ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !

கடந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆற்றிய உரை ! காணொளி !

டந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், ”இந்தியாவில் பயத்தை தேசிய நோயாக்க விளைகின்றனர். பாசிச சக்திகள் எந்த நாட்டிலும் ஜெயித்ததாக எங்கும் சரித்திரமில்லை. அவர்களின் அழிவு எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கிறது என்பதை இந்த உலகம் பார்த்திருக்கிறது. சில பத்தாண்டுகள் அவை ஏற்படுத்துகிற காயங்களில் இருந்து மீண்டு வருவதுதான் நமக்குச் சிரமமானது. ஆனால் அவர்களுக்கு அழிவு நிச்சயம்.

சுற்றி வளைத்துப் பேசக்கூடிய நிலைமையில் நாம் இல்லை. நேரடியாகப் பேச வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். கவுரி லங்கேஷ் மட்டுமல்ல, தூத்துக்குடி போராளிகள் 13 பேரும் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கின்றனர்.

நாம் அரசியல்வாதிகளிடம் முறையிடுகிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ரியல் எஸ்டேட்காரர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் எதை எடுத்து எங்கு விற்கலாம் என திட்டமிடுபவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  எந்த அரசியல் கட்சியும் மக்கள் சார்பாக இல்லை. சிறு சிறு அமைப்புகள், தனிநபர்கள்தான் மக்களுக்காக செயல்படுகிறார்கள்.

மரங்களின் வேர்கள் தண்ணீரைத் தேடிச் செல்வதைப் போல மக்கள் சரியான வழியைத் தேடிச் செல்வார்கள். சிறு சிறு அமைப்புகள் இணைந்து மக்களுடன் நின்று போராட வேண்டும். தேர்தலில் நின்று எதுவும் செய்ய முடியாது. அது சிக்க வைக்கும் பொறி. அதில் தீர்வு கிடையாது.

’இனிமேல் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம்’ என்பது மத்தியில் ஆள்பவர்களுக்கும், தமிழகத்தில் ஆள்பவர்களுக்கும் தெரியும். அதனாலேயே அவர்கள் எந்த மோசமான நடவடிக்கைக்கும் தயங்க மாட்டார்கள். இது மிகவும் மோசமான நிலைமை. அனைத்தையும் அவர்கள் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள். நாம் தைரியமாக உறுதியாக நிற்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

பத்து முகங்கள் ஒரே குரல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இங்கு இவ்விவகாரத்தில் நாம் பார்க்கிறோம். ஒரு சாமியார், காப்பர் முக்கியம், சைனா, இன்னொரு நடிகன் போலீசை எதிர்த்து எப்படி பேசலாம் என்கிறான். இவர்களின் கருத்துச் சுதந்திரம் குறித்து நமக்கு பிரச்சினையில்லை. ஆனால் இவர்கள் எல்லாரும் எப்படி ஒரே குரலில் பேசுகிறார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. தொடர்ந்து உங்களுடன் நிற்பேன்” என்றார்.

பாருங்கள், பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க