தூத்துக்குடி துப்பாக்கி சூடு : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நடத்தப்பட்ட வழக்கில், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார். பத்திரிகையாளர்களுக்கு அவர் கொடுத்த பேட்டி. விரிவான தகவல் காணொளியில் ..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் 30.05.2018 அன்று வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜரானார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடலை மறு கூறாய்வு செய்யவேண்டும் என்றும், அப்போது பாதிக்கப்பட்டவர்களின் சார்பு மருத்துவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

அதற்கு உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவிக்கவே, இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசமும், அதுவரை பிரேதப் பரிசோதனையை நிறுத்திவைக்கவும் உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு சம்மதம் தெரிவித்தது உயர்நீதிமன்றம்.

மேலும், துப்பாக்கிச் சூடு அப்பாவி மக்களைக் குருவி போல சுட்டுக்கொன்ற போலீசையும், அரசாங்கத்தையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவது தான் எங்களது நோக்கம் என்று மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு தெரிவித்தார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க