காஷ்மீர் – அயோத்தி – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) – தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) – தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR)

பறிக்கப்படும் மனித உரிமைகளும்! தகர்க்கப்படும் அரசமைப்புச் சட்டமும்!
ICUவில் இந்திய ஜனநாயகம்!

கருத்தரங்கம் :

நாள் : 09.01.2020 வியாழன் மாலை 5.00 மணி
இடம் : பெரியார் மாளிகை, குடந்தை.

வரவேற்புரை :

வழக்கறிஞர் இ.சதீஷ்குமார், ம.உ.பா.மை, தஞ்சை.

தலைமை :

வழக்கறிஞர் சிவ.குருமூர்த்தி , ம.உ.பா.மை, குடந்தை.

சிறப்புரை :

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

கருத்துரை :

வழக்கறிஞர் மா.ராஜசேகர், முன்னாள் குடந்தை வழக்கறிஞர் சங்க தலைவர்.
வழக்கறிஞர் தங்க.இராவணன், மாநில துணைச் செயலாளர், வழக்கறிஞர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி.
வழக்கறிஞர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்.
வழக்கறிஞர் பா.விஜயகுமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர், தஞ்சை வடக்கு. திராவிட முன்னேற்ற கழகம்
வழக்கறிஞர் இரா.கு.நிம்மதி, மாவட்ட துணை செயலாளர், திராவிட கழகம்

நன்றியுரை :

வழக்கறிஞர் க.பிரகாஷ், ம.உ.பா.மை, தஞ்சை.

அன்புடையீர் வணக்கம்!

“நம் நாட்டில் ஜனநாயகம் பேராபத்தில் உள்ளது. எங்களால் ஏதும் செய்யமுடியவில்லை, அதனால்தான் மக்களிடம் முன்வைக்கிறோம்.” – இது 2018-ல் ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊடகத்தில் அளித்த பேட்டி.

அரசியல் சாசன சட்டம் மக்களை காப்பாற்றும் என்ற நிலை மாறி, தற்போது அரசியல் சாசன சட்டத்தை மக்கள் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய மக்களாகிய நாம் இருக்கிறோம்.

பாபர் மசூதி தீர்ப்பு:
இராமர் கோவில் அங்கேதான் இருந்துள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், பாபர் மசூதிதான் அங்கு பல நூற்றாண்டுகள் இருந்துள்ளது என்றும், மசூதியை இடித்தது கண்டிக்கத்தக்கது; இருந்தும் அந்த இடத்தில் மத்திய அரசு விரைவில் இராமர் கோவில் கட்டி முடிக்கவேண்டும், என ஆர்.எஸ்.எஸ்-ன் சங்கபரிவாரங்கள் மனம் குளிரும் வகையில் தீர்ப்பை நீதியரசர்கள் வழங்கியுள்ளார்கள்.

மதச்சார்பற்ற அரசின் நீதிமன்றம் என்றால் மசூதியையும் சேர்த்து கட்டிக்கொடு என்றல்லவா தீர்ப்பளித்திருக்க வேண்டும் ?. ஆனால் மத்திய அரசு என்பது இந்திய அரசா அல்ல இந்து அரசா? அது பின்பற்றவது அரசியல் சாசன சட்டமா அல்லது மனுதர்மமா ?

படிக்க :
♦ பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! மின்னிதழ்
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

காஷ்மீர் மக்களின் உரிமை பறிப்பு :

ஒரு காமூகன் ஒரு பெண்ணை பலவந்தமாக கடத்தி, அறையில் அடைத்து, அவளின் வாயையும், கையையும் இறுகக் கட்டி, சுற்றி தனது அடியாட்களை காவலில் நிற்க வைத்து, “அப்பெண் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள், என்னுடன் வாழத்தான் விரும்புகிறாள்’ என்று கூறினால், நாம் என்ன சொல்வோம், செய்வோம்? இதுதான் காஷ்மீரத்தின் இன்றைய நிலை! கடந்த ஆகஸ்ட் மாதம் உலகில் வேறெங்கும் இல்லாதவகையில் 75 லட்சம் காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டது. காஷ்மீர் இந்திய அரசோடு இணைந்தபோது வழங்கப்பட்ட வாக்குறுதி அப்பட்டமாக மீறப்பட்டது. காஷ்மீர் மக்களின் அரசியல் சட்டம் தூக்கியெறியப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு, இராணுவக் குவிப்பு என திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் திருத்தச் சட்டம் 2019 & தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC):

தேசிய மக்கள்தொகை பதிவேடு மூலம், இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களின் விவரங்களையும் சேகரிப்பது (குடியுரிமையற்றவர்கள் , அகதிகள் உட்பட), அதன் பின், அதிலிருந்து இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஜனநாயகவாதிகள், அம்பேத்கரிஸ்ட்டுகள், பெரியாரிர்ஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் என அனைவரையும் படிப்படியாக , ஒன்றின்பின் ஒன்றாக குடிமக்கள் பதிவேடு மூலம் குடியுரிமை இல்லாதவர்களாக மாற்றுவது – அவர்களை அகதி முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் அடைத்து கொன்றுகுவிப்பது,

இதை செய்வதற்குத் தடையாக இருந்த, மதச்சார்பற்ற குடியுரிமைச் சட்டம் தற்போது இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம், பார்சி, கிறிஸ்துவம் ஆகிய மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்கள், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடையாதாம். இதை எதிர்த்து ஜனநாயக முறையில் போராடிய மாணவர்கள், செயல்பாட்டளர்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது வழக்கு, கைது, தடியடி துப்பாக்கிச் சூடு என சொந்த நாட்டு மக்கள் மீது உள்நாட்டுப் போரை தொடுத்துள்ளது பா.ஜ.க.

படிக்க:
♦ CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி
♦ குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !

“போராடினால் சுட்டுத் தள்ளுவோம், கல்லெறிந்தால் குண்டு வீசுவோம், கோலம் போட்டால் காலி செய்வோம், சட்டவிரோத அகதிகளை தூக்கி வங்காள கடலில் வீசுவோம், ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லை என்றால் அடித்துக் கொல்வோம் என பேசுபவர்கள் எல்லாரும் ‘சுதந்திரமாக உலாவுகின்றனர். ஆனால் மாற்று கருத்து சொல்லும் அறிவுத்துறையினர், போராடும் மக்கள், அரசியல் சட்டத்தின் ஆட்சியைக் கோருபவர்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை மூலம் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கிறது மோடி-அமித்ஷா தலைமையிலான பாசிச அரசு !

  • போராட உரிமையில்லை – பேச்சுரிமை இல்லை | கருத்துரிமை இல்லை!
  • விரும்பும் உணவு சாப்பிட, ஆடைகளை உடுத்த உரிமையில்லை !
  • விரும்பும் மதத்தினை , கடவுளை வழிபட உரிமையில்லை
  • கடைசியில் ..விரும்பும் கோலம் போடக்கூட உரிமை இல்லை

பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்ந்திருக்கிறது. இருளை கிழித்தெறிவோம் | பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம் ! சுதந்திரம் , சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை காப்போம் !


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
கும்பகோணம் – 93455 71278, 98658 73426.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க