நம் மவுனத்தின் வன்மம் : சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நேரலை | Live Stream

தலித் சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம். வினவு நேரலை

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக “மீ டூ” இயக்கம் அதிகம் பேசப்படும் காலத்தில் அதே பாலியல் வன்முறையால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட முறையில் கொல்லப்பட்டிருக்கிறார் அந்த 13 வயது தலித் சிறுமி ராஜலட்சுமி.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சாமிவேல். மனைவி சின்னப்பொண்ணு, ஒரு மகன், இரு மகள்கள். கடைசி மகளான ராஜலட்சுமி அருகாமை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

சாமிவேல் வீட்டிற்கு அருகே மனைவி சாரதாவுடன் குடியிருக்கிறார் தினேஷ் குமார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வீட்டுக்கு ராஜலட்சுமி அவ்வப்போது தண்ணீர் பிடிக்க செல்வார். சில நாட்களாக சிறுமி ராஜலட்சுமியிடம் பாலியல் துன்புறுத்தல்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார் தினேஷ் குமார். இவற்றை பொதுவாக வெளியே சொல்லக் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்படும் சமூகத்தில், சொன்னால் தொலைச்சிருவேன் என்று மிரட்டப்படும் நிலையில் அச்சிறுமி இதை தனக்குள்ளேயே வைத்து குமுறியிருக்கிறார்.

வெளியே சொல்லாமல் அழுது அரற்றிய சிறுமி இறுதியில் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவும் இதை அப்பாவிடம் தெரிவிப்போம் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார். ஒரு கிராமத்து தாய் அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தனது மகளிடம் இத்தகைய பிரச்சினைகளை  வெளியே தெரியாமல் எப்படி சரி செய்வது என்பது ஏதோ விழிப்புணர்வு பற்றிய பிரச்சினை அல்ல. வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் அது.

தனது குற்றம் வெளியே தெரிய வந்ததும் ஆத்திரம் தலைக்கேறிய  தினேஷ் குமார் வீட்டில் இருந்த சிறுமி ராஜலட்சுமியின் தலையை துண்டாக்கி படுகொலை செய்திருக்கிறார்.

சாதிய வெறியோடு நடத்தப்பட்ட இந்தப் படுகொலையைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம்.

நாள்: 31-10-2018 நேரம் : 04:30

இடம்: சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகில்

பாருங்கள் ! பகிருங்கள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

4 மறுமொழிகள்

 1. what did vinavu team did when several dalits and backward community people rape a 11 year old deaf and dumb girl @ chennai ayanavarum???? No need to bring in politics inside the crime scene. People like vinavu team must be eliminated @ roots.

 2. கடனுக்குக் கப்பல் வாங்கினால், விரட் கோலி சதம் அடித்தால் பெருமையென நினைக்கும் இந்தியனும்;
  தா/ப வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகக் குரலெழுப்பிய சாதிஇந்துச் சங்கத்தலைவர்களும், நீதியரசர்களும்.;
  மீடுவை மேன்மக்களுக்கானதாக்கிய ஊடகங்களும்;
  கொடூரத்தை மறைக்க முயற்சி செய்த அரசு இயந்திரமும்;
  ஓரணியில்.
  வினவு குரலற்றோர் குரலாக, இதில் தவறென்ன கண்டார் இந்த இந்து இந்தியர்?

  அம்பேத்கார் ஏன் தனித்தொகுதி கேட்டார் எனப்புரிகின்றது.
  இதுவேறு இந்தியா.

  • ஒரு குற்றத்தை குற்றமாக மட்டுமே பார்க்க வேண்டும் ஆனால் வினவு ஒரு குற்றத்தை ஜாதி கண் கொண்டு பார்க்கிறது, அந்த குற்றத்தின் இலக்காக பிஜேபியை கொண்டு வந்து இணைக்கிறது, அதனால் வினாவிடம் நேர்மையில்லை.

   ஜாதி கட்சி கடத்துபவர்களுக்கும் நாங்கள் முற்போக்குவாதிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் (பிற்போக்கு) வினாவிற்கு என்ன வித்தியாசம் இருக்கிறது. கிறிஸ்துவ மதவெறியர்களும் வினவும் ஒன்று போல் நடந்துகொள்கிறார்கள்.

   • Manikandan போன்ற அறிவாளிகளுக்கு அர்ஜுன் சம்பத் (இந்து மக்கள் கட்சி) போன்ற சர்வதேச அறிவுஜீவிகள் மட்டுமே பதில் கூற முடியும்…. எப்பிடி பாஸ் ‘இவ்வ்வ்ளவு’ பெரிய அறிவுஜுவியா இரிக்கீங்க? தாங்கல பாஸ் கொசுத்தொல்ல

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க