42-வது புத்தகக் கண்காட்சி : புத்தகங்களின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்
படிப்பதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிட்டதா ? இன்று நாம் பெற்றிருக்கும் அறிவும், அறிவியல் வளர்ச்சியும் அவ்வளவு எளிதாக வளர்ந்து வந்ததா ?
நமது சமூகத்திற்கு இவையெல்லாம் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. இன்று நாம் அனுபவிக்கும் அறிவியல் வளர்ச்சியும், நாம் பெற்றிருக்கும் கல்வி அறிவும், பலரது உழைப்பாலும், தியாகங்களாலும், விடாப்பிடியான போராட்டங்களாலும் கிடைக்கப்பெற்றவை.
இந்த ஒட்டுமொத்த வரலாற்றையும், மனித சமூகத்தின் பல்வேறு உணர்ச்சிகளின் பிரதிபலிப்பையும் நமக்கு அறியத் தரும் ஆயுதங்கள்தான் நூல்கள்.
நூல்கள் வாசிப்பது நம்மோடு ஒரு நல்ல நண்பனை எப்போதும் உடன் வைத்திருப்பதைப் போன்றது. நூல்கள் படிப்பதன் வரலாறு, அதன் அவசியம் குறித்துப் பேசுகிறார் கீழைக் காற்று வெளியீட்டகத்தின் தோழர் துரை. சண்முகம்.
சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !
நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35
அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…
கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் : 147, 148
Kindly share the books catalogue. So it would be easy for planning to buy books