ஊடக உலகில் வினவு தளத்தின் அவசியம் என்ன ? வாசகர் சர்வே

வினவு தளத்தின் செயல்பாடுகள், கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்த உங்கள் கருத்துக்கள், வினவு சந்திக்கும் பிரச்சினைகள், என்ன மாற்றம் செய்யலாம் ? சர்வேயில் பங்கெடுங்கள் !

2

ண்பர்களுக்கு வணக்கம் !

இணையத்தில் வினவு ஆரம்பித்த போது இன்றைக்கிருக்கும் எண்ணிறந்த தமிழ் ஊடகங்கள் அன்று இல்லை. நூற்றுக்கணக்கான செய்தித் தளங்கள், வீடியோ சானல்கள், சமூக வலைத்தளங்களின் பிரம்மாண்டமான வளர்ச்சி என இன்று இணைய உலகம் பரபரப்பாகி விட்டது. இதில் வினவு தளத்தின் இடம் என்ன?

மாற்று ஊடகமாய் அதன் திசைவழி சரியாக அமைந்திருக்கிறதா? ஓரளவு அரசியல் பார்வையும், முற்போக்கு எண்ணமும் கொண்ட வாசகர்களுக்கு வினவு தேவைப்படுகிறதா? தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்ன மாற்றம் தேவை? இங்கு மக்கள் எதை விரும்பி படிக்கிறார்கள்? எவற்றை அவர்களுக்கு விரும்பும் வகையில் சொல்ல வேண்டியிருக்கிறது?

மக்கள் நன்கொடை – சந்தா இல்லாமல் வினவு இல்லை. ஆனால் அப்படி மக்கள் பங்கேற்கிறார்களா? வினவு நிதிச்சுமை எப்படி இருக்கிறது? அதில் மக்கள், வாசகர்கள், தோழர்கள் பங்கு என்ன? சந்தா கட்டுபவர்கள் அதிகரித்து வருகிறார்களா? விளம்பரங்கள் இன்றி கார்ப்பரேட் ஊடகங்கள் இல்லை. வினவு எப்படி நடத்தப்படுகிறது?

இவையன்றி ஊடக உலகம், மாற்று ஊடகம், வினவு செயல்பாடு குறித்து நீங்கள் சொல்ல விரும்பும் எதுவும் எங்களுக்கு முக்கியமானது. இந்த சர்வேயில் பங்கெடுங்கள்! வினவு படிக்கும் உங்கள் நண்பர்களையும் பங்கேற்கச் சொல்லுங்கள்! எங்களை சீரமைக்கவும், எங்களது சுமைகளை உங்களிடம் பகிரவும், உங்களது குரலை எங்கள் பார்வையில் பதியவும் இந்த சர்வே உதவி செய்யும். இணைந்து பயணிப்போம்.

நன்றி!

நட்புடன்
வினவு

சர்வேயில் பங்கேற்க :

சர்வே படிவத்தில் மொத்தம் 20 கேள்விகள் உள்ளன. அவை மூன்று பக்கங்களில் உள்ளன. முதல் பக்கத்தை முடித்த பிறகு தொடர்க பட்டனை அழுத்தினால் அடுத்த பக்கம் வரும். மூன்றாம் பக்கத்தில் இறுதியாக நீங்கள் சொல்லும் ஆலோசனைகளுக்கான கேள்விகள் உள்ளன. சில நண்பர்கள் முதல் பக்கத்தில் உள்ள நான்கு கேள்விகளோடு முடிக்கிறார்கள். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதன் மூலமே சர்வே நோக்கம் நிறைவேறும். நன்றி

செல்பேசி மூலம் சர்வேயில் பங்கேற்போருக்கு…

மேசைக்கணினி, லேப்டாப் மூலம் பங்கேற்போருக்கு…

2 மறுமொழிகள்

  1. தோழரே உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது அதே சமயம் மிக விரிவாகவும் உள்ளது. எனவே உங்கள் கருத்து அனைவரையும் சென்றடைய கட்டுரைகளை கொஞ்சம் சுருக்கமாக எழுதினால் அனைவரும் முழு கட்டுரையும் படித்து பயனடைவார்கள்.

  2. சர்வே அது இதுன்னு கலக்கறேள். நேக்கும் வயிறு கலக்கறது. சங்கி அம்பி மணிகண்டன் சர்வேயில ஏதாவது எசகு பெசகா சொன்னா தயை பண்ணி மன்னிச்சுடுங்கோ! நேக்கு புரியறது, உங்கள மாறி மனுசாள் இப்படி ஒரு மீடியா நடத்த எப்படி கஷ்டப்படுவேள்னு… அம்பிக்கு புரியாது, ஏதாச்சும் சீனா, பாகிஸ்தான்னு பாய்னு உளறுவார். மன்னிச்சு வுட்டுடுங்கோ!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க