ன்னண்ணே! கரட்டாடு மாதிரி பேப்பர்லையே கவுந்தடிச்சி கெடக்கிறீங்க..

டேய்! புது வருசம் பொறக்குதுடா, அதான் ராசி பலன பார்த்துகிட்டுருக்கேன்..

அதென்ன புள்ளையா? குட்டியா? பொறக்குறதுக்கு.. காலம் போய்கிட்டுதான் இருக்கும்… என்னண்ணே! அதுல பூச்சி பூச்சியா கெடக்கு..

அட புரியாதவனே, அது கடகம், விருச்சிகம், மீனம்னு ராசி டா.. அதோட படம் போட்டுருக்கான்.. இந்த வருசம் எண்கணித ஜோதிடப் படி குருபகவான் ஆதிக்கத்துல பொறக்குறதால பணப்புழக்கம் அதிகரிக்குமாம்..

ப்ப்பூ.. அடக்கமாட்டாம சிரிப்பு வருதுன்ணே! நான் வேற எதாலாவது சிரிச்சிட போறேன்.. ராயர் கடைக்கி பத்து ரூவா பாக்கின்னு நானே ட்ராயர் கிழிய தாண்டி ஓடி வரென்.. சிங்கில் டீக்கே சிங்கி அடிக்கிறோம்.. வங்கியில பணம் கொட்ட போவுதுன்னு மோடி அவுத்துவுட்ட கதையா இல்ல இருக்கு!

PM modi

உன்ன மாதிரி ஆளுங்களுக்காகதான் இன்னிக்கிகூடா கடைசி மன்-கி-பாத்-ல மோடி பேசியிருக்காரு. எப்ப பார்த்தாலும் எதிர்மறையா பேசி அது வைரலா பரவுறது நாட்டுக்கு கேடுன்னு!

என்னது.. கடைசியா மங்க்கிய பார்த்தாரா?

டேய்! அது மங்கி இல்லடா! ரேடியாவுல பேசறது.. இந்த வருசமாவுது அவரு சொல்ற மாதிரி நேர்மறையா பேசு, நல்லதையே வைரலா பரப்பு.. அப்பதான்டா புது வருசம் நல்லா இருக்கும்!

என்னாண்ணே! கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும்ங்குற மாதிரி, காலண்டர கிழிச்ச வருசம் பொறக்குங்றீங்க.. வாயத் தொறந்தா வைரலா பரவும்ங்குறீங்க.. அ..தாம் பாத்தீங்கல்ல! வாய தொறக்க தொறக்க வைரலும் டெங்குமா பரவுதே.. அக்கவுண்டுல பணம்னாரு, கடுகு டப்பா காசும் காணா போச்சி.. ஊழல ஒழிப்பேன்னாரு கன்ட்டெய்னரெல்லாம் ராக்கெட் வேகத்துல ரெண்டாயிரம் ரூவா தாளா மாறிகிடிச்சி!.. இந்த சிலிண்டருக்கு மானியம்னாரு அதையும் வெலைய ஏத்தி வெறும் அடுப்ப சூனியமாக்கிட்டாரு இதான் நீங்க சொல்லற மாதிரி நேர்மறையா பேசி வைரலா பரப்பிக்கிட்டு போறதா? அதாவது.. ஏமாந்தவன் மூஞ்ச கழுத காலால கொஞ்சுன மாதிரி இருக்குன்ணே.. நீங்க சொன்ன தத்துவம்!

ஏய்.. இந்த வருசம் பொறக்குறப்பவே உனக்கு நேரம் சரியில்லேன்னு நெனைக்கிறேன்.. அததுக்கு ஒரு ராசி வேணும்டா.. உன் ஜாதகம் என்ன? ராசி என்னான்னு சொல்லுடா?

அட நீங்க வேறன்ணே! பொறந்தப்பவே எங்க அப்பன முழுங்கிட்டேன்னு ஆளாளுக்கு எனய இழுத்து.. இழுத்து.. திட்டியிருக்கானுவ.. இந்த கடுப்புல எவன் எனக்கு ஜாதகம் எழுதி வச்சிருப்பான்? ஒரு முற வைத்தீஸ்வரன் கோயிலு நாடி சோசியன் சொன்னான்.. டேய்! முப்பது வயசுல நீ எங்கோ டாப்புல போவ போற பாருன்னு..

வும்.. அப்புறம் என்னடா ஆச்சு?

ம்ம்.. இருக்குற கூர டாப்பும் காத்துல பிச்சிக்கிட்டு போச்சி.. இன்னைய வரைக்கும் ஓலை உட முடியல! நம்ம பசங்க ஆசையா வச்ச சர்க்கார் பட பேனர வச்சி சமைய கட்ட அடைச்சியிருக்கேன்! ஆனா ஒன்னு அவன் சொன்ன மாதிரியே இன்னிக்கு பத்து மாடிக்கு மேல.. டாப்புல இருக்கேன்.. சுண்ணாம்பு அடிச்சிக்கிட்டு..

நாட்ல படிச்சவன் படிக்காதவன் எல்லாம் புது வருசம் நல்லா இருக்கனும்னு ஆண்டவன வேண்டுறான்.. நீ என்னடானா எகத்தாளம் பேசுற.. பாரு கரூர் பக்கம் வெள்ளியனைனு ஒரு ஊர்ல உள்ள போலீஸ் ஸ்டசன்ல எவ்வளவு பெரிய அதிகாரிங்க போலீஸ் எல்லாம் சேர்ந்து 2019-வது ஆண்டு அதாவது புது வருசம் பொறந்து எந்த குற்ற சம்பவமும் நடக்கு கூடாதுனு சாமிக்கி கெடா வெட்டி பூசய போட்டுருக்காங்க.. பெரிய ஆபிஸ்சருங்களுக்கு பார்சல் பறந்துருக்குது!

ஏன்ணே.. அந்த ஆடு..

திருட்டு போச்சினு கம்ளைண்டு கொடுத்த ஆடான்னுதானே நீ கேக்க வர்ர..

எப்பிடின்ணே கரைட்டா கேட்டிங்க!

ஏன்டா மாடு வால தூக்குனா என்னா பன்ணும்னு எனக்கு தெரியாது! குத்தமே நடக்க கூடாதுன்னு.. கெடா வெட்டி சாமி கும்பிட்டா அதுலயும் ஒரு குத்தம் கண்டுபிடிக்கிற பாரு!

ஏன்ணே! அப்போ மேஷ ராசிக்கு இந்த வருசம் சரியில்லையோ! பொறக்கும் போதே மேஷ ராசியவே போட்டுருச்சே! ஏன்ணே உங்க கணக்குபடி பேசாம ஊர்ல உள்ளவன் ஜாதகத்தையெல்லாம் வாங்கி க்ரைம் புத்தியே வராதபடி வெள்ளி செவ்வாய் ஸ்டேசனுக்கு வெளக்கு போட சொன்னா என்ன? இல்ல கும்பத்துக்கு கம்பம், விருச்சிகத்துக்கு லாக்கப்னு பரிகாரத்த பாத்து.. விசமிகள தசமி வச்சி தடுத்தா என்ன? எதுக்கு வுட்டுட்டு தேடுவானே..

ஏன்டா உன் பேச்ச பாத்தாலே தெரியிது இந்த வருசம் உன் ராசிக்கு கெடு பலன்னு…

ஏன்ணே நம்ம ராசிக்கு தான் வருசா வருசம் எறங்குது, கெறங்குது.. எல்லா வருசமும் நல்லா இருக்கேன்ணே இந்த அம்பானி அதானி எல்லாம் என்னா ராசின்ணே! இந்த பேங்கயே ஆட்டைய போட்டுட்டு இங்கிலாந்து பீச்சுல போய் மசாஜ் பன்ணிகிட்டு உக்காந்துருக்கானே மல்லையா அந்தாளு என்ன ராசின்ணே! இன்னோருத்தன் பஞ்சாப் நேசனல் பேங்கயே பஞ்சராக்கிட்டு போய்ட்டான்னே நீரவ் மோடி அது என்ன ராசின்ணே! என்ன மாதிரி ஏழைப்பாள உழைச்சி வாழ்றவங்களுக்கு ராசி இல்லங்கிறீங்க.. திருட்டு பயலுகளுக்கு யோகம் அடிக்குது!

டேய் எல்லாத்துக்கும் ராசி வேணும்டா! ஓடி போனவனுக்கு ஒன்பதுல குருன்னு சும்மாவா சொல்லிருக்கான்! புது வருசம் வந்தா எல்லாம் மாறும்டா!

வாழ்க்கை மாறாம வருசம் மாறி என்னாண்ணே பிரயோசனம்! நாம எதையாவது செஞ்சாதான்ணே எதுவும் மாறும்! இதோ வெளையுற வயல்ல கேஸ் எடுக்க வரான், கரி எடுக்க வரான் எதுத்து கேக்காம புது வருசம் பொறந்தா எல்லாம் சரியாகும்ன்னா எப்புடி?

எப்பா.. உன்னோட பேசிட்டே போனா என் நேரம் சரியில்லாம போய்டும் போலருக்கு! வருசம் பொறக்கும் போதே வாதம் பன்ணா வருசம் பூரா வாதமா போய்டும்.. நான் கெளம்புரம்ப்பா..

சரின்ணே! பரணில பொறந்தா தரணி ஆளுவான்னு, மெட்ராஸ்ல கம்பூட்டர் கம்பெனில வருசம் முதல்ல சேந்து, நல்ல சம்பளத்துல வேல பாக்குறான்னு சொல்லுவிங்களே உங்க பெரிய பையன்.. நல்லா இருக்கானே!

அத ஏன்டா கேக்குற.. அவனோடு சேர்ந்து ஒரு அஞ்சாரு பேர திடீர்னு வேலய விட்டே தூக்கிடானுவ! நேரம் சரியில்ல..

அய்யய்யோ!.. என்னாணே உங்க கணக்கு தப்பிடிச்சி! உங்க பையன் மேஷ ராசின்னுல சொன்னிங்க.. அப்போ முதலாளி சிம்ம ராசியான்ணே.. அடிச்சிடிச்சே! ஏன்ணே ஒரு சந்தேகம் இப்ப வெட்டுறவனுக்குள்ள ராசி தான் வெட்டுபட்டவனுக்கும் இருக்குதுன்னா.. பத்துவட்டிக்கு வுடுறவனுக்கு இந்த வருசம் அமோகமா இருக்கும்னா.. பத்துவட்டிக்கு கடன் வாங்குறவனும் அதே ராசின்னா.. இது என்னாண்ணே அநியாயம்? இந்த வருசத்துலயாவது இந்த கணக்க தீர்த்துவுடுங்கன்ணே.. ஏண்ணே.. ஏண்ணே.. கேட்டா பதிலே சொல்லாம போறிங்க.. வருசம் பொறந்துருச்சானே.. ஓடாதிங்கண்ணே அப்பறம் ஓடிகிட்டே இருக்ககணும். ஏன்ணே! சொல்லிட்டு போங்கண்ணே!

துரை.சண்முகம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. ஆமாண்ணே .. எனக்கு நீண்ட நாள் டவுட்டு — நாம காலுக்கு செருப்புமில்ல — கால் வயித்துக்கு கஞ்சியும் இல்ல என்று எல்லா வருடமும் துன்பத்தில் இருக்குறப்ப இந்த அரசியல்வாதிகளின் குறிப்பாக கலைஞரின் குடும்ப நஞ்சான் – குஞ்சான் எல்லாம் உழைக்காம வாழ்நாள் முழுக்க வசதியோடும் — சொத்து பத்தோடும் இருக்குறாங்களே — அவர்களை இந்த சனி பெயர்ச்சி — குரு பெயர்ச்சி — மற்ற கிரக பெயர்ச்சி எல்லாம் ஒன்னும் செய்யறதில்லையே அது ஏண்ணே — பகுத்தறிவே பக்தியா மாறியதாலா … ? ? நீங்க அம்பானி — அதானி — மல்லையா சொல்லையா என்று அங்கே உதாரணம் காட்டறீங்க …எல்லாம் எங்க கிரக நேரமாண்ணே …?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க