தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது போலீசு. மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர், அந்த மக்களுக்காக  சட்டரீதியில் உதவி புரிந்த பல்வேறு ஜனநாயக சக்திகளையும், வழக்கறிஞர்களையும் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளது போலீசு.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினரின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து அவரைக் கைது செய்துள்ளது போலீசு. இது போக மக்கள் அதிகாரம் தோழர்கள் அறுவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு சிறை வைத்துள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் இன்றும் இளைஞர்களை கைது செய்வதும், வீடு புகுந்து மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த பச்சைப் படுகொலையைக் கண்டித்தும், கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் ஸ்டெர்லைட் படுகொலையைக் கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் போராடிய மக்கள் மீதான கைது மற்றும் அடக்குமுறையைக் கண்டித்தும் கருத்தரங்கம் நடத்தவிருக்கின்றனர்.

இந்தக் கருத்தரங்கத்தை வழக்கறிஞர் கனகவேல் அவர்கள் நெறிப்படுத்தி நடத்தவிருக்கிறார். இக்கூட்டத்தில்
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி திரு அரிபரந்தாமன்,
மூத்த வழக்கறிஞர்கள் பா.பா.மோகன், அஜ்மல்கான், ஹென்றி திபேன்
ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கின்றனர்.

மேலும் பேராசிரியர்கள் முரளி, சீனிவாசன்,
வழக்கறிஞர்கள் மோகன்குமார், லஜபதிராய், ராமமூர்த்தி,
திருநாவுக்கரசு, அக்பர்பாட்சா, தமிழரசன், ஜான் வின்சென்ட்,
மாணிக்கம், சாரங்கன், சுப்பு, சந்திரசேகரன், ஜிம்ராஜ் மில்டன்,
பாரதி, பார்வேந்தன், நாகை திருவள்ளுவன், இன்குலாப்,
பானுமதி, செந்தில்குமார், பால்ராஜ், ஆனந்த முனிராஜ், முகமது அப்பாஸ்
ஆகியோர் உரையாற்றவிருக்கின்றனர்.

முக்கியமாக, போலீசு பயங்கரவாத நடவடிக்கைகளால் உயிரிழந்த / கொடுங்காயமடைந்த / சிறைவக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் நேருரையும் இடம்பெறவிருக்கிறது.

கருத்தரங்க தீர்மானங்களை வழக்கறிஞர் பழனியாண்டி மொழிவார். வழக்கறிஞர் ராசேந்திரன் நன்றியுரையாற்றவிருக்கிறார்.

பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது வலுவான கண்டனக் குரலை பதிவு செய்யுமாறு ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.

தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாதபட்சத்தில் இன்று இந்நிகழ்வு வினவு இணையதளத்திலும், யூ-டியூப் சேனலிலும், ”வினவின் பக்கம்” ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக மாலை 4.30 முதல் ஒளிபரப்பப்படும்.

தொடர்புக்கு : ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பு
பேச: 97903 17864, 98421 59078, 63822 11441, 98948 40093, 98949 13820

  • வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க