Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்

வெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்

-

நாள் : 16-12-2014 12 noon

ரவு முழுவதும் சுமார் 400 பேர் ஆற்றுக்குள்ளே திறந்த வெளியில் பனியில் படுத்து உறங்கினர். வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தினர் இரவு உணவு தயாரித்து வழங்கினர்.

reclaim-vellaru-night-1மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் அனைவரும் மக்களுடன் கலந்து ஆற்றிலேயே உணவுண்டு, உறங்கினர். கிராமத்திலிருந்த ஒருவர் ப்ரொஜெக்டர் (ஒளித்திரை) மற்றும் டிஷ் ஆண்டனா கொண்டுவந்து செய்திகளை ஒளிபரப்பினார், போராட்டச் செய்திகளை கண்டனர் மக்கள்.

reclaim-vellaru-strugge-32-வது நாள் அதிகாலை எழுந்த மக்கள் சுறுசுறுப்பாக வேலைகளை செய்யத் தொடங்கினர் காலை 7.30 மணிக்கு சன் செய்தியில் விரிவான பிரதானமான செய்தியைக் கண்டனர். இதற்க்கிடையில் மணல் மாஃபியாவினுடைய கையாட்களான சுமார் 25 பேர் எதிர்க்கரையில் கூடி மணல் அள்ளப் போவதாக செய்திகளை கசியவிட்டனர். இதை அறிந்த மணல்கொள்ளைக்கு எதிராக போராடும் மக்கள் ஒன்று திரண்டு ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

reclaim-vellaru-strugge-5காலை 9 மணிக்கு மேல் அதிக அளவில் திரண்டு வந்த போலீசு மணல்கொள்ளைக்கு ஆதரவாக பேசி மக்களை திருப்பி அனுப்ப முயற்சித்தனர். இதைவிட அதிகமான போலீசு 10-க்கும் மேலான போராடும் கிராமங்களுக்கு சென்று வீடு வீடாக போய் போராட ஆற்றுக்கு போகக்கூடாது என மக்களை மிரட்டியுள்ளனர்

இதையும் மீறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஆற்றை பாதுகாக்க ஆற்றுக்குள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

reclaim-vellaru-strugge-1பெண்கள் பலவீனமாக இருப்பார்கள் என்று நினைத்த போலீசு அவர்களை மிரட்டி தடுத்தனர். அதற்கு அவர்கள்,  “எழவு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம்” என்று சொல்லி மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

(செய்திகள் தொடரும்……)

நள்ளிரவிலும் தொடர்கிறது வெள்ளாறு முற்றுகை – ராஜுவுடன் நேர்காணல்

டிசம்பர் 2-ம் தேதி நடைபெற்ற முற்றுகை போராட்டம் – வீடியோ

தகவல்
வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்,
மணல் குவாரி முற்றுகை போராட்டத்திலிருந்து

முந்தைய செய்திகள்