. cows). The cow is the sacrifice. (Consequently) it is the sacrifice he (the scarificer) thus obtains. And the cow is certainly is food. (Consequently) it is food he thus obtains’
  English Translation by Paul-Emile Dumont, Proceedings of the American Philosophical Society 92.6 (December 1948). Page. 485. டி. என். ஜாவின் ‘the myth of the holy cow’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

  இதை ஆதாரமாக கொண்டு ஆர். எஸ். எஸ் மற்றும் பிஜேபியை அம்பலப்படுத்த ஒரு இந்துப் புருசனாக வருவீர்களா தாயுமானவன்?

  நம் நாட்டில் இதற்கே துப்பில்லாமல் எள் காய்கிற இடத்தில் எலிப்புழுக்கையாக ஐன்ஸ்டீன், ஹெய்மரையும் வேத புராணத்திற்கு ஆதரவாக இழுப்பதற்கு சிறிதளவும் வெட்கப்படவில்லையா?

  • அற்புதமான பதில்! தன் மன சாட்சியின் உறுத்தல்களை மறைத்துக்கொள்ளவே கீதையை மேற்கோள் காட்டுவர்! வேதம் எது? அதில் கூறப்படும் இறை கொள்கை என்ன? கீதை அவற்றினின்றும் எப்படி முறண்படுகின்றது என்றெல்லாம் யார் சிந்தித்து பார்த்தார்கள்? மேற்கோள் காட்டுவதற்கு, தனது அழிவு செயலுக்கு தான் மட்டுமே பொறுப்பல்ல என்று கைகழுவி விடவே கீதை பயன்படுகின்றது! அது மகாபாரதத்தின் ஒரு அங்கம் என்பதே புரட்டல்தான்! பழைய வால்மீகி ராமாயணத்தில் அது இல்லை! பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது! புஜபலம் கொண்ட ஷத்திரியர்களை பயன்படுத்தி, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைனிருத்த குள்ளனரிக்கும்பல் புனைந்தது!

 10. அற்புதமான கட்டுரையும் வாசகரின் பின்னூட்டங்களும் வினவையும் வாசகரையும் எங்கேயோ உயரக் கொண்டு போய் விட்டன. இணைந்து பணி ஆற்றிய அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறேன்.

 11. வினவு ,

  தயவு செய்து அறிவியல் சார் கட்டுரைகளில் பின்னூட்டம் பகுதியை மூடுங்கள் அல்லது அறிவியல் மீது சிலர் வைக்கும் அறிவியல் அற்ற பின்னூட்டங்களையாவது தடை செய்யுங்கள்.

  தாயு, muslimmoomin போன்ற அறிவியல் அறிவு அற்ற அறிவிலிகளின் மதம் சார் பொய் ,புனைக்கதைகள் ,பித்தலாட்டம் அளவு கடந்து செல்கின்றது.

 12. விட்டா இந்த மதம் சார் அறிவிலிகள் [தாயு etc]விஷ்ணு சக்கரத்தில் இருந்து தான் மின் விசிறி கண்டுபீடிக்கப்பட்டது , கண்ணன் ஊட்டு தயீர் கடையும் மத்தில் இருந்து தான் வாஷிங் மெஷின் கண்டுபீடிக்கப்பட்டது என்று பெனத்துவார்கள்!

  • சேச்சே… இந்தியாவுல அது எல்லாத்தயும் கண்டுபிடிச்சது வினவும் சரவணும் தான்…

 13. என்னது ஒளியை பற்றியும் அதன் வேகம் பற்றியும் ஐன்ஸ்டீன் அவர் காதலியுடன் விவாதித்தாறா?

  இருவருமே scientist ஆக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

  “ஐன்ஸ்டீன் A true Love[science] Story” பற்றி வினவில் Socialist realism format கட்டுரையை எதிர்பார்கிறேன்.

  Note :

  Dear Tamil film directors pls read vinavu,by the way you can get lot of TRUE love stories instead of steeling stories from foreign move DVDs

  //ஐன்ஸ்டீனின் இளம்பருவத்தில் அவரை அதிகம் கவர்ந்த, அவர் அதிகம் சிந்தித்து கொண்டிருந்த விசயம் ‘ஒளி’யைப் பற்றியது. கல்லூரி நாட்களில் அவர் தனது நண்பர்களுடன் மட்டுமின்றி தனது காதலியான மிலெவா மாரிக்குடனும் ஒளியைப் பற்றியும் அதன் வேகத்தை பற்றியும் விவாதிப்பதில் நேரத்தை செலவிடுகிறார்//

 14. திரு.ஆணி…

  நான் மோசடி செய்யவில்லை.. நான் எனக்கு தெரிந்ததை கூறினேன்.. நான் கூறியது தவறாக இருப்பின் மன்னிக்கவும். முடிந்தால் ஐன்ஸ்டீன் கூறியதில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து கூறுகிறேன் .. தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி…

  //இந்து வேத சாஸ்திரங்களை அறிந்த இந்திய விஞ்ஞானியான டி.டி.கோசாம்பியே கூட அம்பலப்படுத்தியிருக்கிறார்.//

  டி.டி கோசம்பி ஒரு மார்க்சிய ஆய்வாளர்… வரலாற்றை பொறுத்த வரை மார்க்சிய கண்ணோட்டத்தில் இருந்துதான் அவர் தன்னுடைய ஆய்வுகளை நிகழ்த்தினார்.மார்க்சியர்களின் கண்ணோட்டத்தில் வரலாறு என்றாலே “அது வர்க்கங்களுக்கு இடையிலான ஒரு முரண்பாடு” என்று அடிப்படையில் தான் வரலாற்றை அணுகுவார்கள். அந்த அளவுகோலின் படி பார்த்தால் அவருடைய இந்திய வரலாற்று ஆய்வு நூல்களான “An Introduction to the Study of Indian History” மற்றும் “The Culture and Civilisation of Ancient India in Historical Outline”. ஆகிய இரண்டு நூல்களிலும் வழி நெடுக எங்கு பார்த்தாலும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக எந்த விஷயங்களும் இந்திய வரலாற்றில் இல்லை என்று கூறுவார்..மேலும், அவரின் நூலான என்னும் நூலில் டி.டி.கோசாம்பி அஜந்தா ஓவியங்கள் குறித்த ஒரு விமர்சனத்தை முன்வைப்பார். சமுதாயத்தின் உபரியிலிருந்து உருவான இந்த ஓவியங்களில் இந்த சமுதாயத்தின் ’பாமர’ மக்கள் காட்டப்படவில்லை. அவற்றில் எந்த அன்றாட வாழ்க்கை செயல்பாடும் சித்தரிக்கப்படவில்லை. வானகத்து மங்கையர், போதிசத்வர்கள், துறவிகள், புத்தர் – ஆனால் சாதாரண மக்கள்? என வினவுவார் அவர். (Ancient India: A History of Its Culture and Civilization, Pantheon Books, 1966 பக். 179.) . என்று அவருக்கே உண்டான இயல்பான மார்க்சிய பார்வையில் தான் வரலாற்றை பார்க்கிறார் ஆகவே, மார்க்சிய, பெரியாரிய சரித்திர கண்ணோட்டத்தின் படி பார்த்தல். வரலாறு அனைத்துமே இருண்ட காலமாக தான் தெரியும்.. டி.டி கோசாம்பியின் கண்ணோட்டத்தின் படி பார்த்தால் இலங்கையில் சிங்களர்களை வென்று 12,000 சிங்களர்களை போர் கைதிகளாக அழைத்து வந்து அவர்களை கொண்டே கரிகாலன் கல்லணையை கட்டுவித்தான் என்பது கூட அநியாயமாக தான் படும். என்னளவில் அது தமிழனின் சரித்திர சாதனை.. கோசாம்பியின் அளவில் அது கரிகாலன் செய்த பாசிச வேதனை. வரலாற்றை மன்னர்களின் வெற்றியாகவே கண்டு பழக்க பட்ட நம்மவர்களுக்கு. ஒரு புதிய கோணத்தில் (மார்கிச்ய) கூறியதால் அன்றைய காலகட்டத்தில் அது பெரிதும் அனைவராலும் விதந்தோத பட்டது.. இன்றும் கூட உலகில் உள்ள அனைத்து மார்க்சியவாதிகளால் பெரிதும் மதிக்க தக்க ஒரு ஆய்வாளர் கோசம்பி… ஆகவே, இந்து சமயத்தை தோல் உரித்து காட்டினார் என்று நீங்கள் கோசம்பியை கொண்டாடுவதில் ஆச்சர்ய படுவதில் ஒன்றும் வியப்பில்லை…

  //ராகுல சாங்கிருத்தியாயன், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா உள்ளிட்டு பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கேசாம்பி போன்றோர் வேதம், கீதை, உபநிசத்துகள் அனைத்தும் இந்திய பழங்குடி மரபுகளை களவாடி உட்செரித்தன என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர்.//

  நான் இதற்க்கான பதிலை முன்பே கூறி விட்டேன்.. ராகுல சாங்கிருத்தியாயன் நூலான வால்கா முதல் கங்கை வரை என்னும் நூலில் வரும் “ப்ரவாஹன்” என்னும் தலைப்பில் வருவதை படித்தாலே மார்கிச்ய பார்வையின் லட்சணம் தெரியும். ஒன்றும் இல்லை நாத்திகர்களுக்கு ஆதரவான கருத்துக்களாக அதில் கூறி கூறி இருப்பார்.. அவர் அவர்களின் கண்ணோட்டத்தில் இந்திய வரலாற்றையும் இந்து சமய தத்துவங்களையும் திரிகிறார்கள் . உங்களுக்கு புரியும் படி கூற வேண்டுமானால் தெய்வ நாயகம் என்கிற ஒரு கிருத்துவர் ” இந்திய தத்துவஞான” மரபிற்கு முக்கிய காரணமே புனித தோமா(saint thomas) இந்தியாவிற்கு வந்தது தான் காரணமாம்.. வேதம் உபநிஷதங்களில் கூறி இருப்பதெல்லாம் இயேசு நாதரை பற்றி தானாம். அவ்வளவு என் ,தமிழர்களுக்கு சிந்திக்க கற்று கொடுத்தே தோமா தானம். இதற்க்கு என்ன சொல்வது.. கேட்டால் என்னிடம் இதற்கான ஆதராம் இருபதாக கூறுகிறார்.. எதையோ பேர் வேத தத்துவ ஞான மரபை சிதைக்க பார்கிறார்கள். ஆனாலும், இந்து சமயம் அதன் பாதையில் எந்த சிதைவும் இல்லாமல் பயணித்து கொண்டு தான் இருக்கிறது.

  //கீதையிலும், வேத சாஸ்திரங்களிலும் எல்லாமும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதென்றால் அதை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எவரையும் படிக்கவிடாமல் தாங்கள் மட்டுமே படித்து வந்த பார்ப்பனர்கள் எதையுமே கண்டுபிடிக்கவில்லையே ஏன்?//

  ஆயிரம் அல்ல 2000 ஆண்டுகளுக்கு மேலாக என்று மாற்றி கொள்ளவும்.. இதற்க்கு பார்பனர்களின் பிழைப்புவாதம் கூட காரணமாக இருக்கலாம். வேதத்தில் இருக்கும் அறிவு கருவூலங்களை விட்டு. அதன் ஒரு அங்கமான வெறும் யாகங்களை செய்து பொருளீட்டும் விச்யதிர்க்காக மட்டும் அவர்கள் வைத்து கொண்டார்கள். அதனால் தான் வரலாற்றில் வேதங்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது..

  //நீங்கள் ஆதாரமாக காட்டிய ஓப்பன்ஹீமரின் மேற்கோள்கள் கீதை தனக்கு மன உந்துதல் அளித்ததாகவும், தமது ஆன்மீக தேடலகளுக்கு உத்வேகமளித்ததாகவுமே குறிப்பிடுகின்றனவே அன்றி எங்கும் கீதையிலிருந்து அவர் அறிவியல் கருத்துகளை பெற்றுகொண்டதாக குறிப்பிடவில்லை.//

  ஆம் நானும் அதை தான் கூறினேன்..தனக்கு உந்துதலாக இருப்பதாக தான் அவர் கூறினார் என்று சொன்னேனே தவிர அதில் இருந்து தான் அணு ஆயுதத்தை தயாரிக்க அவர் “Formula” வை எடுத்து கொண்டார் என்று எங்கும் நான் கூறவில்லையே.. உந்துதல் என்பதற்கு ஆங்கிலத்தில் inspiration என்று தான் சொல்வார்கள்..

 15. எந்த மதத்தயும் விஞ்ஞானரீதியில் நிறுவ முயலாதீர்கள் அது தோல்வியில்தான் முடியும் பைபிலில் பகவத்கீதையில் குரானில் எதிலும் விஞ்ஞானம் இல்லை நயவஞ்சக மத வாதிகள் பணம் பெறுவதற்க்கும் தங்கள் மதத்திற்க்கு ஆள் பிடிக்கவும் மதத்தை விஞ்ஞான ரீதியில்நிருபிக்க முயன்று அவர்களின் மத புத்தகதின் மூலமே மூக்குடை பெற்று இருக்கிறார்கள்,மதம் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை அதில் விஞ்ஞானத்தை தேடுவது வீண் வேலை

 16. இதன் சுருக்கம் என்னவென்றால் அறிவியலை வளர்த்தது பாட்டாளி வர்க்கம்(புஜமுக வின் பாட்டனார் முப்பாட்டனார்கள்.)வளரவிடாமல் தடுத்தது — சரியாக யூகித்துவிட்டீர்களே … கரெக்ட் … பார்ப்பனர்கள்.

  இந்த உண்மையைக் கண்டு பிடித்தது வினவும் நமது பெரியாரிசத் தோழர்களும்.

 17. மிக மிக அருமையான பதிவு. முதலில் ஒரு அறிவியல் ஆராச்சியாளர் என்ற முறையில் நன்றி கூறுகிறேன். அறிவியல் பற்றி பேசும் தமிழ் ஊடகங்கள் இப்போது தமிழ் சூழலில் இல்லை. எனவே இந்த பதிவு தமிழ் வாசகர்களுக்கு அதிக முக்கியத்தும் பெறுகிறது. கடந்த ஒரு வருடமாகத் தான் வினவினை படித்து வருகிறேன். எனக்குள் ஒரு சமுதாய விழிப்புணர்வை, சமுதாயம் பற்றிய சிந்தனையை, தினம் தினம் வளர்த்து கொண்டு வருகிறது. வினவுக்கும் அதன் தோழர்களுக்கும் கோடி நன்றிகள்.

 18. வியப்பூட்டிய சில தகவல்கள் அளித்தமைக்கு நன்றி வினவுக்கு.என் நம்பிக்கை இப்போது பன்
  மடங்கு அதிகரித்துள்ளது.

 19. தாயுமானவன் அவர்களே.

  நீங்கள் கூறிய கருத்துக்கள் தொடர்பாக நான் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்கவில்லை. இருந்தபோதிலும் ஆணிக்கு நீங்கள் அளித்த பதிலும் மோசடியாகவே இருக்கிறது.

  வரலாற்றில் E=mc^2 எனும் கட்டுரை ஹெய்மரைப் பற்றி கூறும் பொழுது மெய்ட்டனரின் கடின உழைப்பையும் சரியாக பதிவு செய்கிறது. ஹெய்மரும் ஒரு கட்டத்தில் மெய்ட்டனரை நைச்சியமாக புறக்கணித்துவிட்டு தன் ஆராய்ச்சிக்கு இந்து ஞான தத்துவவிசாரம் அளிப்பது வேசைத்தனமானது என்பது என் கருத்து. இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

  ஒரு கருத்தை ஆராய்வதற்கு நீங்கள் வைக்கும் அளவுகோல் வக்கிரமாக இருக்கிறது. டி.டி.கோசாம்பி மற்றும் சட்டபாத்யாயா மார்க்சிய பார்வையில் ஆராய்வதால் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதுகீறிர்கள். நீங்கள் நேர்மையாளர் என்றால் அவர்கள் வைத்த கருத்தில் எது சரி? எது தவறு? இந்து ஞான மரபு எப்படியெல்லாம் திரிக்கப்பட்ட்து (?!!!) என்பதைச் சொல்லவேண்டும். கருத்து தளத்தில் விமர்சனமும் சுயவிமர்சனமும் தான் இலக்குகள் எனும் போது இக்கால மனுவை போன்று நீங்கள் நடந்து கொள்வது அருவெறுக்கத் தக்கதாக இருக்கிறது.

  தோமையாரைப் பற்றி கூறும் பொழுதே உங்களுக்கு சிரிப்பாய் வருகிறது. யுரேனியத்தைப் பிளந்து பேரியம் வருவதை விளக்குவதற்கு வேதம் உந்துதலாக இருந்தது என்று ஹெய்மர் சொல்லும் பொழுது உங்களுக்கு ஒன்றுமே தோன்றவில்லையா? ‘மனிதரைப் போல், இருக்கீன்றீர் என்ன வாழ்வு?’

  ஹெய்மர் ஒருவேளை “சோமபானம் அருந்திய இந்திரனின் வயிறு கடல்போல் பரவுகிறது” எனும் ரிக்வேத சம்ஹிருதைக்கு சியர்ஸ் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள்.

  \\மார்க்சிய, பெரியாரிய சரித்திர கண்ணோட்டத்தின் படி பார்த்தல். வரலாறு அனைத்துமே இருண்ட காலமாக தான் தெரியும்.\\

  நம் வரலாறு அனைத்துமே இருண்ட காலமாகத்தான் இருக்கிறது. இடங்கை, வலங்கை சாதிகள் மேவாரம் தாவாரம் என்று வரிகட்டியே சாகவில்லையா? திருவாதங்கூர் சமாஸ்தனத்துக்கும் எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் (நிலக்கிழார்கள்) திருப்படித்தானம் (பத்மனாபனின் ஆட்சி) என்ற பெயரில் தலை வரி, முலை வரி கட்டவில்லையா? தீண்டாமை போதாது என்று காணாமை வேறு இருந்ததே அந்த வரலாறு என்ன பொற்காலமா? உம்மைப் பொறுத்தவரை எது பொற்காலம்? எது பண்பாடு? விளக்குங்களேன் தெரிந்து கொள்கிறோம்.

  ஆபிரகாம் பண்டிதரின் தமிழ் இசை ஞான மரபு தெரியும். அது என்ன இந்து ஞான மரபு? தத்துவம் என்று சொல்லி ‘பன்றி எதற்கு தங்கத்தில் மூக்குத்தி’?

  \\ஆயிரம் அல்ல 2000 ஆண்டுகளுக்கு மேலாக என்று மாற்றி கொள்ளவும்.. இதற்க்கு பார்பனர்களின் பிழைப்புவாதம் கூட காரணமாக இருக்கலாம். வேதத்தில் இருக்கும் அறிவு கருவூலங்களை விட்டு. அதன் ஒரு அங்கமான வெறும் யாகங்களை செய்து பொருளீட்டும் விச்யதிர்க்காக மட்டும் அவர்கள் வைத்து கொண்டார்கள். அதனால் தான் வரலாற்றில் வேதங்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது\\

  சரி. வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வருண சிந்தாமணி எழுதி, வேளாள சாதியே சிறந்தது என்று பிள்ளைமார்கள் சொல்லவில்லையா? சித்தூர் அதலாத் கோர்ட் தீர்ப்பில் வேதத்தின் படி நாங்களே சிறந்தவர்கள் என்று ஆசாரிகள் சொல்லவில்லையா? ‘வன்னிய சத்ரியாஸ்’ என்று சொல்பவனும் வேதத்தையும் புராணத்தையும் வைத்துதானே சாதிப் பெருமை பேசுகிறான்? இந்து மதமே கொடூரங்களின் கூடாரம் எனும் போது ஒரு இந்துவிற்கு சமூகம் என்பது தான் சாதி எனும்பொழுது (அம்பத்கேர் கூறியது) அறிவு கருவூலங்களைப் பற்று பேச என்ன யோக்கியதை இருக்கிறது தாயுமானவன்?

  \\ஆம் நானும் அதை தான் கூறினேன்..தனக்கு உந்துதலாக இருப்பதாக தான் அவர் கூறினார் என்று சொன்னேனே தவிர அதில் இருந்து தான் அணு ஆயுதத்தை தயாரிக்க அவர் “Formula” வை எடுத்து கொண்டார் என்று எங்கும் நான் கூறவில்லையே.. உந்துதல் என்பதற்கு ஆங்கிலத்தில் inspiration என்று தான் சொல்வார்கள்..\\

  உந்துதல் குறித்து நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்; “நம்முடைய வரலாற்றில் புராணங்களும் வேதங்களும் சாதிப் பெருமை பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட பொழுது ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்கு இவை எப்படி inspiration ஆக இருந்தது என்பதை விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.”

  பதில் வரவில்லை. என்ன காரணம்? யார் செய்த தாமதம்?

  சென்ற பதிவில் வேதத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக மாட்டுக்கறி பிரதான உணவு என்று வேதங்களில் இருந்து சான்றுகளை வைத்து இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

  “நீங்களாவது முட்டாள் இல்லையென்றால், வேதத்தில் மாட்டுக்கறி பிரதான உணவாக இருக்கும் போது, இந்து வெறியர்கள் ஏன் பசுமாட்டை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் என்பதையும், செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் அடித்தே சொல்லப்பட்டனர் என்பதையும் அம்பலப்படுத்துவதற்கு எங்களுடன் நீங்கள் வருவீர்களா தாயுமானவன்.”

  “…gam alabhate [2]; yajno vai gauh; Yajnam eva labhate; atho annam vai guah; Annam evavarundhe….

  ‘(At the horse-scarifice) he (the Adhvaryu) seizes (binds) the cow (i. e. cows). The cow is the sacrifice. (Consequently) it is the sacrifice he (the scarificer) thus obtains. And the cow is certainly is food. (Consequently) it is food he thus obtains’
  English Translation by Paul-Emile Dumont, Proceedings of the American Philosophical Society 92.6 (December 1948). Page. 485.

  டி. என். ஜாவின் ‘the myth of the holy cow’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
  இதை ஆதாரமாக கொண்டு ஆர். எஸ். எஸ் மற்றும் பிஜேபியை அம்பலப்படுத்த ஒரு இந்துப் புருசனாக வருவீர்களா தாயுமானவன்?

  நம் நாட்டில் இதற்கே துப்பில்லாமல் எள் காய்கிற இடத்தில் எலிப்புழுக்கையாக ஐன்ஸ்டீன், ஹெய்மரையும் வேத புராணத்திற்கு ஆதரவாக இழுப்பதற்கு சிறிதளவும் வெட்கப்படவில்லையா?”

  இதற்கு இன்னும் பதில்வரவில்லை.

  நீங்கள் எங்களுடன் பழகுவதற்கு உணவு சுத்தசைவமாக இருக்கவேண்டும் என்று நிபந்தனை வேறு போடுகீறிர்கள். காந்தி வேறு ஹரிசன் என்று பெயர் வைக்கிறார்.

  பெயர்வைத்தவரைப் பார்த்து “ஹரிசன் என்று பேருவைக்க யாரடா நாயே?” என்று நாங்கள் விமர்சனம் வைத்தோம். நீங்கள் வேதத்தைப் பயன்படுத்தி பசு புனிதம் இல்லை என்று ஒரு இந்துவாக அம்பலப்படுத்தாவிட்டால் உங்களைப் பற்றியும் பாடல் எழுதுவோம். தர்மசிரத்தையோடு பரிசீலிப்பீர்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி நமக்கு அறிவியல் சுட்டுப்போட்டாலும் வராது என்பதை சண்டபிரசண்டமாக ருசுவாக்கீவிட்டீர்! சமேத ஸ்ரீ பகவதே நமஹ!

  • இது மட்டுமின்றி எல்லா நவீன அறிவியியல் கண்டுபிடிப்புகளும் “இந்து ஞான மரபினால்” உத்வேகம் (Inspiration) பெற்று உருவானவை என்பதால் அதற்கு வடிவுரிமைகளை (Patents & Copyrights) பெற்று வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும், அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொம்பு தூக்கும் பா.ஜ.க பரிவாரங்களுக்கும் எதிராக போராட வருவீர்களா தாயுமானவன்?

   முக்கியமாக, இந்திய வேளான் மரபை திருடி அவற்றுக்கு கயமைத்தனமாக வடிவுரிமை பெற்றிருக்கும் அமெரிக்காவுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த (பிஜேபி உட்பட) இந்திய அரசுகளுக்கும் எதிராக போராட எங்களுடன் கைகோர்ப்பீர்களா தாயுமானவன் அல்லது அதற்கும் நாங்கள் சுத்த சைவர்களாக இருக்க வேண்டுமா ?

  • தென்றல், உங்கள் கவனத்திற்கு – சிறு திருத்தம் – ராபர்ட் ஓபன்ஹெய்மரும், ஓட்டோ ஹானும் வேறு வேறு நபர்கள். ஓட்டோ ஹானே லிசா மைட்னருடன் ஆய்வில் ஈடுபட்டு பின்னர் அவரை புறக்கணித்துவிட்டு நோபல் பரிசை பெற்றார்.

 20. ஆணி ,தென்றல் போன்றவர்கள் கேட்டுக்கும் தர்க்க பூர்வமான ,அறிவியல் பூர்வமான கேள்விகள் இந்து-சாதி வெறியார்களின் சில்லி மூக்கை உடைத்து இரத்தம் சொட்ட வேக்கின்றது.

  • அது என்னய்யா இந்து சாதி வெறியர்கள் ? இந்துவாக இருப்பவர்கள் எல்லாமே சாதி வெறியர்களா ?

   • நந்தன் அவர்களே,

    இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும் சாதி வெறியர்கள் அல்ல.
    அனால் சரவணன் அவர்கள் குறிப்பிட்டது அனைத்து இந்துக்களையும் அல்ல, இந்த பதிவின் பின்னூட்டங்களில் விவாதம் செய்த குறிப்பிட்ட சில இந்து-சாதி வெறியர்கள் பற்றி தான்.
    நீங்கள் சாதி வெறியராக இல்லாத பட்சத்தில் நீங்கள் சரவணனின் பதிவிற்கு கோபப்படவேண்டிய அவசியம் இல்லை நண்பரே.

    • சிலர் இந்து மதத்தில் அறிவியல் இருப்பதாக நம்புகிறார்கள். இப்படி நம்புவதால் அவர் இந்து சாதி வெறியர்கள் ஆகி விடுவார்களா ?

     “இந்த பதிவின் பின்னூட்டங்களில் விவாதம் செய்த குறிப்பிட்ட சில இந்து-சாதி வெறியர்கள் பற்றி தான்.”

     எந்த அடிப்படையில் அவர்களை இந்து சாதி வெறியர்கள் என்று சொல்கிறீர்கள் ? பின்னூட்டங்களை மறுபடியும் படித்து பாருங்கள். யார் சாதியைப் பற்றி பேசுவது ?

     இந்துவாக தன்னை கூறிக் கொள்பவன், சங்கரரின் சாதீயத்தை ஒதுக்கி விட்டு அவரின் அத்வைதத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.

     • nanthan,

      “நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…”

      comment no 135 in
      https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#respond

      இதை கூறிய இந்து-சாதி வெறி — யார்?
      இது எந்த IIT யில் படித்தது ?
      சாதி வெறி பீடித்த இதை எதால் அடிக்கலாம் ?

      nanthan//எந்த அடிப்படையில் அவர்களை இந்து சாதி வெறியர்கள் என்று சொல்கிறீர்கள் ? பின்னூட்டங்களை மறுபடியும் படித்து பாருங்கள். யார் சாதியைப் பற்றி பேசுவது //

     • nanthan,

      “அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது.. இன்றும் கூட இந்த இரு துறைகளிலும் இருபவர்களுக்கு தான் மதிப்பும் கௌரவமும் அளிக்க படுகிறது.”
      comment 62 in
      https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#respond

      இதை கூறிய இந்து-சாதி வெறி — யார்?

      nanthan///சிலர் இந்து மதத்தில் அறிவியல் இருப்பதாக நம்புகிறார்கள். இப்படி நம்புவதால் அவர் இந்து சாதி வெறியர்கள் ஆகி விடுவார்களா ?//

    • இந்து-சாதி வெறியர்கள் பற்றி என் சார்பாக பதில் அளித்தமைக்கு நன்றி கற்றது கையளவு

     • சரி. தாயுமானவர் திருத்திக் கொள்ள வேண்டும். சாதி சாகவில்லையென்றால் இந்து மதம் சாகும். இதை தாயுமானவர் போன்றோர் உணர வேண்டும். அறிவு பிறப்பு சார்ந்ததில்லை, வாய்ப்பு சார்ந்தது. உருவ வழிபாடு செய்பவர்களை மிருகத்துக்கும் கீழே மதிக்கும் மனித கூட்டமும் உலகில் உண்டு. பிறப்பில் ப்ராமணனாக இருந்தாலும் இதே கதிதான். ஆப்கானிஸ்தானில் பிறந்த நாயும் , ப்ராமணன் உட்பட எல்லா சாதி இந்துக்களும் தீண்டக் கூடாதவை என்பதை உணர வேண்டும். அடிமை புத்தி உள்ளவனுக்குத்தான் தனக்கு ஒரு அடிமை வேண்டும் என்று தோன்றும்.

      • ‘தாயுமா’க்கு அட்வைஸ் செய்த உடனே flightலுல ஏறி சர்ருனு ஆப்கான் போயிட்டிக்களே தல !

       நம்ம ஊரு மேட்டருக்கு வாங்க தல !

       இந்து மதம் என்று எதுவும் கிடையாது தல . பார்பனர்கள் தங்கள் வாழ்க்கை முறையை பார்பனர் அல்லாதவர் மீதும் ஏற்றி அவர்களையும் இந்துகளாக மாத்திடாங்க!

       நம்ம பாட்டன், முப்பாட்டன்…… காலத்துல நாம நம்ம குல தெய்வத்துக்கு தானே கடா வெட்டி,கள்ளு குடித்து வழிபட்டேம்.

       “சிறுதினை மலரொடு,மறி அறுத்து” உண்டு வாழ்ந்த திருமுருகாற்றுப்படை அசைவ முருகன் பார்பனர்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்ட கதை தெரியுமா தல ?

       http://vansunsen.blogspot.in/2014/01/murugan-is-nonvigitarian.html

       //ஆப்கானிஸ்தானில் பிறந்த நாயும் , ப்ராமணன் உட்பட எல்லா சாதி இந்துக்களும் தீண்டக் கூடாதவை என்பதை உணர வேண்டும். அடிமை புத்தி உள்ளவனுக்குத்தான் தனக்கு ஒரு அடிமை வேண்டும் என்று தோன்றும்.//

       • சரவணன், எனக்கு இந்தியா எப்படியோ அப்படித்தான் ஆப்கானிஸ்தான். இரண்டுமே தூர தேசம்தான். இந்தியா உங்க ஊரு, எங்க ஊரு இல்ல.

        எனக்கு முழுமையாக இந்து மதம் பற்றி தெரியாவிட்டாலும் சிலநல்ல விசயங்களை ஏற்றுக் கொள்கிறேன். பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டுமே ஒன்றை ஒதுக்குவது அறிவுடைமை ஆகாது.

        மேலும் உங்க ஊர் சினிமா பாணியில் தல போடுவது அவ்வளவாக பிடிக்கவில்லை.

        • நந்தன் அவர்களே,

         தங்களின் பெயருடைய நந்தனாரின் உண்மை கதை உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.
         ஜோதியில் கரைந்தார் என்று கள்ளம் உரைத்து அவரை எரித்தது யார்?

         தாங்கள் இந்தியாவில் இல்லை என்கிறீர்கள். அப்போது இங்கு நடக்கும் சங்கதிகள் எல்லாம் தூர தேசத்தில் உள்ள உங்களுக்கு முழுவதுமாக தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலும் அயல்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழக நிலவரங்கள், இந்திய நிலவரங்கள் மேம்போக்காக தான் தெரிகிறது. முகநூல், ஆங்கில ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் மோடி புகழ் பரப்பும் கூலிகளின் பின்னூட்டங்களை மட்டும் படித்தால் இந்தியாவை பற்றி தமிழகத்தை பற்றி தவறான கண்ணோட்டமே வரும்.

         இந்து மதத்தினில் உள்ள நல்ல விடயங்களை நானும் தான் ஆதரிக்கிறேன். பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஒன்றை ஒதுக்குவது அறிவுடைமை இல்லை தான். ஆனால் அவர்கள் காலம் காலமாக நம் அனைவரின் மூளையையும் மழுங்கடித்து செய்த வேலைகளின் வரலாற்றை தெரிந்தும் அவர்கள் சொல்வது அத்தனையும் எப்படி நாம் நம்ப முடியும்.

         இராமாயண, மகாபாரத, புராண கதைகளின் மூலம் பார்ப்பனர்கள் பொதுமக்களின் மூளையை மழுங்கடித்து வந்துள்ளனர். எல்லோருக்கும் ஒரு சட்டம் என்றால் அதில் பார்ப்பனர்களுக்கு மட்டும் விதிவிலக்கு. மற்ற சாதியினர் தவறு செய்தால் கொலை தண்டனை. ஆனால் பார்ப்பனர்களை வெறும் ஒதுக்கி வைப்பது, நாடு கடத்துவது போன்ற மென்மையான தண்டனை. பார்ப்பனர்களை கொல்ல கூடாது என பயந்து தான் அவர்களை கொன்றால் பிரம்மகத்தி தோஷம் என்று பயமுறுத்தி வந்துள்ளனர்.

         மேலும் தற்கால நிகழ்வுகளிலும், அலுவலகங்களில் மேலிடத்தில் “போட்டு கொடுத்து” பெயர் வாங்குவது, மேலதிகாரியை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து அளித்து காக்காய் பிடிப்பது போன்ற அவர்களின் செயல்களை நேரடியாக பார்த்து அனுபவப்பட்டவன் நான். தேவைபட்டால் எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே உல்டாவாக திருப்பி போட்டு கோயபல்ஸ் வகை பிரச்சாரம் செய்ய துணிந்தவர்கள் என்பதை நேரடியாகவே பல முறை கண்டுள்ளேன். சில சமயம் என்னையும் பார்ப்பனன் என்று நம்பி அவர்கள் வட்டத்திற்குள் என்னை சேர்த்து அவர்கள் பேசும் விடயங்களை நேரடியாக கேட்டு வந்துள்ளேன்.

         வெளி உலகத்திற்கு அவர்கள் நேர்மை, நியாயம், நீதி, தேசபக்தி என்று பல வகை முகமூடிகளை போட்டுகொன்டாலும், உள்ளூர அவர்களின் எண்ண ஓட்டங்கள் என்ன என்பதை அருகில் இருந்து பார்த்தவன் என்ற வகையில் எனக்கு அவர்கள் சொல்வதை சந்தேகம் கொள்ளாமல் அப்படியே நம்புவதில் எனக்கு விருப்பம் இல்லை.

         பார்ப்பனர்கள் எல்லோரும் தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் சில செய்கைகள் (போட்டு கொடுப்பது, காக்காய் பிடிப்பது) எனக்கு அவர்கள் மேல் ஒரு அவநம்பிக்கை கொள்ள காரணமாக உள்ளது.

        • தலைவர் என்பதை சுருக்கி தல என்று அழைத்ததே உங்களுக்கு பிடிக்கவில்லை. சரி இனி அழைக்கவில்லை.

         பார்பனர்கள் இந்து மதம் பற்றி கூறியதில் எது சரி என்று நீங்கள் கூறினால் நானும் ஆய்வு செய்து சரி என்றால் ஏற்கிறேன்.

         மேலும் நம் தமிழ்ர்களீன் வழிபாட்டு முறை “சிறு தெய்வ” வழிபாட்டு முறை சார்ந்தது. பார்பனர்கள் வழிபாட்டு முறை ஆரிய வேதம் சார்ந்த தெய்வ[ஷிவா,விஷ்ணு,பிரம்மா] வழிபாட்டு முறை சார்ந்தது.

         //எனக்கு முழுமையாக இந்து மதம் பற்றி தெரியாவிட்டாலும் சிலநல்ல விசயங்களை ஏற்றுக் கொள்கிறேன். பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டுமே ஒன்றை ஒதுக்குவது அறிவுடைமை ஆகாது.//

         • Mr. Saravanan

          //தமிழ்ர்களீன் வழிபாட்டு முறை “*** தெய்வ” வழிபாட்டு முறை சார்ந்தது.//

          இவ்வளவு முற்போக்காக பேசும் நீங்களே நமது தெய்வங்களை சிறுமை படுத்துவது கண்டு மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது.
          தெய்வங்களுக்கு சிறு பெரு போன்ற அடையாளங்கள் ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களால் கற்பிக்கபட்டிருக்கின்றன. மற்றவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வது முட்டாள்தனம்.

          • Mr Univerbuddy,

           சிறுதெய்வம் to -> நாட்டார் தெய்வம்.

           Is it right Univerbuddy?

          • Mr. Saravanan,

           Still not right. It means Gods of villagers and so it is not right. I would say குல தெய்வங்கள். The thing is one should make them to be main gods instead of making them to be something else. All other gods you mentioned are also Aryans’ and others’ குல தெய்வங்கள். We can discuss if you have anything more to say.

          • yes you are right “குல தெய்வங்கள்”.

           It is a correct term we can use.

          • இத்தகைய “சிறு தெய்வங்கள்” ஊர்காவல் தேவதைகள், தான் நம் முன்னோரின் உண்மையான தெய்வங்கள். மற்றவை எல்லாம் இடைச்செருகல்கள் தான்.

           முருகன், குமரன் – ஆதிகால திராவிடர்கள், மலைவாழ் குறவர்களின் தெய்வம். அதை ஆரியர்கள்,பார்வதியை நோக்கி பாய்ந்த சிவனின் ஸ்கந்தம் டார்கெட் மிஸ் ஆகி அது பொதிகை ஆற்றில் விழுந்து ஸ்கந்தத்தில் இருந்து கந்தனாக மாறியது என்று கதை திரித்து நம்மவர்களை ஏமாற்றினார்.

           சேரநாட்டில் இருந்த எல்லைக்கடவுளான அய்யப்ப சாமியை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தையாக கதை விட்டு கோவிலை கைபற்றினார்.

           திருப்பதியில் இருப்பது கூட பெருமாள் சிலை அல்ல. காளி சிலை தான்.
           திருப்பதி சிலையின் பின்புறம் பார்த்தால் நீண்ட கூந்தல் முடிப்போடு இருக்கும் பெண் வடிவத்தை காணலாம்.

          • Mr. Saravanan,

           அம்மன் போன்ற தெய்வங்களுக்கும் குல தெய்வங்களுக்கும் சிறுது வேறுபாடு இருப்பதால் அம்மன் போன்ற தெய்வங்களுக்கு தமிழர்/ திராவிடர் தெய்வங்கள் என்று அழைக்கலாம்.

           All we need is a little bit of imagination and sense of self-respect.

      • நந்தன் உங்கள் வாதத்தை மறுக்கிறேன்.
       சாதி அழிந்தால் பார்பன-இந்து மதமும் அழீயும் ஏன் எனில் பார்பன-இந்து மதமே சாதிய்த்தீன்[@@@ 4+1வர்ணத்தீன்] அடிபடையில்[base] கட்டபட்டது தானே !

       @@@
       பிராமண
       ஷத்ரீய
       வைசீய
       ஷுத்ர
       பஞசம

       //சாதி சாகவில்லையென்றால் இந்து மதம் சாகும்//

      • நந்தன் ,

       இது மிகவும் நேர்மையான அனுகுமுறை
       நன்றி

       //அறிவு பிறப்பு சார்ந்ததில்லை, வாய்ப்பு சார்ந்தது. //

       • சரி. எனக்கு சரியாக தெரியவில்லைதான். இங்கே எங்களை இந்துக்கள் என்றுதான் கூறிக் கொள்கிறோம். 90% காதல் திருமணம் என்பதால் சாதி கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டது.

        எனக்கு அத்வைதம் பிடித்திருக்கிறது. முழுமையாக தெரியாவிட்டாலும் ஓரளவுக்கு படித்திருக்கிறேன்.

        தண்டனை முறையை நானும் படித்திருக்கிறேன். கருட புராணம் கிடைத்தால் படித்து பாருங்கள். இன்னும் கேவலமாக இருக்கும்.

        சாதி வெறியை சினிமாவிலும் , செய்தியிலும் பார்த்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் நேரில் அனுபவித்ததால் கோபம் அதிகம் இருக்கலாம்.

        சீனர்கள் உட்சாதிக்குள் திருமணம் செய்வதை ஆதரிப்பதில்லை. கலப்புதான் “புதிய” ” சிறந்ததை” உருவாக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போலவே அவர்கள் சிறந்தும் விளங்குகிறார்கள்.

        நமது இன மர மண்டைகளுக்கு எப்பொழுதுதான் இதெல்லாம் விளங்க போகிறதோ தெரியவில்லை.

        • ஆம் நீங்கள் கூறுவது போல சாதி கலப்புதான் அறிவியல் படி சிறந்தது. [நம்பிக்கை மட்டும் அன்று ]

         என்ன பயம் நந்தன்?

         தைரீயமாக கூறுங்கள் “நமது தமிழ் நாட்டு மர மண்டைகளுக்கு எப்பொழுதுதான் இதெல்லாம் விளங்க போகிறதோ தெரியவில்லை” என்று கூறுங்கள்!

         உங்கள் வாதத்தில் இருந்து உங்களை secular Hindu ஆக கருதமுடிகிறது. நன்று.

         //சீனர்கள் உட்சாதிக்குள் திருமணம் செய்வதை ஆதரிப்பதில்லை. கலப்புதான் “புதிய” ” சிறந்ததை” உருவாக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போலவே அவர்கள் சிறந்தும் விளங்குகிறார்கள்.

         நமது இன மர மண்டைகளுக்கு எப்பொழுதுதான் இதெல்லாம் விளங்க போகிறதோ தெரியவில்லை.//

        • All good,but Caste is not an ethnic marker.

         To achieve pluralism in DNA,you have to go and marry someone atleast from another state and even that wont count much.

         All Tamils dont have much difference in genes,perhaps one thing to avoid is marrying within family.

 21. பகவத் கீதையிலிருந்து தான் பகவான் பிறந்தார். பகவானிடமிருந்து தான் பகவத் கீதை பிறந்தது.பகத்சிங் கூட பகவத் கீதையின் மறுபதிப்பு.ஆம்ஸ்டிராங் நிலவுக்குப் போகும்போது பகவத் கீதையை பைபிளுக்குப் பின்னால் ஒழித்து வைத்து எடுத்துப் போனார்.என்ன வேண்டுமானாலும் சொல்லலாம