னப் படுகொலைக்கான பாதையின் விளிம்பில் உள்ள இந்தியா’ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 26 அன்று நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உச்சி மாநாட்டில் வெறுப்பு பேச்சு மற்றும் இனப்படுகொலை குறித்து ஆராயும் வல்லுநர்கள், “இனப்படுகொலை என்பது ஒரு செயல்முறையே தவிர, ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு அல்ல, இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடங்கிவிட்டது” என்றனர்.
“சமீபத்தில் இந்தியாவில் இனப்படுகொலைக்கான நேரடி அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. நிபந்தனை அழைப்புகள் – அவர்கள் இதைச் செய்தால் நாங்கள் அதைச் செய்வோம் – இதுவும் தூண்டுதலாகும்.” என்று ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் வழக்கறிஞர் கிரெக் கார்டன் கூறினார்.
கம்போடியாவில் உள்ள இனப்படுகொலை ஆவண மையத்தின் ஆய்வாளரான மவுங் ஜர்னி, “இந்தியா விளிம்பில் இருப்பது மட்டுமல்ல, ஏற்கனவே ஒரு இனப்படுகொலைக்கான நடைமுறையில் உள்ளது என்று நான் நம்புகிறேன். … பாதிக்கப்பட்டக் கூடிய சிறுபான்மை மக்களை தங்கள் மதத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக கொலையாளிகள் சித்தரிக்கின்றனர். இந்த கொலைகள் ஆரம்பிக்கப்படாவிட்டாலும் நாடு ஏற்கனவே இனப்படுகொலை நடவடிக்கையில் ஆழ்ந்துள்ளது.
படிக்க :
ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் காணப்படும் “இனப்படுகொலை மிகவும் ஒத்த குணத்துடன்”  இந்தியாவில் நிலவும் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்களின் விவரங்களை மனித உரிமை வழக்கறிஞர் மீதாலி ஜெயின் எடுத்துரைத்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞரின் சிறப்பு ஆலோசகர் அடாமா டியெங் உச்சிமாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, அமைதியான சகவாழ்வு சகிப்பின்மை, மத நம்பிக்கையின் அடிப்படையிலான பாகுபாடு ஆகியவை இந்தியாவில் அதிகரித்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய இரண்டு இந்திய பத்திரிகையாளர் – அலிஷன் ஜாஃப்ரி மற்றும் கௌசிக் ராஜ் – நரேந்திர மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பதைப் பற்றி பேசினார். மேலும் மாநில மற்றும் மத்திய அளவிலான ஆளுங்கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் இத்தகைய இனப்படுகொலைக்கான அழைப்புகளுக்கு ஆதரவளித்துள்ளனர்.
கனேடிய இலாப நோக்கற்ற நிறுவனமான சென்டினல் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டோபர் டக்வுட், இந்தியாவில் இனப்படுகொலையைத் தடுப்பது கடினம் என்று இருவரும் கூறியதை சுட்டிக்காட்டி குறிப்பிட்டார். ஏனெனில் அரசு, குற்றவாளிகளின் பாதுகாவலராக உள்ளது.
யேல் பல்கலைக் கழகத்தின் தத்துவப் பேராசிரியரும், எப்படி பாசிசம் இயங்குகிறது என்ற நூலின் ஆசிரியருமான ஜேசன் ஸ்டான்லி, இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறது என்பதை நாஜி ஜெர்மனியுடன் ஒப்பிட்டார். “ஆர்.எஸ்.எஸ்.ன் ஆரம்பகால சிந்தனையாளர்கள் இந்தியா நாஜிகளின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று வெளிப்படையான பரிந்துரைகளை வழங்கினார், சி.ஏ.ஏ. நியூரம்பர்க் சட்டங்களைப் போல் பயமுறுத்துகிறது. முஸ்லீம்களின் உரிமைகளைப் பறிக்கும் இயக்கம் இங்கே செயல்பாட்டில் உள்ளது” என்று கூறினார்.
படிக்க :
கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மார்ச் 7,8,9 மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்புகள் சமீபத்தில் வருகின்றன. மிக சமீபத்தில், கர்நாடகாவில் பஜ்ரங் தள் உறுப்பினர் ஒருவர் ஹிஜாபைப் பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரும் “சிவாஜியின் வாளால் வெட்டப்படுவார்கள்” என்று கூறினார். அதற்கு முன், ஹரித்வார் ‘தர்ம சன்சத்’ நிகழ்ச்சியில், பல இந்து வலதுசாரித் தலைவர்கள் முஸ்லிம்களைக் கொல்ல ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
ஹிட்லரின் நாஜி படையை போன்ற பாசிச அமைப்புகளாக ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைமையிலான இந்துமதவெறி அமைப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இவை முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்ய கலவரங்களை தூண்டிவிடுகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த முஸ்லீம் வெறுப்பு பேச்சுக்கள். பாசிச சக்திகளை மக்களை திரட்டி வெல்லவதை விடவும் சாத்தியமான மாற்றும் ஏதுமில்லை.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க