ஜா புயலால் துயருரும் மக்களைக்காக்க கரம் கோர்ப்போம்!  மக்கள் அதிகாரம் அழைக்கிறது!

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை சீர்குலைத்திருக்கிறது கஜா புயல். முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக பல கட்சிகளும் பாராட்டினார்கள்.ஆனால் டெல்டா மக்களோ ஆதரவின்றி தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹைட்ரோகார்பனை கொண்டுவந்து விவசாயிகளை அழிக்க நினைக்கும் அரசு மக்களைக் காப்பாற்றுமா என்ன? நமக்கு சோறு போடும் மக்களை காப்பது நமது கடமை.  ஆகவே மக்கள் அதிகாரம் நிவாரணப் பணிகளில் ஈடுபட அனைவரையும் அழைக்கிறது.

உதவிப்பொருட்களை அள்ளிக்கொடுப்போம்! நமது மக்களைத் தாங்கிப்பிடிப்போம்!

தேவையான பொருட்கள்:

உணவு : பால் பவுடர், பிஸ்கெட் , குடிநீர் (பாட்டில்)

துணிகள் : (புதிய துணிகளை மட்டுமே வழங்குங்கள்) போர்வை, துண்டு, சட்டை, ஷார்ட்ஸ், பனியன், நைட்டி, லுங்கி

இதர அத்தியாவசிய பொருட்கள்: தார்ப்பாய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, எமெர்ஜென்சி லைட்

மருத்துவப்பொருட்கள் : பாரசிட்டமால், பெயின்பாம், பிளீச்சிங் பவுடர், நாப்கின்

உதவ தொடர்புக்கு,
தோழர் காளியப்பன் : 9443188285
தோழர் மருது : 9962366321
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
ppchennaimu@gmail.com
முகநூல் : vetrivel cheziyan – makkal athikaram

தகவல்: மக்கள் அதிகாரம்

*****

அடிமை எடப்பாடி அரசின் அமைச்சர் ஓ.எஸ். மணியன் விரட்டியடிப்பு:

அமைச்சர் ஓ.ஸ் மணியன் புயல் பாதித்த பகுதியான வேட்டைக்காரநிறுப்பைப் பார்வையிட நேற்று (18.11.2018) சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் புயலுக்குப் பின்னர் நிவாரணமோ அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையில் மக்கள் அவரோடு சென்ற வாகனங்களையும் முற்றுகையிட்டுள்ளனர். மக்களை எதிர்கொள்ள திராணியற்ற ஓ.எஸ்.மணியன் மாற்றுவழியின் ஊடாக தப்பி ஓடிச் சென்றுள்ளார். அவருடன் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர் பகுதி மக்கள்.

*****

திருவாரூர் பவித்ரமாணிக்கம் பகுதி மக்கள், புயல் முடிந்த பின்னர் மூன்று நாட்களாகியும் குடிநீர் வழங்காத அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் விழுந்த மரங்கள் வரை அனைத்தையும் மக்களே வெட்டியுள்ளனர். அரசுதரப்பில் இருந்து யாரும் எட்டிக் கூட பார்க்காத நிலையில் மக்கள் இன்று (19-11-2018) காலையில் வீதிக்கு வந்து போராடத் துவங்கியுள்ளனர்.

தகவல்: மக்கள் அதிகாரம்

*****

தஞ்சை அம்மாப்பேட்டை – புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மூவர்கொட்டாய் கிராமத்தில் ஜெனரேட்டர் மூலம் நீரேற்றும் கிராம மக்கள்:

*****

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க