ஞ்சை மாவட்டம், வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது, தமிழகம் முழுவதிலுமிருந்து பொறுக்கியெடுத்த 145 இளைய குண்டர்களுக்கு நடத்தப்படும் இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த 12-ம் தேதி முதல் இங்கு வந்து பயிற்சியளித்து வருவதாக ஓரிரு செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அப்பல்கலைக் கழகத்தில் 400-க்கும் மேற்ப்பட்ட  போலீசைக் குவித்தும், பயிற்ச்சி நடக்கும் 2 கட்டிடங்களைச் சுற்றி இரும்புத்திரை கொண்டு மறைக்கப்பட்டும், கண்காணிப்பு கோபுரம், வெள்ளமென ஒளி உமிழும் விளக்குகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்திலும் பிற வட மாநிலங்களிலும் கலவரத்தை நடத்தியே கட்சியைக் கட்டியும் சிறுபான்மையினருக்கெதிரான பச்சைப் படுகொலைகளை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் காலூன்ற முடியாததால் தமிழிசை தலைவிரி கோலாமாக திரிய, பொன்னாரும் எச்.ராஜாவும் புலம்பியும் வருகின்ற சூழலில் ஜெயலலிதா மரணத்தை ஒட்டி எழுந்துள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வை பிளவு படுத்தியும் அதன் இரண்டு அணியினரின் கிரிமினல்-குற்றச் செயல்களை வைத்து மிரட்டி, ஒரு பினாமி ஆட்சியை நடத்தி வரும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தினர். சில நட்களுக்கு முன்பு கோவையில் அமிர்தா கல்லுரியிலும் கடந்த  திருச்சி சாஸ்த்ரா போன்ற பல கல்லூரிகளிளும் சித்தாந்த மற்றும்  ஆயுத பயிற்சியை அளித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவன் மோகன் பகவத்

உலகில் ஹிட்லருக்கு அடுத்து மிக கொடூரமான மனித குல விரோத சித்தாந்தத்தை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ம் பா.ஜ.க உள்ளிட்ட அதன் பல்வேறு உறுப்புக்களும் இந்தியாவிலிருப்பதே நமக்கு அவமானகரமானது. இந்திய மக்களை உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. பெரியார் பிறந்த தமிழகம் ஆரிய-பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் அதன் அடிப்படையிலான சாதிய கட்டமைப்புக்கும் எதிரான போராட்டத்தில் கணிசமான வெற்றிகளைப் பெற்ற மாநிலமாகும். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான பூமியாகும். இங்கு குஜராத் போன்ற ஒரு கொடூர மதக் கலவரத்தைப் பற்றி சிந்திப்பதே அதிர்ச்சியளிக்கிறது.

ஆனால், பா.ஜ.க, இந்து முன்னணியில் இருந்த சிலர் தங்கள் தொழில் போட்டி, கிரிமினல் நடவடிக்கைகள், கள்ளத் தொடர்புகள் போன்றவற்றால் கொல்லப் பட்டதையெல்லாம் கூட மத விவகாரமாக்கி கலவரத்தை தூண்டி வருகின்றனர். தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டும், தன்னைக் கடத்தியதாக தானே நாடகமாடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் இந்த பயிற்சியும் இதில் அதன் தேசிய தலைவர் மேகன்பகவத் பங்கேற்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

தஞ்சை – திருச்சி சாலையில் இருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது. இது முற்போக்கு சக்திகள், ஜனநாயக வாதிகள், தலித்துகள், இசுலாமியர்கள் அனைவரையும் கவலை கொள்ளச்செய்யும் செய்தியாகும். இத்தகைய கொலைபாதக செயலை தடுக்காமல் அதற்கு 300-க்கு மேற்பட்ட காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குறியது.

ஆட்சியையும் பதவியையும் காத்துக் கொள்வதற்காகவும் தங்கள் ஊழல் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எடப்பாடி அரசு தமிழ்ச்சமூகத்துக்கு எதிரான இச்செயலில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டித்தும்,இதற்கு இடமளித்து, பல்கலைக்கழகம் என்ற அர்த்தத்துக்கே எதிராக செயல்படும் சாஸ்திரா-வை இனியும் பல்கலைக்கழகமாக பார்க்க முடியாது. எனவே, சாஸ்திரா பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும் என்று கோரியும். மதக்கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பயிற்சியளிக்க வந்துள்ள மோகன் பகவத்தை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் 15.05.2017 அன்று காலை 11மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையின் முன்பாக ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் கூட்டத் தலைவர் மோகன் பகவத்தின் உருவ பொம்மையை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட துணை செயலர் தோழர் விஜய் தலைமையில் எரிக்க முயன்றனர்.

ஆனால் பா.ஜ.க.வின் அடிமை விசுவாசி ஈ.பி.எஸ்-ன் காவல் துறையோ எரிக்க விடாமல் தடுக்க முயன்று இறுதியில் மோகன் பகவத்தை(உருவ பொம்மையை) தலை தனி முண்டம் தனியாக பிய்த்து எடுத்தனர். இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர் விஜய், தோழர் துடிமாறனை காவல் துறை வெறி கொண்டு தாக்கி ரத்த காயத்தை ஏற்ப்படுத்தியது. தோழர் லதாவின் உடையை கிழித்து வெறித்தனமாக “பெண்” காவலர்கள் நடந்து கொண்டனர். அருகில் உள்ள டீ கடை, ஜூஸ் கடைகளில் இருந்தவர்கள், பேருந்து பயணிகள்  காவல் துறையின் இந்த அராஜகத்தை கண்டு எள்ளி நகையாடினர்.

மக்கள் கூட்டத்தை கலைந்து போகுமாறு காவல் துறை கூற அவர்கள் எங்களுக்காகத்தானே போறாடுராங்க நாங்க இங்கதான் நிப்போம் என்று கூறி செல்போனில் படம் எடுக்க ஆரம்பித்தனர்.  எதுவும் செய்யமுடியாமல் காவல் துறை பின்வாங்கியது. இப்போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அருகில் இருந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் அபிமானி மோகன் பகவத் என்ன சமூக விரோதியா இவங்க யாரு அவர வரக்கூடாதுனு சொல்ல” என்றார். அருகில் இருந்த மற்றொருவர் “இவங்களுக்கெல்லாம் என்னங்க குஜராத்துக்கு போயி பாத்தாதாங்க தெரியும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜெ.பி காரன் எப்படி மக்கள கொல்றானு. இவங்க பன்றதுதான் தம்பி சரி ” என்றார்.

கைதாகி மண்டபத்தில் காவல்துறை நடந்து கொண்ட அராஜகத்தை கண்டித்து தோழர்கள் வழக்குப் போடுவதாக கூறியதும் காவல்துறை பணிந்து போய் இனி இது போன்று நடக்காது  அவர்களுக்காக நாங்கள் மனிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என் கெஞ்சியதன் அடிப்படையில் இந்த விசயம் கைவிடப்பட்டது. அதன் பிறகு மண்டபத்தில் நிகழ்ச்சிகள் ஒருங்கினணக்கப்பட்டு பாடல், பேச்சு என நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இம்மண்டபத்தில் போக்குவரத்து தொழிலாளர்களும் கைதாகி இருந்தனர். அவர்கள் பு.மா.இ.மு வின் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர் . மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் போஜகுமார் மற்றும் ஆதியும் வாழ்த்திப் பேசினர்.

வறட்சியும், வறுமையும் கடன் சுமையும் ஆளான விவசாயிகளின்  தற்கொலை,  தொழில் முடக்கம், டாஸ்மாக் சீரழிவு, இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்றி தவிக்கும் அவலச் சூழல் ஆகியவற்றால் குமுறிக்கொண்டிருக்கும் தமிழகத்தை அப்பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி மதக்கலவர பூமியாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொடும் செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்த்து நிற்க வேண்டியது அவசர அவசியம் என்று பு.மா.இ.மு தோழர்கள் போரட்டத்தை பார்த்து கொண்டிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

5 மறுமொழிகள்

  1. //மனிதகுல விரோத சித்தாந்தத்தை வைத்திருக்கும் ஆர் எஸ் எஸ்சும் அதன் உறுப்புகளும் இந்தியாவில் இருப்பதே நமக்கு அவமானகரமானது//அற்ப்புதமான மிகத்துல்லியமான வரிகள்.ஒட்டுமொத்த கட்டுரையின் சாரம் பிழியப்பட்ட வரிகள்.

  2. மிக விழிப்போடும் எச்சரிக்கையோடும் தமிழர்கள் இருக்க வேண்டிய காலம்.விரல் விட்டு எண்ணக்கூடிய சில விஷ வித்துக்களை தூவி ஒரு பெரும் இன அழிப்பிற்க்கான கனவுகளோடு கழுகுகள் காரியமாற்றுகின்ற்ன.”பெரும் மக்கள் திரளில் ஒரு ஐந்தாரு கருங்காலிகள் போதாதா மக்கள் திரளை சிதரடிக்க “இதுதான் அவன் களின் திட்டம்.வெறிஏற்றப்பட்ட புல்லுருவிகள் மிக சொற்ப்ப எண்ணிக்கையில் எல்லாவற்றிலும் நுழைந்திருக்கிறது.”கணிசமாக இருக்குமோ”என்று நாம் எண்ணுமளவிற்க்கு அவைகள் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டிருக்கின்றன.இங்கும் இன்னும் கொஞசநேரத்தில் வந்து பாட்டுபாடத்துவங்கும்.அந்தந்த இடங்களுக்கு ஏற்ப குரலை மாற்றிக்கொள்ளும்.எல்லா வழியிலும் நாம் கவனமாய் இருந்து விரட்டி அடித்தாக வேண்டும்

  3. மனுநீதி பார்ப்பன சாஸ்த்ராவில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சியளிக்கும் விசயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களுக்கு நன்றி. காவிகளை தொடர்ந்து எதிர்ப்பதில் தோழர்கள் தான் முன்னிலையில் உள்ளனர். போலி ஜனநாயக வாதிகள் மக்களுக்கெதிரான ஊழல்போக்கினால் இன்று காவிகளிடம் சரணாகதி அடைந்துள்ளனர். பெரியார் பெயரை தங்களுடைய கட்சியின் பெயரோடு சேர்க்க இவர்களுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை.

  4. ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படவேண்டிய ஒரு இயக்கம்தான், அதே சமயம்…முஸ்லீம் தீவீரவாதத்தையும், ********பற்றியும் எழுத வேண்டும்… ஒரு வேளை அப்படி எழுத துப்பில்லை என்றால், மன்னிப்பு கடிதம் வெளியிட வேண்டும்… ********…

    • இந்தியன யாரும் கோவமூட்டாதீங்கபா!! டாக்டர் வேற அவருக்கு ஷாக்-கான நியூஸ்-லாம் படிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாராம்…பேசாம அவரு கேக்குற மாதிரி ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிடுங்கப்பா….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க