நூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை பற்றியும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் பேசுகிறது, இச்சிறுநூல். நூலாசிரியர் கல்லூரி பேராசிரியர் என்பதால், வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாடுவது போலவே, நூலை வடிவமைத்திருக்கிறார்.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து ஒராண்டு நிறைவடைந்துவிட்டதையொட்டி, ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட நாளான ஜூலை – 01 அன்று, ஜி.எஸ்.டி. நாளாக  கொண்டாடியது மோடி அரசு.

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., என அடுத்தடுத்து தொடுக்கப்பட்ட தாக்குதலால் தீப்பெட்டி ஒட்டும் தொழிலாளர்கள் தொடங்கி, சிறுபட்டறை அதிபர்கள் வரையில் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கி உழல்கிறார்கள். இந்தப் பின்னணியில், ஜி.எஸ்.டி.யினால் விளைந்த சாதனைகள் என்று பா.ஜ.க. கும்பல் பட்டியலிடுவது வக்கிரமின்றி வேறென்ன?

அதை ஆதாரப்பூர்வமாக அறிய இந்த நூல் உதவி செய்யும். ஜி.எஸ்.டி.யைப் பற்றியும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் மிகச்சுருக்கமாக பேசுகிறது, இச்சிறுநூல். நூலாசிரியர் என்.மணி, கல்லூரி பேராசிரியர் என்பதால், வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாடுவது போலவே, நூலை வடிவமைத்திருக்கிறார். பல்வேறு சிறு கேள்விகளை கேட்டு விளக்கமளித்திருக்கிறார்.

நான்கையும் மூன்றையும் கூட்டினால் பத்து வருமா? நிச்சயம் வரும். என்ன குழப்புகிறீர்கள்? என்போருக்கு நம்ம ஊர் ஜி.எஸ்.டி. வரியைப் பார்த்த பிறகுமா இந்தக் கேள்வி என்று திருப்பிக் கேளுங்கள். பல்முனை வரியை ஒருமுகப் படுத்தினாலும் எளிமைப் படுத்தினாலும் வரியின் அளவு ஒன்றாகத்தானே இருக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். இங்கு வரிகள் எகிறிக் குதித்துள்ளதே ஏன்?

ஜி.எஸ்.டி. என்பது சாதாரண மக்களின் தலையில் புதிய சுமைகளை ஏற்றக்கூடியது. சிறு, குறு நிறுவனத்தினர், அமைப்பு சாராத சில்லரை வர்த்தகத்தினர், அவர்கள் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். ஜவுளித் தொழில், பீடி, மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, கட்டுமானம், போக்குவரத்து, தையல், சிறுபத்திரிகைகள், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில், வேளாண்மை அதுசார்ந்த தொழில்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

ஜி.எஸ்.டி. எப்படி அமலுக்கு வந்தது? ஜி.எஸ்.டி. வரிக்கு முன் அதன் ஆதரவாளர்கள் கற்பிக்கும் காரணங்கள் என்ன, காங்கிரசு என்ன சொல்கிறது? இடதுசாரிகள் கருத்தென்ன? தமிழக கட்சிகள் சொல்வதென்ன? யார் சொல்வது சரியானது? ஜி.எஸ்.டி. வரியால் ஜி.டி.பி. அதிகரிக்குமா? ஜி.எஸ்.டி. வரி விகிதங்ளை எப்படி நிர்ணயித்தார்கள்? உலக சமத்துவமின்மை அறிக்கை 2018க்கும் ஜி.எஸ்.டி.க்கும் என்ன தொடர்பு? ஜி.எஸ்.டி மூலம் வரிகள் மையப்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி அதற்குரிய சுருக்கமான விளக்கத்தை தந்திருக்கிறார், நூலாசிரியர்.

நூல்: அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு !
ஆசிரியர்: பேரா.என்.மணி

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: : 044 – 24332924
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 20
விலை: ரூ.10.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க