“அரசியல் அராஜகங்களுக்கு அக்கிரமங்களுக்கு முடிவு கட்டு !” என்ற தலைப்பில் விருத்தாசலம் வானொலித்திடலில் 28.11.2017 அன்று மாலை நடைபெற இருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீசு தடை!

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்று பொதுக்கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும்.

 

இந்த மாதம் முழுவதும் நான்கு முறை பெதுக்கூட்டம் நடத்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என மனு அனுப்பினோம். நான்கு முறையும் தெரு முனை பிரச்சாரம் உட்பட அனைத்திற்கும் முதல் நாள் இரவு அனுமதி மறுத்து கடிதம் வழங்குகிறது போலீசு.

ம.க.இ.க கோவன் வருகிறார் என கியூ பிரிவு போலீசார் சொல்கிறார்கள் எனவே அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் துறை வெளிப்படையாகவே மறுக்கிறது. சேத்தியாதோப்பு மணல் குவாரிக்கு எதிராக மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடுவது காவல் துறைக்கு தொல்லையாக கருதுகிறது.

கருத்துரிமை நசுக்கப்படுகிறது. நடப்பது போலீசு ஆட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கபட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 27.11.2017 அன்று பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி நடைபெற இருந்தது அதற்கும் முதல்நாள் இரவு 11.30 மணியளவில் அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளனர்.

நான் வைத்ததுதான் சட்டம் எந்த கோர்டுக்கு போனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் போலீசார் கூலிப்படையாக செயல்படுகிறார்கள். அதிகரித்து வரும் மக்கள் போராட்டம் போலீசுக்கு சரியான பாடம் புகட்டும். அதில் மக்கள் அதிகாரம் முன்னே நிற்கும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம். 97912 86994.

 

5 மறுமொழிகள்

  1. கூட்டத்திற்கே நீதிமன்றத்திற்கு அணுமதி கேட்கும் நீங்கள் ஆட்சி யை கைப்பற்ற போகிறீகளா

    • அனுமதி இல்லாத கூட்டத்தில் பங்கேற்பதற்கு உங்களைப் போன்ற ‘வீரர்கள்’ அஞ்சிச் சாகும் போது அனுமதி வாங்கி ஒரு கூட்டம் நடத்தி அதில் அனுமதியில்லாத கூட்டத்திற்கு வரவழைக்கும் அரசியல் சொல்லிக் கொடுத்து..இப்படித்தானே நடத்த முடியும்? ஆட்சி கைப்பற்றுவது என்று எதைக் கூறுகிறீர்கள்? கோட்டையில் கொடியேற்றுவதையா? எனில் எடப்பாடி புரட்சியாளரா?

      • மக்கள் அதிகாரம் தோழர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளவன் நான். என் ஊரில் மக்கள் அதிகாரம் அமைப்பு இல்லை.
        வேறு ஊரில் உள்ள உங்கள் தோழர் களுக்கு தஞ்சை மாநாட்டிற்கு நிதி கொடுத்தேன்.
        என் ஊரில் முற்போக்கு சிந்தனை கொண்ட நபர்களிடம் அறிமுகமும் நிதியும் பெற்று தந்தேன்.
        நீதிமன்றம் அநிதிமண்றமாக மாறிவிட்டது என்ற நிலையில் அதனிடமே அணுமதி என கோரியதாலும், பிற்போக்கு விழிப்புணர்வு இல்லாமை, சந்தர்பவாதம் பிழைப்புவாதமும் மக்களிடம் அதிகம் உள்ளது.
        இந்த மக்களை நம்பி புரட்சி எப்படி சாத்தியம் என்ற அடிப்படையில் கேள்வி கேட்டேன்.
        ஆனால் கேட்டவிதம் என்னை அதிமுக பஜக காரன் போல உங்களுக்கு தோற்றம் அளித்துவிட்டது.

    • அப்போ வேழவேந்தன் பாரதிதாசன் மாதிரி ‘பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் என்னாளோ?”ன்னு தயாரா இருக்காரு போலயே ..

      நீங்களே ஒரு நல்ல ஐடியா சொல்லுங்களேன் வேழவேந்தன்.

  2. வேழவேந்தன் நண்பா தோழர்களோடு தொடர்பில் இருக்கும் நீங்கள் அவர்களோடு காவல்துறை அனுமதி இதுபோன்ற விஷயங்களைக்கேட்டு விவாதிக்கலாமே.அப்படீ விவாதிக்கும் போக்கில் உங்களின் அரசியல் ரீதியிலான சந்தேகங்கள் தீரும்.உங்கள் ஊரிலும் மக்கள் அதிகாரம் உதிக்கும்.உங்கள் ஊர் காவல் நிலையத்தீல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அலையும் அரசியலும் நடக்கும்.அனுமதி கேட்காமலேயே நாம் கூட்டம் நடத்தப்போகும் “அரசியலும்” புரியும்.

Leave a Reply to சமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க