நூல் அறிமுகம் | மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம்

இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்; ஆனால், அவர்கள் பேசியதோ நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தொழிலாளிக்காகவும்.

மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம் !
வரலாற்று சிறப்பு மிக்க ஒரு போராட்டம்.

‘’காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக்குக் கூழுமில்லை’’ என்றாலும் செங்கொடியுண்டு, கோரிக்கைகள் உண்டு’ என்பதை உலகிற்குப் பறைசாற்றி மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட மகத்தான இயக்கம் மராட்டிய மாநில விவசாயிகளின் நீண்ட பயணம். கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட, அதனால் பலனடைய இருக்கிற பகுதியினரை வென்றெடுப்பதே குதிரைக்கொம்பாய் இருக்கக்கூடிய காலத்தில், விவசாயிகளின் நீண்ட பயணத்திற்கு சமூகத்தின் பேராதரவைப் பெற்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளனர்.

மராட்டிய விவசாயிகள் அவர்களுடைய கோரிக்கைகளுக்காக இந்த எழுச்சிமிக்க பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுடையே விழிப்புணர்வையும், நாமும் இதுபோல் போராட வேண்டுமென்ற உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல !

மார்ச் 11 அன்று காலை 11 மணியிலிருந்து தொடங்கி தெற்கு மும்பையின் மையத்தில் உள்ள ஆசாத் மைதானத்தை மார்ச் 12 காலை 6 மணிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து இரவு பகலாக நடந்து தங்களது இலக்கை அடைந்தனர். (பதிப்புரையிலிருந்து)

40,000 பேர் ஒன்றாகத் திரண்டு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடந்து வந்ததும், அதன் கடைசி 10 – 15 கிலோமீட்டர்  தூரத்தை இருளில் மிக அமைதியான வகையில் கடந்து சென்றதும் இன்னும் என் கண்ணிலே நிற்கிறது.

இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்; ஆனால், அவர்கள் பேசியதோ நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தொழிலாளிக்காகவும்.

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி என்பது மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் மிகவும் அருவெருப்பானதாகவே உள்ளது. மிக ஏழ்மையான பல மாநிலங்களை விட அதிகமான எண்ணிக்கையில் இந்த மாநிலத்தில் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. 12 மாதங்களில் இந்த மாநிலத்தில் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே 17,000 பேர் பட்டினியால் மடிந்திருக்கின்றனர். குற்றப்பதிவுகளுக்கான தேசியக் கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி 1995-க்கும் 2015-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 65,000 விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவது தொடர்பான சட்டங்கள், பணமதிப்பழிப்பு ரத்து நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு ஆகிய இரண்டிலுமே மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்ட்ரா இருக்கிறது.

அதைப்போலவே பெருநிறுவனமயமாக்கப்பட்ட ஊடக கலாச்சாரத்தின் கோட்டையாகவும் மும்பை நகரம் விளங்குகிறது. பிரபலமான ஊடகங்களுக்கு விவசாயிகளின் இந்த நீண்ட பயணம் எவ்வளவும் முக்கியமாக இருந்தது என்பதை நாசிக் நகரில் நீண்ட பயணம் துவங்கியபோது நாடு தழுவிய அளவில் செயல்படும் எந்தவொரு பத்திரிக்கையும் தொலைக்காட்சியையும் சேர்ந்த ஒரு நிருபர் கூட அங்கே எட்டிப்பார்க்கவில்லை என்ற உண்மையிலிருந்தே உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த நீண்ட பயணத்திற்குப் பின்னாலிருந்த காரணங்களைப் பற்றியும், இந்த மிகவும் ஒழுங்கமைந்த, ஜனநாயகபூர்வமான, கம்பீரமான எதிர்ப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மேற்கொண்ட பெருமளவிலான பணிகளையும் அவர் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

இந்த நீண்ட பயணம் நமக்கு ஒரு வழியைக் காட்டியிருக்கிறது. இப்போது நாம் வலியுறுத்த வேண்டியது ஒன்றைத்தான். நாட்டில் நிலவிவரும் விவசாய நெருக்கடி மற்றும் அதுதொடர்பான விசயங்களைப் பற்றி மட்டுமே விவாதிப்பதற்கென 20 நாட்கள் கூடும் வகையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்க  வேண்டும். (அணிந்துரையில், பி.சாய்நாத், மூத்த பத்திரிகையாளர்.)

நூலாசிரியர்: டாக்டர் அசோக் தவாலே
தமிழில்: வீ.பா.கணேசன்.

பக்கம்: 32
விலை: ரூ.20.00

பதிப்பகம்:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24332924, 2435693.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

(கீழைக்காற்று விற்பனையகம்  இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கடையின் புதிய முகவரி கீழே)

1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
(சிவா ஜிம் மாடியில்)

ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. 
பேச  : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க