னைத்து கணினிகளும் அரசு நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவது மோடி அரசால் சட்டப் பூர்வமாக்கப்பட்டுள்ளது. கணினியால் சேகரிக்கப்படும், உருவாக்கப்படும், உள்வாங்கப்படும் அல்லது அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தையும் இடைமறிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் நீக்குவதற்கும் மத்திய உளவுத்துறை, அமலாக்க இயக்குனரகம், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட 10 மைய அரசு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து உள்துறை அமைச்சகம் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

people under surveillanceசந்தாதாரர், சேவை வழங்குபவர் அல்லது கணினி வைத்துள்ள நபர் என்று யாராயினும் மேற்சொன்ன நிறுவனங்கள் ஆய்வு செய்வதற்கு தேவையான வசதிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்ய வேண்டும். மீறினால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் மேலும் தண்டத்தொகையும் செலுத்த வேண்டியிருக்கும் என்று அந்த ஆணை கூறுகிறது.

மைய அரசுக்கு இதற்கான அங்கீகாரத்தை 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69(1) வழங்கியிருக்கிறது. “இந்திய இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு,  இந்தியாவின் பாதுகாப்பு,  அரசின் பாதுகாப்பு, வெளிநாட்டு அரசுகளுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது மேற்கூறியவற்றிற்கு எதிரான எந்தவொரு குற்றத்தினையும் தடுத்தல் அல்லது அத்தகைய குற்றங்கள் மீதான விசாரணை நடத்துதல்” என்ற அடிப்படையில் செயல்பட எந்த ஒரு நிறுவனத்திற்கும் மைய அரசு வழிகாட்டலாம் என்று அந்த சட்டப் பிரிவு கூறுகிறது.

இந்த ஆணை இந்திய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு தேவையானது, மேலும் காங்கிரசு தலைமையிலான அரசு 2009-ம் ஆண்டு கொண்டுவந்த கொள்கையின்  விரிவாக்கம்தான் இது என்றும் பல்வேறு அரசு அதிகாரிகளும் பா.ஜ.க நிர்வாகிகளும் முட்டுக் கொடுக்கின்றனர்.

சட்டப்பிரிவு 69 (1)-ன் கீழ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து அங்கீகார ஆணைகளும் நியாயமானதாகவும் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் நடைமுறையின்படி இருக்க வேண்டும். இந்திய தந்தி விதிகள், 1951-ன் விதிமுறை 419A-ன் கீழ் மைய அல்லது மாநில அரசினால் உருவாக்கப்பட்ட ஆய்வுக்குழுவினால் அத்தகைய ஆணைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் விதி 419A-ன் கீழ் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்களின் உறுப்பினர்களாக அரசாங்கத்தின் செயலர்களே உள்ளனர். அதாவது, தன்னுடைய முடிவுகளுக்கு தீர்ப்பெழுத தன்னையே நீதிபதியாக்கி கொண்டுள்ளது இந்த அரசு நிர்வாகம். தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று கூறிக்கொள்ளும் ஒரு அரசு இதை விட இங்கே வேறு என்ன கேலிக்கூத்தை அரங்கேற்ற முடியும்?

இது வெளிப்படையான நீதி என்ற கருத்தாக்கத்துக்கே எதிரானது: அதாவது எந்த மனிதரும் தன்னுடைய வழக்குக்கு தானே நீதிபதியாக முடியாது.

அந்தரங்கத்திற்கு அச்சுறுத்தல்:

அரசாங்கத்தின் கண்காணிப்பு தனிநபரின் அந்தரங்கத்தை அச்சுறுத்துகிறது மேலும் அது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தரங்கம் ஒரு அடிப்படை உரிமை என்று ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. மேலும் ஏனைய தனிநபர் உரிமை போலவே சட்டபூர்வமான நடவடிக்கைகள், சட்டப்படியான அரசின் நோக்கம் மற்றும் சமநிலை கட்டுப்பாடு (proportionate) என்ற மூன்று நிபந்தனைகளுக்கு இது கட்டுப்படக்கூடியது.

இதன் விளைவாக 69(1) -ன் படி போடப்பட்ட இந்த ஆணையானது மேற்சொன்ன மூன்று சோதனைகளையும் கடக்க வேண்டும். சட்டமன்ற மற்றும் நீதித்துறை மேற்பார்வை இல்லாமல் தான்தோன்றித்தனமான மைய அரசின் இந்த ஆணை தனி நபர் அடிப்படை உரிமை மீது சமனற்ற கட்டுப்பாட்டை விதிப்பது அரசியலமைப்பிற்கே எதிரானது.

மேலும் தகவல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க மைய அரசு உருவாக்கிய ஸ்ரீகிருஷ்ணா குழு ஜெர்மனி, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்டங்களை ஒப்பிட்டு தன்னுடைய அறிக்கையின் 125-ம் பக்கத்தில்  “ஜனநாயக நாடுகளில் செயல்பாட்டுப் பரிசீலனை என்பது சட்டமன்ற மேற்பார்வை அல்லது நீதித்துறை அனுமதி அல்லது இரண்டுமாக சேர்ந்தேதான் இருக்கின்றன.  ஆனால் இங்கு அதுமட்டும் அவ்வாறாக இல்லை” என்று கூறுகிறது.

படிக்க:
மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா ?
♦ ஆதார் : மாட்டுக்கு சூடு ! மனுசனை உளவு பார் !!

இந்திய அரசாங்கம் தம் மக்களை கண்காணிக்க கொண்டுள்ள பல வழிகளில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளும் ஒன்றாகும். இந்திய தந்தி சட்டம்-1885, தந்தி விதிகள்-1951 மற்றும் இந்திய அஞ்சல் அலுவலக சட்டம் – 1898 ஆகிய சட்டங்களிலும் இதே போன்ற ஏற்பாடுகள் உள்ளன. இந்த சட்டங்கள் காலனியாதிக்க காலத்தில் வெள்ளையர்களால்  உருவாக்கப்பட்ட சட்டங்களின் விரிவாக்கமே ஆகும். மேலும் ஏமாற்றமளிக்கும் வகையில் இந்த தகவல் தொழில்நுட்ப சட்ட கண்காணிப்பு என்பதும் கூட ஒரு காலனியாதிக்க நீட்டிப்பாகவே இருக்கிறது.

பல்தேசிய இன மக்களின் ஒருமைப்பாட்டிலும், தன்னுடைய சொந்த மதிப்பீடுகளின் மூலமாக உருவாக்கப்படும் சுயேச்சையான அரசியலைமைப்பாலும் மட்டுமே தன்னுடைய இறையாண்மையை இந்தியா கட்டியெழுப்ப முடியும். ஆனால் தன்னுடைய சொந்த மக்களை கண்காணிப்பதன் மூலம் ஆங்கிலேய அரசு என்ன செய்ததோ அதையே தான் இந்திய அரசும் இன்று செய்கிறது. இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. ஏகாதிபத்தியங்களால் கைமாற்றி கொடுக்கப்பட்ட போலி சுதந்திரம் அடைந்த அனைத்து நாடுகளுக்குமான பிரச்சினை.

இந்த ஆணையை எதிர்த்து The Hindu பத்திரிகையில் வாசகர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்:

DR. SESHADRI KANNAN : ஏஜெண்டுகள் என்று கூறிக்கொண்டு தனிப்பட்ட கணினிகளுக்குள் நுழைவது கேலிக்குரியது. ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி ஒன்றுமே சாதிக்காத அரசாங்கம் புதிதாக எதாவது சாதிப்பார்கள் என்று அதே நிறுவனங்களுக்கு கூடுதலான அதிகாரங்களை அறிமுகப்படுத்துகிறது. அரசாங்கத்தின் நடவடிக்கை உண்மையிலேயே நேர்மையற்றது. மேலும், காங்கிரஸ் அறிமுகப்படுத்திய போது எதிர்த்தவர்கள்  இப்போது திடீரென்று அறிமுகப்படுத்துவது நியாயமற்றது. இது மோசமாக தோல்வியடைந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை போல மற்றுமொரு நடவடிக்கையே.  இது முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயகத்தையும் அப்பாவி மக்களையும் காப்பாற்ற ஆட்சியாளர்களை மாற்ற இதுதான் சரியான நேரம். இதை அறிமுகப்படுத்தியதற்கு ஏதேனும் ஒரு நல்ல காரணம் இருக்கிறதா?  தற்போதுள்ள அனைத்து சட்டங்களும் தோல்வியடைந்து விட்டதற்கு ஏதேனும் சான்றுகள் இருந்ததா?

Mel ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு அஞ்சுகிறார்கள். கணினிக்குள்ளும் ஸ்மார்ட்போன்களுக்குள்ளும் நுழைந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை காண விரும்புகிறார்கள். இது ஜனநாயகத்தை ஆட்சியாளர்களுக்கு தோதாக வளைப்பதாகும். ஒரு கட்சி மற்றொன்றை புறம் சொல்லுகிறது ஆனால் இருவரும் ஒன்று போலவே நடக்கிறார்கள். 

Naresh Chand : அனைத்து கணினிகளையும் புலானாய்வு நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் ஒப்படைப்பதில் ‘தி ஹிந்து’ மகிழ்ச்சி கொள்கிறதா? ‘தி இந்து’வுக்கு இது சரியான வழியாக சரியான நடவடிக்கையாக தெரிகிறதா? பொதுவாக எப்போதும் போல மோடிக்கும் அவரது அரசுக்கும் பின்னால் ‘தி ஹிந்து’ இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இப்போது எந்த பக்கம் இது நிற்கிறது?

Anupam Rae : நாம் இப்போது போலிசு இராஜ்ஜியத்தை நோக்கியா செல்கிறோம்? பெரியண்ணன் நம்மை எப்போதும் கண்காணிக்கிறார். இந்த மீம்பெரும் தகவல்களை கையாளும் திறமை படைத்தவையா இந்நிறுவனங்கள்? இந்நிறுவனங்கள் வைக்கோலிலிருந்து கோதுமையை தனியாக பிரிக்குமா? ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறன். 

Dr. Sayar : இது கண்டிப்பாக மோடியின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை தான்….. ஒவ்வொரு குடிமக்களின் காதுகளாகவும் கண்களாகவும் மாற முயல்கிறது மேலும் ஒவ்வொரு குடிமக்களையும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. இந்நடவடிக்கை என்பது 2019 தேர்தலுக்கான தகவல்களை திரட்டவே அன்றி தேசிய பாதுகாப்பு என்பதெல்லாம் சும்மா சாக்குபோக்கு. 

Arvind : இது அடிமைத்தனம் அன்றி வேறென்ன?அவர்கள் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் கணினிகளையும் நோட்டம் விடுவார்களா? மேன்மைதாங்கிய உச்சநீதிமன்றத்தின் அந்தரங்கம் தொடர்பான தீர்ப்பு எங்கே?  இது கொடூரமானதன்றி வேறென்ன?புலனாய்வு செய்யும் திறமையில் அல்ல சிக்கல் என்னவெனில், புலானாய்வு நிறுவனங்களை நடத்துபவர்கள் மனிதர்கள். அவர்கள் பக்கச் சார்பு கொண்டவர்கள். பல்வேறு வகுப்புகள், சாதிகள், மதங்கள் மற்றும் வர்க்க பிரதிநிதிதத்துவம் இல்லாததால் பக்கசார்பே இருக்கும். புலனாய்வுக்கு பதிலாக சித்தரவதைகள், ஊழல், மனித துன்புறுத்தல்கள் ஆகியவையே இருக்கும். மேலும் பயம் மற்றும் சுதந்திரமின்மைதான் இருக்கும்.

புலனாய்வு இயந்திரம் சார்பற்றதாக இருந்தால், அமலாக்க நிறுவனம் சார்பற்றதாக இருந்தால்,  நீதித்துறை செயல்முறை சார்பற்றதாக இருந்தால்  பின்னர் தானாகவே குற்றங்கள் தீவிரமாக குறைந்து விடும்.

அரசாங்கத்தின் இந்த ஆணையை நான் ஏற்கவில்லை. ஏனெனில் ஏழை மற்றும் பலவீனமான பிரிவினருக்கு எதிராக இது பயன்படுத்தப்படுமே ஒழிய ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் பணக்கார “அழுகிய உருளைக் கிழங்குகளுக்கு” எதிராக அல்ல என்பதை நான் அறிவேன். ஜெய்ஹிந்த்.

செய்தி ஆதாரம் :
♠ All computers can now be monitored by govt. agencies

♣ Centre’s order on computer surveillance is backed by law – but the law lacks adequate safeguards

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க