அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும் !

”மண உறவை மீறிய பாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று ஆக்கப்பட்டுவிட்டால், குடும்பம் என்ற நிறுவனமே நொறுங்கிவிடும். இது ஒழுக்கக் கேட்டுக்கு வழிவகுக்கும்.  இந்தியப் பண்பாட்டின்படி திருமணம் என்பது புனிதமானது. அந்த புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டும், தனித்துவம் வாய்ந்த இந்திய சமூகக் கட்டமைப்பையும் அதன் பண்பாட்டையும் பாதுகாக்கும் பொருட்டும்தான் மக்கள் பிரதிநிதிகள் இந்த சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே எக்காரணம் கொண்டும் இ.த.ச. 497-ஐ ரத்து செய்யக்கூடாது” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது மோடி அரசு.

திருமணமும் குடும்பமும் இந்தியாவில் மட்டும் நிலவும் பண்பாடுகள் அல்ல. பெண்ணின் காதலையும் பாலியல் உரிமையையும் கட்டுப்படுத்துகின்ற ஆணாதிக்கமும் உலகெங்கும் நிலவுவதுதான்.  மண உறவை மீறிய பாலுறவை குற்றமாகக் கருதும் ஆணாதிக்கச் சட்டங்களும் உலகம் முழுவதும் இருந்திருக்கின்றன. அப்படியானால், இதில் இந்திய சமூக கட்டமைப்புக்கே உரிய தனித்துவம் என்று மோடி அரசால் வலியுறுத்தப்படுவது எது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி.

ஆணாதிக்கத்துடன் இணைந்திருக்கும் சாதிய அகமண உறவு என்கிற, பார்ப்பனிய தந்தைவழி ஆதிக்கம்தான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய இந்திய தனித்துவம்’’.

”தனது கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் ஒரு பெண்  உறவு வைத்துக் கொள்வதற்கு, அவளுடைய கணவன் நேரடியாக ஒப்புதல் தெரிவிக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. சாடைமாடையான ஒப்புதலை அளித்திருந்தால் கூட, அந்த உறவு தண்டிக்கத்தக்க குற்றமல்ல” என்று கூறுகிறது இ.த.ச. 497. ( if there is consent or connivance of the husband of a woman who has committed adultery, no offence can be established.)

”பிள்ளை இல்லாமல்  குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலை முறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்” என்கிறது மனுநீதி.

தன்னுடைய மனைவி யாரேனும் ஒரு தீண்டாச் சாதிக்காரனுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? என்பதுதான் மாதொருபாகன் நாவலில் பெண்ணுடைய கணவன் வெளிப்படுத்தும் கவலை.

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் மறைந்த எம்.எஸ்.கோல்வால்கர்.

”எந்த வர்க்கத்தைச் (சாதியையும் மொ-ர்) சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற  விதி இருந்தது… இதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது” என்கிறார்  கோல்வால்கர், (ஆர்கனைசர், ஜனவரி-2,1961, பக்கம்-5)

மதம், சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒழுக்கம், மரபு என்பவைதான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய “இந்திய தனித்துவம்’’. இவற்றுக்கு  எதிராக, தனிநபரின் உரிமை, கவுரவம், அந்தரங்கம், சமத்துவம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் அரசியல் சட்ட ஒழுக்கத்தை (constitutional morality)  இத்தீர்ப்பு முன்நிறுத்துவதால், சமூக ஒழுங்கு குலைந்துவிடும் என்பதுதான் மோடி அரசு நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய குமுறல்.

♦ ♦ ♦

”திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, மதப்புனிதம் சார்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அது ஒரு பெண் தன் உடல் மீது கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது” என்பதுதான் இ.த.ச. 497 ஐ ரத்து செய்கின்ற இந்தத் தீர்ப்பின் மையக்கருத்து.

ஆனால், வல்லுறவு குற்றம் தொடர்பான இ.த.ச பிரிவு 375,  ”மனைவியின் வயது 15-க்கு குறைவாக இல்லாதவரை, அந்தப் பெண்ணுடன் கணவன் கொள்ளும் பாலுறவை வல்லுறவு என்று கருதமுடியாது” என்று கூறுகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் இ.த.ச. 497 குறித்து வழங்கியிருக்கும் தீர்ப்பை இ.த.ச. பிரிவு 375 மறுதலிக்கிறது.

சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், ”மண உறவில் நிகழும் வல்லுறவு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டால், திருமணம் என்ற நிறுவனமே தகர்ந்து விடும் என்றும், இத்தகைய சட்டம் ஆண்களைத் துன்புறுத்துவதற்கான கருவியாக மாறிவிடும் என்றும்” வாதிட்டது மோடி அரசு.

படிக்க:
தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் !
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

”மண உறவில் மனைவியின் மீது கணவன் நிகழ்த்தும் வல்லுறவு’’ (Marital Rape) நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் புகழ்மிக்க பாரதப் பண்பாட்டின்படி’’, திருமணம் என்பது வல்லுறவு கொள்வதற்கு ஆணுக்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டு.  வல்லுறவுக்கான பரிகாரமாகவும், தண்டனையாகவும் கூட திருமணம் பரிந்துரைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.  திரைப்படங்களும் மரத்தடி பஞ்சாயத்துகளும் மட்டுமல்ல, உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களுமே இதைச் செய்கின்றன.

பெண்ணுக்கு தன் உடல் மீது உள்ள உரிமையை உத்திரவாதம் செய்யும் தீர்ப்பை செப். 27-ம் தேதியன்று வழங்கியது உச்ச நீதிமன்றம். அத்தகைய உரிமை ஒரு தலித் பெண்ணுக்கு கிடையாது என்று நிலைநாட்ட அக்டோபர் மாதம், சிறுமி ராஜலட்சுமி கொல்லப்பட்டாள். நந்தீஷும் சுவாதியும் நவம்பர் மாதம் கொல்லப்பட்டனர். இவை சாதி வெறியர்கள் எழுதிய தீர்ப்புகள். அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது” என்று அமித்ஷா சொன்னது சபரிமலை தீர்ப்புக்கு மட்டும் பொருந்துவது அல்ல.

ஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.

அஜித்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க