டந்த செப்டம்பர் மாதம் அரியானா மாநிலத்தில் பள்ளி இறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்.  இந்தச் சம்பவம் தேசிய ஊடகங்களில் வெளியான பிறகு, அம்மாநில பாஜக அரசு 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. கண்டனங்களை வாயடைக்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரியானா அரசு ரூ. 3 லட்சத்தை இழப்பீடாக கொடுத்தது. அப்பணத்தைத் தூக்கி எறிந்து, தங்களுக்கு நீதிதான் வேண்டுமென கேட்டது அந்தக் குடும்பம்.

கும்பல் வன்முறைக்கு பெயர்போன அரியானா மாநிலம், பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் ‘பெருமை’ மிகு நிலைமைக்கு, அரியானாவின் பாஜக முதலமைச்சர் மனோகர் கட்டார் நிச்சயம் ஒரு காரணமாக இருப்பார். பாலியல் வல்லுறவு குறித்து மனோகர் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் உதிர்த்த கருத்தைப் படியுங்கள்…

மனோகர் கட்டார்

“பாலியல் வல்லுறவுகள் இப்போது அதிகரிக்கவில்லை. முன்பு நடந்தது, இப்போதும் நடக்கிறது. இப்போது அதிகம் வெளியே வருகிறது. 80% முதல் 90% வரையான பாலியல் வல்லுறவு மற்றும் ஈவ் டீசிங் வழக்குகள் தெரிந்தவர்களுக்கிடையே ஏற்படுபவையே. அதாவது, அவர்கள் சேர்ந்தே பல காலம் சுற்றிவிட்டு, ஒருநாள் சண்டை போடுவார்கள். அடுத்த நாள், அவன் என்னை பலாத்காரம் செய்துவிட்டான் என்று வழக்கு பதிவார்கள்.” ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள், பேசுவார்கள். இந்துத்துவ அடிப்படைவாதம் அதைத்தான் அவர்களுக்குச் சொல்லித்தந்திருக்கிறது.  ஆனால், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படி பேசுவதுதான், கும்பல் வன்முறையாளர்களை அம்மாநிலத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

படிக்க:
♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை
♦ உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் !

“இதுபோன்ற மனநிலையில் உள்ளவர் நமது மாநிலங்களை ஆள்கிறார்கள் என்பது துரதிருஷ்டமானது. கட்டாரின் கருத்து மன்னிக்க முடியாதது. அரியானாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்.” என கட்டாரை கடுமையாக தாக்கியுள்ளது டெல்லி பெண்கள் ஆணையம்.  தங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்து கொள்கிற சுதந்திரத்தின் மீது நம்பிக்கையற்ற, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாத முதலமைச்சரை நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது பெண்கள் ஆணையம்.

ஆனால், மோடியும் கட்டாரும் ஒரே இந்துத்துவ அடிப்படைவாத பள்ளியில் பயின்றவர்கள் என்பதை பெண்கள் ஆணையம் மறந்துவிட்டிருக்கிறது. அடிப்படைவாதிகளின் ஆட்சியில் பெண்கள் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

செய்தி ஆதாரம்: The Hindu

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க