தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ரீகன், ராபர்ட் மற்றும் இசக்கி முத்து போன்ற சில மீனவர் சங்க பிரதிநிதிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் மனு ஒன்றை அளித்திருக்கின்றனர். அம்மனுவில், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர்தான் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட மக்களை தூண்டிவிட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

வழக்கு தயாரிப்பு வேலைகள் தொடர்ந்து இருப்பதால் விரைவில் இதுகுறித்து முழுமையான அறிக்கையை வெளியிடுகிறோம். தற்போது ஒரு குற்றச்சாட்டுக்கு மட்டும் பதில் சொல்கிறோம்.

திரு அரிராகவன் மற்றும் திரு வாஞ்சிநாதன் ஆகியோர் தங்களை காத்துக் கொள்வதற்காக உயர்நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே 22 முற்றுகை போரட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர் என்றும் தங்களுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் வாதிட்டதாக ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

அப்படி எந்த மனுவிலும் அவர்கள் கூறவில்லை, மேலும் அவர்களோ, மக்களோ வன்முறையில் ஈடுபடவில்லை என்றுதான் வாதிட்டார்கள்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

 “மனுதாரர்கள், ஸ்டெர்லைட் தாமிர ஆலையைச் சுற்றி உள்ள கிராமங்களை சார்பான பிரதிநிதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மேற்சொன்ன கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து அமைதியான வழிமுறையிலான போராட்டங்களை ஏற்பாடு செய்தனர். மேலும், முதல் தகவலறிக்கையில் வன்முறை நடவடிக்கைகளாக குறிப்பிடப்படும் செயல்பாடுகளில் அவர்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை.”

(”the Petitioner is among the members of the aforesaid Federation (Thoothukudi District Anti Sterlite People Federation) who the people representatives representing the various villages around the Sterlite Copper Factory. They are also organized peaceful protests along with other members of the aforesaid federation and they no way connected with the alleged violent actions as narrated in the First Information Report”)

என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர மீனவ மக்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று எந்த இடத்திலும் கூறவில்லை.

அந்த மனுக்களை யார் வேண்டுமென்றாலும் எம்மிடம் வாங்கி பார்க்கலாம். உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டின் நோக்கம் என்ன? காவல்துறை அவர்களை தூண்டிவிட்டார்களா ? இல்லை மிரட்டிவிட்டார்களா ? தூத்துக்குடியில் உள்ள அனைத்து மக்களுக்குமான ஒற்றுமைக்கு அவர்களின் அறிக்கை குந்தகம் விளைவிக்காதா? என்பதற்கான பதிலை தூத்துக்குடி / மீனவ மக்களிடமே விட்டுவிடுகிறோம்.

  • ஜிம்ராஜ் மில்ட்டன்
    வழக்கறிஞர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க