2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா ? கருத்துக் கணிப்பு

2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் இந்தியா “இந்து பாகிஸ்தானாக” மாறும் என்று சசிதரூர் கூறியிருப்பது நடக்குமா நடக்காதா? - கருத்துக் கணிப்பு !

1
இந்து பாகிஸ்தான் - சசி தரூர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சசிதரூர், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசியது ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.

வர இருக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தால், நாட்டை “இந்து பாகிஸ்தானா”க மாற்றி விடுவார்கள் என்பதே அப்பேச்சின் மையமான கருத்து. இந்து ராஜ்ஜியம் அமைப்பதுதான் சங்கபரிவாரத்தின் கொள்கை. அதை இன்றுவரை  பிரதமர் மோடி மறுக்கவில்லை என்கிறார் சசிதரூர்.

இதன் தொடர்ச்சியாக இவர்கள் ஜனநாயகத்தை தூக்கியெறிந்து அரசியல் சாசனத்தையே கூட மாற்றி விடுவார்கள். மக்களவையில் அசுரபலத்துடன் இருக்கும் பாஜக பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களையும் ஆள்கிறது. இந்நிலையில் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால், இது இந்தியாவுக்கு மிகப்பெரும் ஆபத்தாகிவிடும், என்கிறார் சசிதரூர்.

2024-ல் இந்தியா இந்து நாடாக மாறும் எனப் பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங்

இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘சசிதரூர் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும். பாகிஸ்தான் உருவானதே காங்கிரஸ் கட்சியால் தான். அதற்கு அந்தக் கட்சிதான் பொறுப்பு. இந்தியாவில் உள்ள இந்துக்களின் புகழைக் கெடுக்க காங்கிரஸ் நினைக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்தக் கூற்றிலேயே பா.ஜ.க கவலைப்படுவது ‘இந்துக்களின்’ புகழ் பற்றித்தானே தவிர மதச்சார்பின்மை அல்ல. இந்தியா ஒருபோதும் மதவாத நாடாகாது என்று அவர்கள் கூறவில்லை. இது இந்துநாடாக இருந்தாலும் பாகிஸ்தான் போல இல்லை என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்கள்.

இந்நிலையில் மிதவாத இந்துத்துவத்தை கொண்டிருக்கும் காங்கிரசுக் கட்சியும் தன்பங்கிற்கு பா.ஜ.கவிற்கு சாமரம் வீசியுள்ளது. அதன்படி “பேசும்போது எல்லை மீறாமலும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும்” என்று சசிதரூரைக் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தினாலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க அவர் மறுத்துவிட்டார்.

உடனேயே ரிபப்ளிக் டி.வியின் அர்னாப் கோஸ்வாமி உட்பட மோடியை ஆதரிக்கும் பெரும்பான்மையான ஊடகங்கள் பாகிஸ்தானை உருவாக்கியதே காங்கிரசுதான் என்று முசுலீம் வெறுப்பை ஊதிப் பெருக்கி, இந்தியா இந்து நாடுதான் என்பதை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இன்றைய கேள்வி:

2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் இந்தியா “இந்து பாகிஸ்தானாக” மாறும் என்று சசிதரூர் கூறியிருப்பது நடக்குமா நடக்காதா?

  • நடந்தே தீரும்
  • ஒரு போதும் நடக்காது
  • தெரியவில்லை
  • நடந்தாலும் நடக்கலாம்

டிவிட்டரில் வாக்களிக்க:

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க