கோக்-பெப்சி : கொலைகார கோலாக்கள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2017

0
15

நீரின்றி அமையாது உலகு” என்பது குறள். உயிரின் ஆதாரமான நீரை லாபத்தின் ஊற்றாக கருதுகிறது உலக முதலாளித்துவம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மண் தனியார்மயமாகிவிட்டது. இது மழை தனியார்மயமாகி வரும் காலம்.

தமிழகத்துக்கு உரிமையான காவிரி நீரை கர்நாடகம் மறுப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் விளைவாக தஞ்சை பாலைவனமாகி வருவதும் தெரியும். தஞ்சை மட்டுமல்ல, தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. விவசாயிகள் சாகிறார்கள், கால்நடைகள் சாகின்றன, விலங்குகள் காடுகளிலிருந்து தண்ணீர் தேடி நகரத்துக்குள் நுழைகின்றன, மக்கள் குடிநீரைத் தேடி வீதி வீதியாக அலைகிறார்கள்.

கிருஷ்ணா நீருக்காக ஆந்திரத்திடம் கெஞ்சுகிறது தமிழக அரசு. கடல் நீரைக் குடிநீராக்குகிறது. குவாரிகளில் தேங்கியிருக்கும் நீரை குடிநீராக்குகிறது. அடுத்து சாக்கடைத் தண்ணீரைக் குடிநீராக்க முடியுமா என்று யோசிக்க வேண்டிய நிலையில் தவிக்கிறது தமிழகம்.

இப்படிப்பட்ட சூழலிலும், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்க அனுமதிக்கிறது தமிழக அரசு. தமிழகத்தின் இளைஞர் சமூகமும், வணிகர் சமூகமும் கோக் பெப்சிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகின்றன. இந்த சூழலில் மோடியை சென்று சந்திக்கிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவர். கோக் பெப்சி நிறுவனத்து தண்ணீரை உறிஞ்சி விற்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

ஒரு லிட்டர் கோக் தயாரிக்க ஏழு லிட்டர் கழிவுநீரை வெளியேற்றுகின்றன கோக்-பெப்சி ஆலைகள். வெளியேறும் ஒவ்வொரு லிட்டர் கழிவு நீரும் மேலும் எட்டு லிட்டர் நிலத்தடி நீரை மாசுபடுத்திப் பயனற்றதாக்குகிறது என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.

ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஆப்பிரிக்க – ஆசிய நாடுகளில் குடிநீரின்றி வெளியேறும் மக்களை “தண்ணீர் அகதிகள்”என்கின்றனர். இவர்கள் வானம் பொய்த்ததனால் அகதிகளானவர்கள் அல்ல. பணமில்லாத காரணத்தினால் அகதிகளானவர்கள். பட்டினிச் சாவை உலகுக்கு வழங்கிய முதலாளித்துவம், அடுத்தபடியாக தாகச்சாவை வழங்குகிறது. குளிர்பானங்கள் எனப்படுபவை தாகத்தை தணிப்பவை அல்ல, தாகத்தால் மக்களை தவிக்க வைப்பவை.

தண்ணீரைப் பண்டமாக்கி விற்பவர்கள் மனித குலத்தின் எதிரிகள், கொடிய பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளுக்குத் துணை நிற்பவைதான் மத்திய மாநில அரசுகளும் நீதிமன்றமும் என்ற உண்மையை, காலிக் குடங்களுடன் சாலைகளை மறிக்கும் பெண்களுக்குச் சொல்லுங்கள்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

 • தண்ணீர் தனியார்மயம் : பேரழிவின் தொடக்கம் !
 • அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர் !
 • உலக வங்கி – சர்வதேச நாணயநிதியம் : பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் !
 • ராஜஸ்தான் : கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்
 • குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில் ! – சாய்நாத்
 • பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
 • கோக் எதிர்ப்பு : பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி !
 • மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !
 • காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
 • கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
 • நெல்லையைக் குலுக்கிய கோக் எதிர்ப்புப் போராட்டம்
 • கோக் – பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

சந்தா