.சி.யு.-வில் இந்திய ஜனநாயகம் என்ற தலைப்பில் கடந்த ஜனவரி-09 அன்று மக்கள் உரிமை பாதுகாப்ப்பு மையத்தின் (PRPC) சார்பில் கும்பகோணத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

வழக்கறிஞர் சதீஷ்குமார் வரவேற்புரையுடன் தொடங்கிய இக்கருத்தரங்கை PRPC வழக்கறிஞர் சிவகுரு மூர்த்தி தலைமையேற்று நடத்தினார். இக்கருத்தரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் தங்க ராவணன்; தஞ்சை வடக்கு மாவட்டம் திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னை பாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. அமைப்புகள் நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தும் நோக்கிலும் இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்கிலும்தான் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

சிறப்புரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன், ”குடியுரிமை திருத்த சட்டமானது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. பிஜேபி பாராளுமன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்திருந்தாலும் அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தன்மைகளை மாற்ற முடியாது. இருந்தும் சட்டவிரோதமாக மதச்சார்பின்மைக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இதுபோன்ற அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக இயற்றப்படும் சட்டங்கள் செல்லாது என அறிவித்துள்ளது…

படிக்க:
வல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க ! இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க !
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தினை அமல்படுத்தினால் புதிதாக நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ஊழியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நாடு முழுவதும் நியமனம் செய்யப்பட்டால் கோடிக்கணக்கான பணம் தேவைப்படும் என்றும் இப்போ இப்போது இந்தியா சந்தித்து வரும் பொருளாதார சிக்கலில் இது மோசமான சூழ்நிலையை தோற்றுவிக்கும்…

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அம்பானி அதானி ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கவில்லை. ஏழை மக்களாகிய நாம்தான் வரிசையில் நின்றோம். உயிரைப் பறிகொடுத்ததை போல குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாம்தான் வரிசையில் நின்று நமது குடியுரிமையை நிரூபிக்க வேண்டி வரும்” என்றார்.


தகவல்:
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 93455 71278 | 98658 73426.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க