வி-டெம்(V-Dem) இன்ஸ்டிட்யூட்டின் சமீபத்திய உலகளாவிய ஜனநாயகம் பற்றிய அறிக்கையின்படி, ஜனநாயகம் வீழ்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் துருக்கி மற்றும் ஹங்கேரியுடன் இணைந்து உலகின் முதல் 10 எதேச்சதிகாரமாகிவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு அறிக்கையில் ‘தேர்தல் எதேச்சதிகாரம்’ என்று வகைப்படுத்தப்பட்ட இந்தியா இந்த ஆண்டு அறிக்கையிலும் தனது இடத்தை தக்க வைத்துள்ளது. இதன் விளைவாக 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான நாடுகளின் கீழ் உள்ள பிரிவில் இந்தியா உள்ளது. 2014-க்குப் பிறகு பாஜக நரேந்திர மோடி ஆட்சியின் கீழான ஆண்டுகளில் இந்தியாவின் ஜனநாயக நற்சான்றிதழ்களில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக அறிக்கை 2022 என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, 15 நாடுகளில் ஜனநாயகமயமாக்கலின் ஒரு புதிய அலை காணப்படுவதாக தெரிவிக்கிறது. அதே நேரத்தில் 32 நாடுகள் எதேச்சதிகாரத்தின் கீழ் உள்ளன என்றும்  ஸ்வீடிஷ் இன்ஸ்டிடியூட் அறிக்கை கூறுகிறது. வி-டெம்-ன் தாராளவாத ஜனநாயகக் குறியீட்டின் (LDI) அடிப்படையில் நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
படிக்க :
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
கடந்த காலங்களில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியாவில் எதேச்சதிகாரமயமாக்கல் “மோசமடைந்துள்ளது” என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
“பிரேசில், ஹங்கேரி, இந்தியா, போலந்து, செர்பியா மற்றும் துருக்கி ஆகிய முன்னணி எதேச்சதிகாரங்களில் குறைந்தபட்சம் ஆறு நாடுகளில் பன்மைத்துவ எதிர்ப்புக் கட்சிகள் எதேச்சதிகாரமயமாக்கலை நடத்துகின்றன” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
“பன்மைவாதத்திற்கு எதிரான கட்சிகள், அதன் தலைவர்களின் ஜனநாயக செயல்பாட்டில் அர்ப்பணிப்பு இல்லை; சிறுபான்மையினர் உரிமைகளை மதிப்பதில்லை; அரசியல் வன்முறையை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த ஆளும் கட்சிகள் தேசியவாத – பிற்போக்குத்தனமாக இருப்பதுடன் எதேச்சதிகார நிகழ்ச்சி நிரல்களை முன்னோக்கித் தள்ள அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன” என்று அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் தேர்தல் எதேச்சதிகாரமாக மாறுவதற்கான சரிவு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து – தேசியவாத நிகழ்ச்சி நிரலை சட்டப்பூர்வமாக்குதல் ஆகியவற்றுடன் இணைக்கப்படுள்ளது. இது கடந்த ஆண்டு அறிக்கையில் கூட சுட்டிக்காட்டப்பட்டது.
உலகளாவிய சூழ்நிலையை பொறுத்தவரை, 2021-ம் ஆண்டில் சராசரி உலகளாவிய குடிமகன் அனுபவிக்கும் ஜனநாயகத்தின் அளவு 1989 நிலைகளுக்குக் குறைந்துள்ளது என்று அறிக்கை வெளிப்படுத்துகிறது.
அதாவது கடந்த 30 ஆண்டுகால ஜனநாயக முன்னேற்றங்கள் இப்போது அழிக்கப்பட்டுள்ளன. சர்வாதிகாரங்கள் அதிகரித்து வருகின்றன. இது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதிவிதம் (5.4 பில்லியன்) மக்களை பாதிக்கிறது என்பதை அச்சுறுத்தும் வகையில் அறிக்கை சுட்டிக்காட்டும் அதேநேரத்தில் “எதேச்சதிகாரத்தின் தன்மை மாறுகிறது” என்று கூறுகிறது.
படிக்க :
வி-டெம் அறிக்கை : எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் இந்தியா !
இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !
ஜனநாயகத்தின் வகைகள் (V-Dem) 1789 முதல் 2021 வரை 202 நாடுகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான தரவுப் புள்ளிகளுடன் ஜனநாயகம் குறித்த மிகப்பெரிய உலகளாவிய தரவுத் தொகுப்பை உருவாக்கி வருகிறது. 3,700 அறிஞர்கள் மற்றும் பிற நாட்டு நிபுணர்களை உள்ளடக்கிய V-Dem ஜனநாயகத்தின் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பண்புகளை அளவிடுகிறது.
“உலகெங்கிலும் உள்ள பல பார்வையாளர்களைப் போலவே, கடந்த காலங்களில் ஜனநாயகத்தின் வீழ்ச்சி குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். இந்த ஆண்டு ஜனநாயக அறிக்கை 2021-ல் அந்த போக்கின் தொடர்ச்சியை ஆவணப்படுத்துகிறது” என்று வி-டோம் இன்ஸ்டிட்யூட் குழு அறிக்கையின் முன்னுரையில் கூறுகிறது.
இந்தியாவில் ஒரு பகுதியாக உள்ள ‘தேர்தல் எதேச்சதிகாரம்’ மிகவும் பொதுவான ஆட்சி வகையாக உள்ளது. இது உலக மக்கள் தொகையில் 44 சதவீதம் (3.4 பில்லியன்) மக்களை பாதிக்கிறது.
இந்தியாவில் பரவிவரும் காவி – கார்ப்பரேட் பாசிச செயல்பாடுகள் தீவிரமடைந்து வருவதையும் இனிமேலும் தீவிரமடையும் என்பதை இந்த வி-டோம் அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.

சந்துரு
செய்தி ஆதாரம்
: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க