சபரிமலை, அயோத்தி, RSS கொலை செய்யும் அறிஞர்கள் : மதுரை PRPC கூட்டம் | Live Streaming

ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கப்பட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் சூழலில் நான் செய்ய வேண்டியது என்ன ? ம.உ.பா.மையத்தின் 15-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! மதுரையிலிருந்து வினவு நேரலை !

ழங்குடி மக்கள், தலித்துகள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துச் சுற்றுச் சூழலை நாசமாக்கும் கார்ப்பரேட்களுக்கு அரணாக நிற்கும் மோடி அரசு அவற்றை எதிர்த்துப் போராடும் மக்களைக் காவல் படைகளை ஏவிப் படுகொலை செய்கிறது.

தமிழ்நாட்டில் மோடியின் பினாமியாக ஆட்சி நடத்தும் அதிமுக அரசு ஸ்டெர்லைட்டில் 14 உயிர்களைக் காவு வாங்கிய பின்பும் ஆலையைத் திறக்க அப்பட்டமாகத் துணை போகிறது. தமிழ் இனத்தின் மீது பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 8-வழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம் அண்மையில் கஜா புயல் பேரிடர் நிவாரணம் மறுப்பு மூலம் தமிழக விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியும் புதிய சட்டங்களை இயற்றியும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமாகவும் தீர்ப்புகள் முரண்படும் போது அவற்றை நடைமுறைப்படுத்த மறுத்து கலவரம் செய்தும் ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.

இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்று முடிவு செய்தாக வேண்டும்.

அனைவரும் வருக !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15-ம் ஆண்டுவிழா கருத்தரங்கம் | வினவு நேரலை

பாருங்கள் ! பகிருங்கள் !

நாள் : 16.12.2018, ஞாயிறு மாலை 5.00 மனி
இடம் : நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம்(சோகோ அறக்கட்டளை)
14., ஏரிக்கரை சாலை, கே.கே. நகர், மதுரை-20. (அப்போலோ மருத்துவமனை அருகில்)

தலைமை : வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

வரவேற்புரை : திரு. அ. சீநிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்!
கருத்துரை: வழக்கறிஞர் தி. லஜபதிராய், உயர்நீதிமன்றம், மதுரை.

சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும் !
ஆய்வுரை: தோழர் எஸ். பாலன், பெங்களூரு.

தோழர் கோவன் மற்றும் ம.க.இ.க. கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள்

களப் போராளிகளின் நேருரை : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.

நன்றியுரை : திரு. ம. லயனல் அந்தோணி ராஜ், செயலாளர், ம.உ.பா. மையம், மதுரை

கீழைக்காற்று வெளியீட்டகத்தின் நூல்கள் கிடைக்கும்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க