லக யோகா தினத்தை முன்னிட்டு, மோடியின் ’யோகா’ நாடகத்தை துகிலுரித்து அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல்
காணொளியை பாருங்கள் ! பாடுங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள்
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

நீ கண்ண மூடி செய்யிற யோகா – மோடி
கார்ப்பரேட்டுக்கு கொடுக்குறார் நேக்கா

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

மோடிக்கு கார்ப்பரேட் சேவை – அதுக்கு
பாடுபட லேபர் தேவை -2

பதினெட்டு மணி நேரம் உழைக்க
பலமான ஒடம்பு தேவை
பலமான ஒடம்பு தேவை – நீ
ஒடம்ப வளச்சி தரையில உருள –
அது ஒனக்கு இல்ல கார்ப்பரேட் வளர

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

ஜமுக்காளம் வேணும் விரிக்க
சம்மணம் போட்டு குந்தணும் கெழக்கே
மோதிர விரலில் மூடணும் மூக்க
மூனு நிமிசம் அடக்கணும் மூச்ச – நீ
அடக்கி அடக்கி விடணும் மூச்ச – மோடி
ஸ்டெர்லைட்டால அழிக்கணும் நாட்ட.

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

இதயத்துக்கு புஜங்காசனம்
மூளைக்கு சிரசாசனம்
வயித்த கொறைக்க தனுசாசனம்
வயச கொறைக்க வஜ்ராசனம்
டாசுமாக்கு சரக்கடிச்சி – மக்கள்
பாதி பேரு சவாசனம்

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

ஊட்டச்சத்து குறைபாடு
வறுமையிலே இந்திய நாடு -2
முப்பது கோடி மக்களுக்கு
இல்லை நாட்டில் ராச்சோறு

வறுமையை ஒழிச்சிடுமா
மோடியோட யோகாசனம்
கார்ப்பரேட்டு திட்டங்கள
ஒழிச்சாத்தான் விமோசனம்.

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

நீ – கண்ண மூடி செய்யிற யோகா
மோடி கார்ப்பரேட்டுக்கு கொடுக்குறார் நேக்கா

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க