சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களைக் காட்டிலும் உடல் நலனும்  ஆயுளும் குறைவாக பெற்றிருக்கிறார்கள் என்கிறது ஆஸ்திரிய மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு. இறைச்சி உண்ணாதவர்களுக்கு உடல் மற்றும் மனநல குறைபாடுக்கான சாத்தியங்கள் அதிகளவு உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிராஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.  சைவ உணவு பட்டியலில் நல்ல கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதும், அதிகப்படியாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உண்பதும் கேன்சர், ஒவ்வாமை மற்றும்  மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது என்கிறது மருத்துவப் பல்கலை ஆய்வு.

இறைச்சி உண்பவர்கள், காய்கறிகள் உண்பவர்களின்  உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் வேறுபாடுகளை ஆராய்ந்ததில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. காய்கறிகளை உண்பவர்கள் குறைவான மது அருந்துவதாகவும் சராசரி உடல் எடையைவிட குறைவான எடையை கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது. ஒட்டுமொத்தத்தில் இவர்களின் உடல் நலனும் மனநலனும் மிகவும்  பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். குறைவான இறைச்சி உண்பவர்களும்கூட உடல்நலனில் அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கிறார்களாம்.

“எங்களுடைய ஆய்வின்படி, காய்கறிகளை உண்ணும் ஆஸ்திரிய இளம்பருவத்தினர் குறைவான ஆரோக்கியம் உள்ளவர்கள். (புற்றுநோய், ஒவ்வாமை, மனநல குறைபாடுகளை பெற்றிருக்கிறார்கள்) மேலும் அவர்கள் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இல்லை. அவர்களுக்கு அதிகப்படியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது” என ஆய்வின் முடிவில் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

படிக்க:
தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி
மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ

இந்துத்துவ அடிப்படைவாதிகள் சைவமே சிறந்தது என முன்னெடுக்கிற அரசியல் மூலம் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சைவ உணவுப் பழக்கம் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் சைவம் உண்ணுகிறவர்களாக உள்ளார்கள்.

குரங்கிலிருந்து மனிதர்களை பரிணமிக்கச் செய்ததில் இறைச்சியின் பங்கு முக்கியமானது என அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. உண்மையில், சங்கிகளின் சிந்திக்க திராணியற்ற ‘மாட்டு மூளை’க்கு அவர்களின் சைவ உணவுதான் காரணமா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிச்சயம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும்.

செய்தி ஆதாரங்கள்:
Vegetarian India A Myth? Survey Shows Over 70% Indians Eat Non-Veg, Telangana Tops List
♦ Vegetarians are ‘less healthy and have a lower quality of life than meat-eaters’, scientists say

5 மறுமொழிகள்

  1. இந்த வினவு (கிறிஸ்துவ மதமாற்ற) கூட்டங்கள் ஹிந்துக்கள் மீது வெறுப்பை தூண்ட உழைக்கும் மக்கள் ஆதிவாசிகள் என்று ஒரு சில வார்த்தைகளை போட்டுவிடுவார்கள் அதன் பிறகு இவர்கள் பேசுவது எல்லாம் கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனமாக இருக்கும்.

    ஆஸ்திரியாவில் நடந்த ஆய்வுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்… ஆஸ்திரியாவின் தட்பவெட்ப நிலை என்ன ? இந்தியாவின் வெப்பநிலை என்ன ? இந்த அடிப்படை வித்தியாசம் கூட தெரியாமல் வினவு கூட்டங்கள் வேண்டும் என்றே வெறுப்பை தூண்டுகிறார்கள்… அன்போடு வளர்க்கும் ஆட்டையும் மாட்டையும் வெறும் மாமிசமாக பார்ப்பது மனிதநேயமற்ற முட்டாள் வெளிநாட்டு கைக்கூலி கம்யூனிஸ்ட்களுக்கு வேண்டுமானால் இயல்பாக இருக்கலாம் ஆனால் எல்லோரும் அப்படி அல்ல…

  2. உடல் மன குறைபாடுகள் ஏற்படுமோ என்னவோ? அசைவத்தை பார்த்து கவனமாக சாப்பிடவும் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்டு கறி என்கிற பெயரில் அனுப்பபட்ட 1000 கிலோ நாய் கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசைவ உண்ணிகள் கவனமாக சாப்பிடவும்.

    • பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களின் விருப்ப உணவு நாய்க் கறி மற்றும் பூனைக் கறி.
      நம் நாட்டு அறிவாளிகள்தான் எல்லாத்துலயும் தீட்டு பாக்குற ஆளுங்களாச்சே . . !

  3. வர வர வினவுல கட்டுரை எழுதறது எல்லாம் முட்டாப்பீசா இருக்குதுங்க. சைவமோ அசைவமோ சரியான அளவில் தெரிந்து உண்டால் ஆரோக்கியமே. சைவம் நல்லது என்று சங்கிகளுக்கு சம்பந்தம் இல்லாத ஆராய்ச்சிகளே நிறைய உள்ளன. இது இன்னும் முழுமையாக முடிவு பெறாத ஆராய்ச்சி. பன்னி கறி சாப்பிடும் ஜப்பாங்காரந்தான் ரொம்ப நாள் வாழறான். அதுக்காக எல்லாரும் அத சாப்பிட முடியுமா? இந்த கட்டுரை வெறும் காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டது. உங்களோட தாழ்வு மனப்பான்மைய விட்டு வெளிய வாங்க. நல்லது கெட்டத எல்லா இடத்திலும் பார்க்க்கும் அறிவு அப்பொழுதாவது வருதான்னு பாப்போம்.

  4. I appreciate Mr.Shan for his sober comments.thanks.
    இறைச்சி ஒரு மனிதனுக்கு எவ்வளவு கேடு விளைவிக்கும் என்பதை தினம் தினம் பல மருத்துவா்கள் எடுத்துச் சொல்லித்தான வருகின்றாா்கள். பணம் கொடுத்தால் எந்த மாதிரி கருத்தையும் ஆதரித்தோ எதிா்த்தோ கட்டுரை தயாா் செய்து தர பல போர்கள் தயாராக உள்ளாா்கள். இந்த சிறு விசயம் கூட அறியாதவரா வினவு. சைவ உணவு சிறந்தது.அதுவே எளிமைகயாக ஜீரணிக்கும் .ஆனால் போதிள அளவில் பலவகை காய்கறிகளை உண்ண வேண்டும்.அப்போதுான் உடலுக்கு தேவயைான சத்துக்கள் கிடைக்கும். யானைகள் சைவம்.அதன் பலம் சிங்கத்திற்கு உண்டா ? புலிக்கு உண்டா ? யானைகள் மனநல் குன்றியா வாழ்கின்றன. மாட்டுக்கறியை சமைத்து போட்டால் யானைகள் என்ன அப்பாவிகளாக மாறிவிடுமா ?
    தவறான கட்டுரை.சைவ உணவே சிறந்தது.ஆா்எஸ்எஸ்காரன் சைவஉணவை சிலாகிக்கின்றான் என்பதால் அது ஒன்றும் மோசமானதாகிவிடாது.
    அந்தமான தீவுகளில் மனிதர்கள் உடை உடுத்துவதில்லை. இந்தியாவிலும் அப்படி வாழுங்களேன்.
    பிலிப்பைன்ஸ் கொரியாவில் நாய்கறி சாப்பிட்டால் நாமும் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா ? ஏன் இப்படி அடிமைகளாக சிந்திக்கின்றோம். பிலிப்பனைன்ஸ பண்பாடு கெட்டவா்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் நாய்கறி சாப்பிடுவார்களாக இருக்கலாம். நம்மஊரிலும் புனைக்கறி சாப்பிடுபவா்கள் இருக்கின்றாார்கள்.அவர்களை ஊர் மக்கள் மதிக்க மாட்டாா்கள்.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க