கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !

ழகான கிராமம் ஒன்றின் பெயர் ‘நகரம்’; இது ஆந்திராவின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரத்திற்கு அருகில் மாமிடி கூடூர் ஒன்றியத்தில் உள்ளது. 27.06.2014 காலை 5.00 மணிக்கு இருள் பிரியாத காலை வேளையில் தேநீர்க்கடை வைத்துப் பிழைக்கும் வாசு படுக்கையிலிருந்து எழுந்து தன் அன்றாடப் பணிகளுக்கு தயாராகிறார். தன் வீட்டின் முன்புறம் அவர் நடத்தும் தேநீர்க் கடைக்கு அதிகாலையில் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்க சீக்கிரம் தயாராக வேண்டும். தனக்கும் தன் குடும்பத்திற்கும் நெருங்கி வந்து கொண்டிருந்த பயங்கரத்தை அறியாமல் தன் தேநீர் அடுப்பை பற்றவைக்கிறார். அந்த தீக்குச்சி அவரையும் அவரது குடும்பத்தையும் சுற்றியிருந்தவர்களையும் சிதறடிக்கிறது. உறங்கிக் கொண்டிருந்தவர்கள் காதுகளைச் செவிடாக்கும் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டவர்கள் அந்த பயங்கரக் காட்சியைக் காண்கிறார்கள். ஒரு பெரிய நெருப்புக் கோளம் அங்கிருந்த அத்தனைப் பொருட்களையும் சுருட்டிக் கொள்கிறது.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் 1990இல் இயற்கை வாயு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை சுமார் 12 சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆனால், நடந்தவற்றில் இதுதான் மிக மோசமானதாகும். கடந்த சில ஆண்டுகளாகவே குழாயில் கசிவுச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. 2010 இல் பொன்னாமந்தா கிராமத்தில் பெரிய கசிவு நிகழ்ந்தது. 1990 களில் பசலராபு கிராமத்தில் எண்ணெய் கிணறு வெடித்து 65 நாட்கள் எரிந்ததுதான் உலகிலேயே இரண்டாவது பெரிய குழாய் வெடிப்பு ஆகும்.

உலகெங்கும் மிக சாதாரணமாக நிகழும் பல பேரழிவுகளில் நிறமற்ற மணமற்ற இந்த எரிவாயுவின் கசிவின் மூலம் அப்பாவி மக்களைக் கொல்லும் வெடிப்புகளும் தீ விபத்துகளும் அடக்கம். (நூலிலிருந்து)

நூல்: கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !

பதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள், எண்:73, சாய்லட்சுமி குடியிருப்பு, இரண்டாவது பிரதான சாலை, சின்மயாநகர், விருகம்பாக்கம், சென்னை – 600 092.
பேச: 044 – 4380 9132, 98416 24006.

பக்கங்கள்: 24
விலை: ரூ.25.00

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க