குஜராத் கொள்ளையர்கள் !

கருப்புப் பண உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான இருக்கும் வைரவியாபாரம் கொடிகட்டி பறப்பது குஜராத்தில்தான்.

ட்டை தீட்டப்படாத வைரத்தை இறக்குமதி செய்து, அதனைப் பட்டை தீட்டி ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் இன்று இந்தியா சர்வதேச அளவில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. அதேசமயம், இந்த வைர இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகம்தான் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதற்கு முக்கியமான வழியாகவும் இருந்துவருவதை மைய அரசின் தணிக்கைத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சுட்டிக் காட்டியுள்ளன.

செயற்கை வைரத்தைப் பட்டை தீட்டும் தொழிலில் குஜராத் மாநிலம்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதோடு, பா.ஜ.க.வின் அஸ்திவாரத் தூண்களுள் ஒன்றான பனியாக்கள்தான் இந்தத் தொழிலில் முழு ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சர்வதேச அளவில் வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துவந்த யூத மதத்தினரை இன்று இந்து பனியாக்கள் பின்தள்ளிவிட்டதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதிலிருந்து இந்தியாவின் வைர வியாபாரத்தில் நடந்துவரும் முறைகேடுகள், அதன் மூலம் உருவாகும் கருப்புப் பணம் மற்றும் கடத்தல் ஆகியவற்றின் கேந்திரமாக நரேந்திர மோடியின் குஜராத் இருப்பதை யாரும் ஊகிக்க முடியும். குஜராத்தில் பிறந்த, ஜெயின் மதத்தைச் சேர்ந்த பனியாவான நிரவ் மோடி திடீர் தொழில் அதிபராக உருவானதை இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால், அவரது வளர்ச்சியை யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இதுவொருபுறமிருக்க, மோடி அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, நிரவ் மோடி 90 கோடி ருபாய் ரொக்கப் பணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் செலுத்தி வெள்ளையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடி மீது சி.பி.ஐ.யில் மோசடி புகார் தெரிவிப்பதற்கு ஆறு நாட்கள் முன்பு நடந்த டாவோஸ் மாநாட்டில், அவர் தொழிலதிபர் என்ற போர்வையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் குரூப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு மோடியின் நெருங்கிய வட்டாரப் பிள்ளையாக இருந்திருக்கிறார்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க