உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் | ம.உ.பா.மை கருத்தரங்கம் | Vinavu Live

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் ! மக்களின் உரிமைப் போராட்டமும் அதில் வழக்கறிஞர்கள் கடமையும் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் பங்கு பெறும் கருத்தரங்கம் ! வினவு நேரலை ஒளிபரப்பு

ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம், ரத்தச்சகதியில் மூழ்கடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அத்துடன் 200-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டும், 1000-க்கும்அதிகமானோர் கிரிமினல்களைப் போல தேடப்பட்டும், முக்கியமாக கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும், 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், சிறை வைக்கப்பட்டனர். இதற்கு எதிராக மக்களோடு சேர்ந்து நின்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் போராடியிருக்கிறது.

தற்போது வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு சட்டரீதியாகவும், சட்டத்திற்கு புறம்பான வகையிலும் முயற்சி எடுத்து வருகிறது. ஆலையின் மாசுபாடு பற்றியும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கு நிலைமைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

”உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் !” மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம் – வினவு இணையதளத்திலும், வினவின் பக்கம் முகநூல் பக்கத்திலும், வினவு யூ-டியூப் சேனலிலும் நேரலை !

நாள் : 31-08-2018
நேரம்: மாலை 5:30
காணத் தவறாதீர்கள் !

  • வினவு களச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க