குடியுரிமை திருத்த சட்டம், சபரிமலை தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஆகியவற்றை பற்றி மதுரையில் கடந்த டிச-22 அன்று நடைபெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16ஆம் ஆண்டு விழா கூட்டத்தில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொளி!
CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் !
– வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
யார் ஒருவர் பாதிக்கப்பட்டு ஒரு நாட்டுக்கு வந்தாலும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து தருவதும், அவர்களுக்கு குடியுரிமை தருவதும்தான் ஐநா-வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை!
இஸ்லாமியர்கள் வரக்கூடாது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி வைத்திருக்கும் காரணம் என்ன? ஈழத்தமிழர்கள் வரக்கூடாது என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் காரணம் என்ன? மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் ஒருவரை புறக்கணித்தால் அது தீண்டாமைதான் ! எனவே தீண்டாமை குற்றத்தின் கீழ், மோடியும் அமித்ஷாவும் இந்த சட்டத்திற்கு வாக்களித்த அனைத்து எம்.பிக்களும் கைதுசெய்யப்பட வேண்டும்.
முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவே தேசிய குடிமக்கள் பதிவேடு !
– ஆளூர் ஷாநவாஸ்
மோடி அரசு அறிவித்திருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு முசுலீம்களை இந்தியாவில் இருந்து ஒழித்துக் கட்டி ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றவே ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் என்பதை அம்பலப்படுத்துகிறார் ஆளூர் ஷாநவாஸ்..
பாருங்கள் ! பகிருங்கள் !