கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! மே நாள் ஆர்ப்பாட்டங்கள் !

மே நாள் ஆர்ப்பாட்டம் சென்னை மற்றும் திருச்சி பு.ஜ.தொ.மு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!

0

மிழகம் முழுவதம் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் “மேநாள் சூளுரை ! கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மே நாள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக…

சென்னையில்…

நாள் : மே – 1 மாலை 4 மணி
இடம் : சோழிங்கநல்லூர் OMR சாலை சந்திப்பு.

 

*****

திருச்சியில்…

நாள் : மே – 1 மாலை 5 மணி
இடம் : இராமகிருஷ்ணா பாலம் அருகில், மரக்கடை, திருச்சி.

 

தலைமை : தோழர் சுந்தரராசு, புஜதொமு.

கண்டன உரை : தோழர் சத்யா, ம.க.இ.க. கலைக்குழு

****

மேநாள் சூளுரை ! கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

குமுறிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக்கட்சிகள் அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என் ற முறையில் செயலிழந்துவரும் அரசுக்கட்டுமானங்கள் அனைத்தின் மீதும் மக்கள் அடியோடு நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

தேர்தல் அரசியல் கட்சிகளும் மொத்த அரசியல் கட்டமைப்பும் இனி மேல் நீடிக்க முடியாதனவாகவும் சீர்த்திருத்தி நாட்டின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவே முடியாத நிலையையும் எட்டிவிட்டன. அரசும், ஆட்சியாளர்களும் , ஆள ம்வர்க்கங்களும் ஆள முடியாமல் போனது மட்டுமல்ல, ஆளத் தகுதியிழந்தும் போய்விட்டன.

தலைமை நீதிபதியை பதவி நீக்கும் நடவடிக்கை முன் மொழிவை துணை ஜனாதிபதியும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு சட்டப்படி மூவர் கு ழுவின் விசாரணைக்கு அனுப்பாமலேயே நிராகரித்துவிடுகிறார். அடுத்து பதவி நீக்க நடவடிக்கையை முன்மொழிந்த எம்.பி.க்களுக்கு உள்ள ஒரேவழி நாடாளுமன்ற மேலவைத் தலைவர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வதுதான்! எந்தத் தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்கநடவடிக்கையை முன்மொழிந்தார்களோ அவரிடமே சென்று முறையிடுவதுதான் ஒரேவழி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பதவி நீக்கும் ந டவடிக்கைக்கான முன்மொழிவை ஒட்டி நடந்த விவகாரங்கள் இதற்கு ஒரு சிறந்த நிரூபணமாகும். முன்மொழிவில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்தது இதுதான்.

உச்ச நீதிமன்றத் தடையையும் மீறி , லக்னோவிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்குகிறார் நீதிபதி சுக்லா. தனது நண்பர் மூலம் இந்த அனுமதியை வாங்கித்தருவதாகச் சொல்லி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் பேரம் பேசி, அதற்கான பேரத்தொகையாக ரூ.2 கோடியை வாங்கும்போது சிபிஐயிடம் சிக்குகிறார், ஒடிஸா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான குத்தூஸ்.

குத்தூஸ்கைதைத்தொடர்ந்து, சுக்லாவையும் கைது செய்ய அனுமதி கேட்டபோது அதற்கான அனுமதியை வழங்க வேண்டிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனுமதி கொடுக்கவில்லை. ”இந்த விவகாரத்தில் தீபக்மிஸ்ராவுக்கும் தொடர்பு இருக்கிறது; அவரையும் விசாரிக்க வேண்டும்” என்று வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி செலமேஸ்வர், “’வழக்கைதலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தவிர்த்த மூத்த நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்” என்கிறார். உடனடியாக இந்த வழக்கை தன்னுடையகையில் எடுத்த தீபக்மிஸ்ரா, செல்லமேஸ்வரின் உத்தரவைக் கையோடு ரத்து செய்ததோடு வழக்கை மூன்று இளம் நீதிபதிகள் கொண்ட வேறொரு அமர்வுக்கு அனுப்பினார். அந்த அமர்வானது வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர்களுக்கு ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தது.

இந்த முறையீட்டில் தலைமை நீதிபதி தவறிழைத்ததாகக் கருதினால் அதற்குப்பரிகாரம் தேட நாடாளுமன்ற மேலவைக்குதான் செல்லவேண்டும். இதுதான் அடுத்தவழி. இப்படி ஒரு முட்டுச்சந்தில் நீதியைக்கொண்டு வந்து நிறுத்தி, அதை தலை குனியவைத்து உச்ச நீதிமன்ற புனிதத்தின் மீதான மக்களின் கடைசி நம் பிக்கை யை யும் துடைத் தெறிந்திருக்கிறார்கள் உச்சநீதி மன்றத்தலைமை நீதிபதியும் நாடாளுமன்ற மேலவைத்தலைவரும். மேலவைத்தலைவர் துணை ஜனாதிபதியும் கூட. தற்போது காவிரி வழக்கு, குட்காவழக்கு, 11 தமிழக எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கவழக்கு ஆகியவைகளில் நீதிபதிகள் அளித்த தீர்ப்புகள் நீதிபதிகள் எப்படி கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாக உள்ளன. இவையெல்லாம், நீதிமன்றக் கட்டுமானம் எப்படி நிலை குலைந்து போய், நீதிவழங்க அருகதையிழந்து, இழிந்து போய்விட்டது என்று தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.

சட்டவிரோதப் பணப்பட்டுவாடாவைத் தன்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது தேர்தல் ஆணையம். அதற்காக தேர்தலை ரத்து செய்து மறுதேர்தலை நடத்தியது. முந்தையத் தேர்தலை விட இந்த மறு தேர்தலில் இன்னும் பல நூதன வழிகளில் பணப்பட்டுவாடா பட்டபகலில் நடந்தது என்பதை எல்லா ஊடகங்களும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தின.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது மத்திய ரிசர்வ் போலீசாரிடம் சிக்கிக் கொண்டவர்கள்.

இந்த முறையும் சட்டவிரோத பணப்பட்டுவாடாவைத் தன்னால் தடுக்க முடியவில்லை என்று இன்னொரு முறை தனது கையாலாகாதனத்தை, அருகதை இழந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. மாநில போலீசார், மத்திய போலீசார், பறக்கும் படை, துணை இராணுவப்படை, ஆயிரக்கணக்கான தேர்தல் அலுவலர்கள் என்ற படைகளை தனது வானளாவிய அதிகாரத்தில் வைத்திருந்தும் தேர்தல் ஆணையத்தால் சட்டவிரோதப் பணப்பட்டு வாடாவைத் தடுக்கமுடியவில்லை என்றால், அது இனி மேலு ம் நீடித்திருப்பதற்கான அருகதையையே இழந்து விட்டது என்பதையும் ‘ஜனநாயக’ த்தைக் காப்பாற்றவக்கற்றுப் போய் விட்டது என்பதையும் பளிச்சென்று எடுத்துக் காட்டவில்லையா?

நீரவ் மோடி என்ற முதலாளி வங்கி ஊழியர்களை வளைத்துப்போட்டு, முறைகேடுகள் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை வாங்கி தன்னை வளப்படுத்திக் கொண்டதோடு, கடனைக் கட்டாமல் வெளிநாடு தப்பிச்சென்றார் என்பது ஊரறிந்த செய்தி. இதற்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரிசர்வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள், நிதி அமைச்சகம், கார்ப்பரேட் அமைச்சகம், சி.பி.ஐ., அமலாக்கத் துறை, பிரதமர் அலுவலகம் போன்ற மாண்புமிகு நிறுவனங்களே உடந்தையாக இருந்துள்ளன என்பதும் ஊரறிந்த செய்தி.

இது அந்நிறுவனங்களின் தோல்வியையும், நிர்வாகம் செய்ய அருகதையற்றுப் போனதையும் அப்பட்டமாகக் காட்டவில்லையா? வங்கி மோசடிக்குற்றவாளி நீரவ்மோடியை டாவோசில் நடைபெற்ற உலகத்தலைவர்கள் கலந்து கொண்ட பொருளாதார மாநாட்டிற்கு பிரதமர் மோடி தன்னுடன் அழைத்துச்சென்ற செய்தியும், இருவரும் கூட்டத்தில் பங்குபெற்ற புகைப்படமும் வெளியாகி பிரதமர் பதவியின் மாண்புசீர்குலைந்து இழிந்து போனதும் கட்டைமப்பு நெருக்கடியின் வெளிப்பாடு அல்லாமல் வேறென்ன?

இப்படி அன்றாடம் கட்டைம ப்பு நெருக்கடிக்கான சான்றுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கட்டுமானங்கள் ஒவ்வொன்றிலும் சரி, மொத்த சமூகக் கட்டமைப்பும் சரி தீராத நெருக்கடியில் சிக்கி , எதையு ம் தீர்க்க வக்கற்றுபோய், தோற்றுப்போய், நிலை குலைந்து போய் ஆள அருகதை இழந்து விட்டதை . நிரூபிக்கவில்லையா?

எல்லாகட்சிகளும், எல்லா அரசுதுறைகளைச் சேர்ந்த அதிகாரகள் உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்கும் அனைவரும் , மக்கள் அனைவரும் இந்த கட்டமைப்பு ஆள அருகதையிழந்ததை தங்களுக்கு தெரிந்த வகையில் புரிந்து வைத்திருக்கின்றனர். வெறுப்புடனும் கிண்டலும் கேலியும் கலந்த குரலிலும் ஆத்திரத்தோடும் அன்றாடம் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த கட்டமைப்பின் மீது காறி காறி துப்புகின்றனர். கட்டமைப்பு நெருக்கடியின் ஒவ் வொரு வெளிப்பாட்டையும் எப்போதும் அரசியல் கூர்மையுடன் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், எந்த அரசியல் கட்சியும் சரி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும், உயர் போலீசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நிபுணர்கள் மக்களின் மனநிலை பற்றி துளியும் கவலையோ அச்சமோ கொள்ள வில்லை. இப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் நடந்து கொள்கின்றனர். உள்நாட்டு –  வெளி நாட்டு கார்ப்பரேட் டுகள் அரசு சொத்துக்களை அபகரிக்கவும் இயற்கைவளங்களைச் சூறையாடி சுற்றுச் சூழலை நச்சாக்கவும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அடக்கி ஒடுக்கி, சுரண்டி கொள்ளை இலாபம் அடிக்கவும் மேலும் மேலும் அடிமைச் சேவகம் புரிந்து வருகின்றனர்.

இந்த மக்களால் நம்மை ஒன்றும் செய்துவிடமுடியாது. தேர்தல் நேரத்தில் சில இலவசத் திட்டங்களைக் கவர்ச்சிகரமாக அள்ளிவிட்டு, ஆயிரக் கணக்கில் பணத்தைக் கொடுத்தால் ஓட்டுவாங்கி ஆட்சிக்குவந்துவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் உள்ளனர். பழைய அரசியல் கட்சிகள் நம்பிக்கை இழந்ததால் மக்களிடம் ரஜினி, கமல் போன்ற புதிய தலைவர்களை உருவாக்கி மக்களை இந்த தேர்தல் கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்காமல் செய்து எப்பொழுதும் போல தங்களின் ஆட்சியைத் தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் ஆளும் வர்க்கங்கள் உள்ளன.

இப்பொழுது நம் முன்னர் உள்ளகேள்வி இதுதான்.

இந்த கட்டமைப்பிலேயே என்ன கஷ்டம் வந்தாலும் உழன்று கொண்டிருக்கப்போகிறோமா? அல்லது இந்த கட்டமைப்பை அகற்றி விட்டு நமக்கான கட்டமைப்பை, மக்களி ன் நேரடி அதிகாரத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான போரில் இறங்கப்போகிறோமா?

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கு ஏற்றவகையில்தான் திட்டமிட் டு நாட்டி ன் இன்றைய கட்டமைப்பு கட்டப்பட்டிருப்பது தான் இந்தக்கட்டமைப்பு நெருக்கடிக்கான அடிப்படை. தனிச்சொத்துடைமையும், அதன் அடிப்படையில் நடத்தப்படும் சுரண்டலும் ஒடுக்கு முறையும் தான் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், அதுவே தேசபக்தி என்ற சித்தாந்தம்தான் இந்த அமைப்பில் கோலோச்சுகிறது.

எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் தனிவுடைமையை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாட்டை மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நேரடியாகவும் மறை முகமாகவும் சேவை செய்பவைதான்.

எனவே, இப்படிப்பட்ட கட்டமைப்புக்குள் நமக்கான தீர்வுகிடையாது, கட்டமைப்புக்கு வெளியில் தான் தீர்வு இருக்கிறது. கட்சிகளை மாற்றுவதால் தீர்வு வராது , கட்டமைப்பையே மாற்றுவது தான் தீர்வு!

தற்போதைய கட்டுமானங்கள் முழுவதுமாகக் கலைத்துவிட்டு, நீக்கிவிட்டு புதிய அரசுக்கட்டுமானங்களை, மக்கள் அதிகாரத்துக்கான அரசுக் கட்டுமானங்களை மக்கள் தாமே நிறுவிக்கொள்வதுதான் நம்முன் உள்ள ஒரேவழி!

மாற்றுக்கட்டமைப்பு என்று சொல்லும் போது கியூபா நாட் டு மக்கள் கட்டமைத்துள்ள அவர்களின் சமூகக்கட்டமைப்பும், பொதுவுடைமையை அடிப்படையாகக் கொண்டு சீனாவிலும் ரசியாவிலும் அமைக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புகளும் நமக்கு முன்னுதாரணங்களாக உள்ளன.

போலீசு, நீதித்துறை, அதிகாரவர்க்கம், ஊடகங்கள், கட்சிகள் என அனைத்து துறைகளிலும் தனது ஆட்களை புகுத்தி பார்ப்பன பாசிசத்தை நிறுவுவதற்கு ஏற்ப, இந்தக் கட்டுமானங்களை தனக்கேற்ற வகையில் மாற்ற வெறித்தனத்துடன் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசகும்பல். இந்த அபாயத்தை முறியடிக்க வேண்டுமானால் அவர்களை முந்திக்கொண்டு நமக்கான மக்கள் அதிகாரக்கட்டமைப்பை நிறுவுவது அவசர அவசியப்பணியாக நம்முன்னே உள்ளது.

  • கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!
  • தோற்றுப்போய், ஆளஅருகதையற்ற கார்ப்பரேட் அதிகாரத்தை அகற்றுவோம்!
  • தொழிலாளர்கள் – விவசாயிகள் மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னனி,
திருச்சி, தொடர்புக்கு : 97916 92512, 89034 03970, 99431 76246.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க