’ பெருங்கடல் வேட்டத்து ‘ - ஆவணப்படம்“முகத்திற்கு கடலையும், முதுகுக்கு நிலத்தையும்” காட்டி வாழ்கிறவர்கள் எல்லையோரங்களில் வாழும் மீனவ மக்கள். சாலைகளும், ரயில் பாதைகளும் போடப்பட்ட பின்னர் புவியியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய மீனவர்கள் பற்றி நாம் அறிந்து கொண்டவை மிகவும் குறைவு. ஓக்கி புயல் வீசிய போது அரசின் மீட்பு நடவடிக்கைகளில் காட்டப்பட்ட பாரம்பட்சம் பல நூறு மீனவர்களின் மரணத்திற்கு காரணமானது. அப்போதுதான் நாம் முதன் முதலாக அவர்களைப் பார்த்தோம். இப்போதுவரை தமிழகத்தில் பேசப்பட்டுவரும் அனைத்து அரசியல் பரப்பிலுமே அம்மக்கள் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களை நீங்கள் அவ்வப்போது வேடிக்கை பார்க்கின்றீர்கள்.

நான் அவர்களின் அகத்திலிருந்து பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். நன்னீரும் கடல் நீரும் கலக்கும் உயிர்சூழல் போல இந்த ஆவணப்படத்தை என்னளவில் உருவாக்கியிருக்கிறேன். நான் சுதந்திரமானவன் சுயாதீனமான கலைஞன். என்னளவில் நான் எழுதியும் பேசியும் வருகிறவைகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். எனது ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடலுக்கு வாருங்கள் வாழ்வும், கொண்டாட்டங்களும், துயரங்களும் நிறைந்த இந்த மக்களின் வாழ்வை நீங்களும் பாருங்கள்!

ஆவணப் படம் திரையிடல் :

நாள்: 07-07-2018, மாலை 4 மணி
இடம்: ருஷ்ய கலாச்சார மையம்

’பெருங்கடல் வேட்டத்து’ அன்புடன் அனைவரையும் அழைக்கிறேன் !

– டி.அருள்எழிலன்

பேஸ்புக் : பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் திரையிடல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க