மிழகத்தின் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2017 – ஆம் ஆண்டின்படி 518. அதில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரத்து ஐநூறு. எண்பத்தி ஒன்பது ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு ஒரு லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேரவில்லை. இது அரசே கொடுத்த புள்ளி விவரம்.

சென்ற 2017-ம் ஆண்டு நீட் தேர்வு குழப்பத்தால் பத்தாயிரம் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் கூடுதலாக சேர்ந்து விட்டனர். இந்த ஆண்டு தனியார் கல்லூரிகள் திகிலில் இருக்கிறார்கள். மாணவர்கள் சேர்க்கைக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆண்டுக்கு ஐம்பதாயிரத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களிடம் ஆட்டையை போட அலைந்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு இந்து பத்திரிகை போன்ற ‘மதிப்பு’ மிக்க ஊடகங்கள் துணை நிற்கின்றன. இப்படியாக ஊடகங்களும், சுயநிதிக் கல்லூரி முதலாளிகளும் சந்தையை காப்பாற்ற நினைக்கிறார்கள்.

சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் டிரேட் சென்டர் – வர்த்தக மையத்தில் வரும் நாட்களில் மேற்படி கல்வி சந்தைக்கான கண்காட்சியை அடிக்கடி காணலாம். அப்படி ஒரு கண்காட்சிக்கு வினவு செய்தியாளர்கள் சென்றிருந்தார்கள்.

சென்னை வர்த்த மையத்தின் வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரம். குழப்பத்திலிருந்து விடுதலையா, குழப்பத்தை வைத்து வழிப்பறியா?

சிவராமகிருஷ்ணன். தாம்பரம், தனியார் நிறுவன ஊழியர், ‘’பொண்ணு பிளஸ் டூ எக்ஸாம் எழுதி இருக்கு. அடுத்து எதை எடுப்பது என்று தெரியாமல் குழப்பமா இருக்கு. இங்க பல கல்லூரிகளின் வசதிகளைப் பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது. எப்படி இருந்தாலும் நம்ம பசங்க வாங்குற மார்க்குக்கு கவர்மென்ட் கல்லூரியில இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியிலதான் சேர்க்கணும். அதுக்கு இப்பவே எது நல்லதுன்னு தேடுறோம். பணம் செலவானாலும் ஒரு நல்ல கல்லூரியில சேர்த்துட்டோம்ன்ற ஒரு நிம்மதி நமக்கும் கிடைக்கும்.’’
ஹர்ஷிதா, பத்தாம் வகுப்பு மாணவி. ‘’பிளஸ் டூ-வில் எந்தப் பிரிவு எடுக்க வேண்டும், எதற்கு வருங்காலம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு வந்திருக்கிறோம். எம்.பி.பி.எஸ். தான் படிக்கணும்னு இல்ல. மருத்துவத்துலயே தொழில்நுட்ப பிரிவுகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். அது சம்பந்தமாக படித்தால் நல்லது என்று சொல்கிறார்கள். இன்னும் சுத்தி விசாரிக்க போறோம்.’’
சிவா, தாம்பரம் பிளஸ் டூ மாணவர். ‘’நான் இஞ்சினியரிங் EEE படிக்கணும்னு ஆசை. எந்த காலேஜ்ல சேர்ந்தா நல்லதுன்னு விசாரிக்க வந்தேன். பொறியியல் நுழைவுத் தேர்வு, நேர்காணலின் போது குழப்பம் வரக்கூடாது இல்லையா? அரசு பொறியியல் கல்லூரியில் சீட்டு கிடைப்பது சந்தேகம்.’’ என்றார்.
சிவக்குமார், காவல்துறை அதிகாரி, மேற்கு சைதாப்பேட்டை. ‘’என் மகள் பெயர் ஆர்த்தி. அவரை (clat) தேசிய சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறேன். எட்டாவது படிக்கும் போதே இதற்கான முயற்சியில இறங்கிட்டேன். கடந்த இரண்டு வருஷமா சென்னையில ஸ்ரீராம் அகாடமியில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். பெங்களூர் நேசனல் லா காலேஜ்தான் சிறந்தது. அதில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும். போலீஸ் துறையில் இருப்பதால் எனக்கு சட்டம் பற்றி தெரியும். போலீசு நாங்கள் சட்டத்திற்கு கீழ் படிய வேண்டும். ஆனால் வக்கீல்கள் சட்டத்தோடு எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்காக இத்துறையில் பொண்ணை எப்படியாவது சேர்த்து விட வேண்டும்.’’
ஜெயசங்கர், ஐயப்பன்தாங்கல். ‘’என் மகள் சோனா, பி.இ. பொறியியல் படிக்க வேண்டும். கல்வித்தரமும், வேலை வாய்ப்பும் வழங்கும் கல்லூரியைத் தேடி வந்திருக்கிறேன். வி.ஐ.டி. அதிகம் பணம் கேட்கிறார்கள். இருந்தாலும் தரம் இருக்கும். என்ன படிக்கிறோம் என்பதைவிட எங்க படிக்கிறோம் என்பது ரொம்ப முக்கியமில்லையா!’’

 கார்த்திகேயன், புனித பீட்டர்ஸ் தொழில்நுட்பக்கல்லூரி ஆவடி. ‘’மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவர். அவருடைய கல்லூரி ஸ்டாலில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு ஆள் பிடிப்பதற்கு கல்லூரி நிறுவனம் இவரை அழைத்து வந்துள்ளது. கோட்டுப் போட்டுக்கொண்டு, வரும் பெற்றோர்களிடம் தன் கல்லூரியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சொந்த ஊர் கோவில்பட்டி. தந்தை இல்லை. இரண்டு அண்ணன்கள் பாராமரிப்பில் படிக்கிறார். இவர் நான்கு அரியர்ஸ் வைத்துள்ளார். ‘’நீங்களே சரியாக படிக்க முடியவில்லை. நீங்கள் எப்படி மாணவர்களுக்கு ஆசைக்காட்டி சேர்க்கலாம்’’ என்று கேட்டதற்கு, சிரிக்கிறார்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்.

1 மறுமொழி

  1. // போலீசு நாங்கள் சட்டத்திற்கு கீழ் படிய வேண்டும். ஆனால் வக்கீல்கள் சட்டத்தோடு எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்காக இத்துறையில் பொண்ணை எப்படியாவது சேர்த்து விட வேண்டும்.’’ // …அய்யா போலீசு …! சூப்பர் என்ன ஒரு தத்துவம் … அருமை … ! மிஸ்ராவை மனதில் இருத்தி இதை கூறியிருப்பாரோ …? போலீசு –வக்கீல் உங்க ரெண்டு பேரையுமே ” ஆட்டி வைக்கிற — ஆட்டம் போட வைக்கிற ” ஆளுகிற கட்சி அரசியல்வாதியா ஆக்கிடுங்களேன் … மேட்டர் ஓவர் .. எந்த கஷ்டமும் இல்லாமல் ஈஸியா பொழைக்க — சுருட்ட — கொள்ளையடிக்க — ?

Leave a Reply to Selvarajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க