வேதாரண்யம் வட்டார மக்களுக்கு அவசர உதவி தேவை !

வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆயகாரன்புலம் மற்றும் அண்டர்காட் கிராம மக்களைச் சார்ந்த மக்கள், கஜா புயலில் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தற்போது அங்கு சுற்றி இருக்கும் அரசுப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அம்மக்கள் அவதிப்படுகின்றனர். அங்கிருக்கும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பால், பிஸ்கெட், மருந்துகள், போர்வை, உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க உதவுங்கள்.

டெல்டா மாவட்டங்களில் அரசு நிர்வாகம் போய்ச்சேராத இடங்கள் பல புயலால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவுவது நமது கடமை!

உதவ விரும்புவோர் உடன் எமது தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு : தோழர் முரளி, 6383 461270
-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

நாகப்பட்டிணம்

பணங்குடி கிராமம்

படங்கள்: வினவு செய்தியாளர்.

தஞ்சாவூர்

ரத்தநாடு தாலுகா, திருமங்கலக்கோட்டை கிராமத்தில் மாட்டுக் கொட்டகை இடிந்து விழுந்ததில் பலியான மாடு.

ஒரத்தநாடு தாலுகா, அருமலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட வீடு.

படங்கள்: வினவு செய்தியாளர்.

***

அதிராம்பட்டினம்

புயல் ஓய்ந்து 24 மணி நேரம் கழித்து வெளியே வந்தேன். நான் இருப்பது என்னுடைய ஊர்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. காட்டுப்பகுதிக்குள் பயணம் செய்வது போன்ற எண்ணம் ஏற்பட்டது.

சி.எம்.பி. வாய்க்காலை ஒட்டி இருந்த மரங்கள், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த மரங்கள் அனைத்துமே முறிந்து அல்லது வேறோடு சாய்க்கப்பட்டு அப்படி அப்படியே கிடந்தன. மின் கம்பங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்கள் சாய்ந்து கிடக்கின்றன. சில தெருக்களில் மட்டும் தன்னார்வலர்கள் மரங்களை வெட்டி இருசக்கர வாகனங்கள் செல்ல வழியேற்படுத்தி இருந்தனர்.

மீனவப்பகுதி மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலையில் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்திவிட்டு வாகனங்கள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. போராட்டத்துக்குப் பின் ஜே.சி.பி. வரவழைக்கப்பட்டுள்ளது.

அதிரையை ஒட்டிய கிராமங்களான பழஞ்சூர், புதுக்கோட்டை உள்ளூர் போன்ற கிராமங்களில் தென்னைகள் வீழ்த்தப்பட்டுள்ளதை நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது. தேங்காய்க்குப் புகழ்பெற்ற அதிரை, மீண்டும் தன் இடத்தைப் பெற ஆண்டுகள் பல ஆகக்கூடும்.

ஊடகங்கள்கூட அதிரையைப் புறக்கணித்துவிட்டதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.

***

நிவாரணப் பணிகளைச் செய்யாத அதிராம்பட்டிணம் பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் சாலை மறியல். இரண்டு நாள்களாக மிகப்பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை இல்லை.

பட்டுக்கோட்டை சாலையிலும் மறியல்.

முகநூலில்: அழகப்பன் அப்துல் கரீம்

***

ஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மல்லிபட்டினம்.

கஜா புயலின் கோரதாண்டவத்தால் சிதிலமடைந்துள்ள மல்லிபட்டினத்தில் தலா குறைந்த பட்சம் 4 இலட்சம் முதல் அதிகபட்சம் 8 இலடசம் வரை மதிப்புள்ள 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் அழிந்து விட்டது. (குறைந்தபட்ச மதிப்பு 16 கோடி)

மல்லிபட்டினத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் எனதூர்காரர்களின் தென்னந்தோப்பில் 90 சதவிகித தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது.

வீடுகளை இழந்தவர்கள், கடைகளை இழந்தவர்கள் மற்றும் இதர பொருளாதாரங்களை இழந்தவர்கள் என சேதார மதிப்பு பல கோடிகளை தாண்டிவிட்டது.

எதிர்காலம் கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுவிட்ட எனதூர்காரர்கள் மீனவனாகவும், விவசாயியாகவும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக 110 கி. மீ வேகத்தில் கஜா புயல் எனதூர் வழியாக கரையை கடந்தும், இதுவரை அரசு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரையவில்லை, மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடபடவில்லை. தொலைக்காட்சிகளும், அரசியல்வாதிகளும் வழக்கம்போல நகரங்களை நோக்கியே படையெடுகின்றனர்.

அனைத்து தொலைத் தொடர்பு சேவையும் முடங்கி விட்டது, வெளிநாட்டில் வாழும் என்னை போன்றோர்களுக்கு அளவிடமுடியாத மன உளைச்சல், அரசு கை கொடுக்குமா..? அரசு உதவிகள் எந்தளவிற்கு நம்மை ஆறுதல் படுத்திவிடும் என்பன போன்ற எதிர்காலத்தை பற்றிய விடைதெரியாத கேள்விகள் …?

வெறிச்சோடி கிடக்கும் கடற்கரை அதைக் கடந்து செல்லும் ஒவ்வொரு மீனவனின் சந்தோசத்தையும் பிடுங்கி தன்னுள் புதைத்து வைத்துள்ளது.

60 கோடி மதிப்பீட்டில் புதிய துறைமுக வேலை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதில் விசைப்படகுகளை கட்டி அணைத்துக்கொள்ள பாவம் இந்த ராசியில்லாத துறைமுகத்திற்குத்தான் கொடுப்பினை இல்லை.

நடந்தவைகள் எல்லாம் நன்மைக்காகவே இருக்கட்டும், நடந்த சம்பவத்தில் மனம் தளர்ந்து விடாமல், தன்னம்பிக்கையோடு, புத்துணர்ச்சியோடு, நான் சிறுவயதில் கண்ட செழிப்பான மல்லிபட்டினமாக உருவெடுக்க விடா முயற்சியோடு வரும் நாட்களை தொடங்குவோம்.

கண்ணீருடன்

முகநூலில்: மு.முக்தார்

***

ஜா புயல் கரையைக் கடந்தாலும் அதன் பாதிப்புகள் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன. கஜா புயல் தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை விளக்கும் காணொளி!

தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க