ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக, அனைத்து வழக்குகளிலும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு பிணை வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடரப்பட்ட ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான ஒன்பது வழக்குகள் மற்றும் “கொடைக்கானல் பழங்குடி மக்கள் வெளியேற்றத்துக்கு எதிரான” போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான ஒரு வழக்கு என மொத்தம் 10 வழக்குகளில் அவருக்கு பிணை வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர் மீது போடப்படுகின்ற அனைத்து வழக்குகளிலும் முன் பிணை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்குகளில் போலீசு இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை ஸ்டெர்லைட் தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தப் பிணை வழங்கப் பட்டுள்ளது.

  • மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க