பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள், தலித் மற்றும் சிறுபான்மையினர், மாற்றுக்கருத்தை முன்வைப்பவர்கள் மீதான தாக்குதல்கள், கல்வி நிலையங்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் நம்முடைய பன்மைத்துவம், பல்வகையான பண்பாடு ஆகியவற்றின் மீதான அடக்குமுறைகள் என நாடு முழுவதும் வெறுப்புணர்வையும் நெருக்கடி நிலையை மிஞ்சும் அளவுக்கு அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்ந்து பல்வேறு பெண்கள் அமைப்புகளும் குழுக்களும் பொதுமக்களுமாக ‘ அமைதிக்கான உரையாடல்’ என்ற பரப்புரைப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல ஒருங்கிணைந்துள்ளனர்.

இந்தக் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள பிரசுரத்திலிருந்து சில வரிகள் …

…மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மற்றும் அதன் காவிப்படைகளான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., ராமசேனா போன்றவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

…பா.ஜ.க. அரசின் இத்தகைய கொடூரங்களை அதன் இந்துத்துவக் கருத்துக்களை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், முற்போக்காளர்கள், செயல்பாட்டாளர்களை இந்துத்துவா அழிவுச்சக்திகள் திட்டமிட்டு கொன்று வருகின்றனர். அல்லது அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.

…இந்தியாவை ஒற்றை பாசிச ஆட்சி, இந்து தேசியம் என மாற்றும் முயற்சியில் பா.ஜ.க. முனைப்பாக ஈடுபட்டு வருகிறது. கல்வி, பொருளாதாரம், சமூகநீதி சார்ந்த விசயங்களில் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு வருகின்றது. இதை முற்றிலும் தடுக்காவிட்டால், கண்ணெதிரில் ஒற்றை இந்தியாவை கட்டமைக்கும் ஆபத்து இருக்கிறது.

இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர் சங்கம், பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

இக்கூட்டமைப்பின் சார்பில், சென்னையில் இன்று (செப்-25) மாலை 5 மணியளவில், அடையாறு, டி.என்.ராஜரத்தினம் ஆடிட்டோரியத்தில் அரங்கக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வழக்குரைஞர் அருள்மொழி, சமூக செயற்பாட்டாளர் வ.கீதா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் இணையம் வெகு மெதுவாக இயங்குவதால் நேரலை ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் காணொளியாக பதிவேற்ற முயற்சிக்கிறோம்.

நன்றி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க