நண்பர்களே….

பொ.வேல்சாமி
மிழ்நாட்டு தேவதாசி மரபின் வரலாறுக் குறித்து ஆய்வுச் சொற்பொழிவிற்கு என்னை அழைத்திருக்கின்றனர். இது தொடர்பான பல்வேறு வரலாற்றுத் தரவுகளைச் சேகரித்துக் கொண்டுள்ளேன். சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல்களிலேயே இதற்கான வித்துக்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து வந்த காலங்களில் களப்பிரர் காலம் தவிர்த்து மற்ற காலம் முழுமையும் தேவதாசி மரபு வேகமாக வளர்ந்து வந்துள்ளது. அந்த வளர்ச்சிக்கு தமிழ்நாட்டுக் கோவில்கள் நிலைக்களமாக இருந்துள்ளன.

இந்தக் காலங்களில் பல குடும்பத்தினர் தங்கள் பெண்களை தேவதாசிகளாக ஆக்கிய பதிவுகளும் வறுமையின் காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் குறிப்பிட்ட கோவிலுக்கு விற்றுக்கொண்டு அடிமைகளாகி தேவதாசிகளாக மாறியவர்களின் வரலாறும் பதிவாகி உள்ளன. உச்சக்கட்டமாக 18, 19-ம் நூற்றாண்டுகளில் பச்சிளம் பெண்குழந்தைகளை கோவிலுக்கு விற்பனை செய்து அவர்களை தேவதாசிகளாக்கிய பதிவுகள் மோடி ஆவணங்களில் (மராட்டி மொழியை எழுதப் பயன்படும் சுருக்கெழுத்து முறைகளில் ஒன்று மோடி எழுத்துமுறை)  பதிவாகி உள்ளன.

படிக்க:
இந்த உலகம் பார்த்துப் பழகியதுதான் எங்கள் அம்மணம்
தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

கே.எம். வெங்கடராமையா

அப்படியான பதிவுகளில் ஒன்றில் இவ்வாறு தாசிகளாக ஆவதற்கு விற்கப்படும் குழந்தைகளின் தகுதிகளாகக் கூறப்பட்டுள்ள ஒரு தகுதியாக மேற்கண்ட வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தைப் படத்தில் கொடுத்துள்ளேன். இதுபோன்ற பல செய்திகளும் இன்னும் பல்வேறுபட்ட தமிழக வரலாறு குறித்த வியப்பான செய்திகளும் இந்நூலில் பல்வேறு இடங்களில் பேசப்பட்டுள்ளதால் ”தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்” என்ற இந்த நூலை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

நூலை பதிவிறக்க: தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்