க்கள் அதிகாரத்தைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது குறித்தும், மக்கள் அதிகாரத்தின் முன்னணியாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் புகுந்தும் சட்டவிரோதமான முறையிலும் பல்வேறு பொய்வழக்குகளின் கீழ் அவர்களை கைது செய்வதன் மூலம் மக்கள் அதிகாரத்தின் செயல்பாட்டை முடக்க நினைக்கும் எடுபிடி அரசின் நடவடிக்கைகள் குறித்தும் பேசுகிறார், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு.

# support makkal athikaaram

லெக்ஸாண்டர், டி.கே.ராஜேந்திரன் போன்ற முன்னாள் இந்நாள் உயர் போலீசு அதிகாரிகள் எல்லாம் கூட்டு சதி செய்து எடப்பாடி ஆசியோடு இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

மக்கள் அதிகாரம் இந்தப் போராட்டத்தின் நியாயத்தை மக்கள் முன் எடுத்துச் சொல்லியது. அதற்காக அவ்வமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.

மோடி அரசுக்கும் எடப்பாடி அரசுக்கும் கட்சி வளர்ச்சி நிதியாக ஸ்டெர்லைட் நிறுவனம் கோடிகளை கொடுத்திருக்கிறது. எனவே, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராட்டத்தை ஒடுக்குகிறது. இந்த நியாயத்தை மக்களிடம் எடுத்துச் சொல்பவர்களை தம்மிடம் உள்ள கருப்புச்சட்டங்கள் வாயிலாக பிரிட்டிஷ் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே தேசிய பாதுகாப்புச் சட்டங்களை வைத்துக் கொண்டு ஒடுக்குகிறது.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனிகளை எதிர்த்தவர்களெல்லாம் தேசியபாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இன்று?

ஸ்டெர்லைட்டை எப்படியாவது திறக்கனும்.. யாரெல்லாம் இடையூறாக இருக்கிறார்களோ, அவர்களைக் கைது பண்ணி இந்த சட்டவிரோத கருப்புச் சட்டங்கள் மூலமாக அவர்களை பிணையில் வராதபடி சிறையில் அடைத்துவிட்டால், இதை கண்டு அஞ்சி யாரும் போராட்டத்தை முன்னெடுத்து செல்லமாட்டார்கள் என்பதே அரசின் நோக்கம்.

மக்கள் அதிகாரத்தின் குரல்வளையை நெறிப்பது; அவர்களின் போராடும் உரிமையை, கூட்டம் போடும் உரிமையை மறுப்பதன் மூலம் அநீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை தடுக்க முனைகிறது, அரசு.

13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் எடப்பாடிதான் ஏ1… மற்ற போலீசு உயர் அதிகாரிகளையெல்லாம் ஏ2 போட்டு விசாரிக்கணும்.

இவ்வுண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி தமக்கு எதிராக மக்களை அணிதிரட்டிவிடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் மக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கிறது, அரசு.

இயற்கை நீதிக்குட்பட்டு போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளை செய்த வாஞ்சிநாதன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மீதும் அரசு பொய்வழக்கு போட்டிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்துல பத்து எடத்துல அவரு ஒருத்தரே தீ வச்சாருன்னு கேஸ் போட்டுருக்கு போலீசு.

பொய்வழக்குகளிலும், தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் அதிகாரம் தோழர்களை விடுவிக்க பல்வேறு ஜனநாயக அமைப்புகளோடு கூட்டு சேர்ந்து கூட்டுக்குழு அமைத்து செயல்பட வேண்டும். மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க