ல்லூரிகளில், பொது இடங்களில் இருக்கும் காதல் ஜோடிகளை, காதலர் தினத்தன்று இந்துத்துவக் காலிகள் அடித்து விரட்டுவதும், அவர்களின் கையில் தாலியைக் கொடுத்து கட்டச் சொல்வதும் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் அவ்வாறு செய்தால் செருப்படி விழும் என்று தெரிந்ததால், நாய்க்கு தாலி கட்டுவது, கழுதைக்குத் தாலி கட்டுவது என ’நூதன’ போராட்டத்தைச் செய்து வருகின்றன இந்துத்துவக் கும்பல்கள்.

சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்திருக்கும் ‘பேட்ட’ படத்தில்  இத்தகைய இந்துத்துவக் கும்பலை வில்லன்களாகக் காட்டி காட்சிகள் வரும். இவை நேரடியாக இல்லை எனினும் காட்சியின் பொருளில் இருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கு இந்துக்களின் காவலர்களான இந்துத்துவக் கும்பல்கள் எதுவும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக நமது ‘ஆண்டி இந்தியன்’ புகழ் எச். ராஜா கொதித்தெழாமல் மோன நிலையில் இருக்கிறார். அவரது டி.என்.ஏ இயல்புப் படி குதித்தெழுந்து கொதித்திருக்க வேண்டுமே? அப்படி ஏன் கொதிப்புகள் வரவில்லை?

லயோலா கல்லூரியில் மோடியையும், இந்துத்துவ கும்பலின் பார்ப்பன பாசிசத்தையும் அம்பலப்படுத்தும் விதமாக ஓவியர் முகிலன் வரைந்த ஓவியங்களை,கண்காட்சியில் வைத்ததற்காக, லயோலா கல்லூரியை மூட வேண்டும் என அறிவித்தவர் இந்த ராஜா. கல்லூரி நிர்வாகத்தின் மீதும், ஓவியர் முகிலனின் மீதும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வருமாறு உணர்வுள்ள ‘ஹிந்துக்களுக்கு’அறைகூவல் விடுத்திருந்தார், எச். ராஜா.

படிக்க:
♦ ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் !
♦ எச்ச ராஜாவை நெருப்பாய் பொசுக்கும் தமிழ் பேஸ்புக் !

அவரது அறைகூவலை ஏற்று தமிழகம் முழுவதிலுமிருந்து மொத்தம் ஏஏஏஏஏஏஏழு பேர் ‘திரண்டு’ வந்து டிஜிபி அலுவலகத்தையே திக்குமுக்காடச் செய்திருந்தனர். தமிழகத்தில் அவ்வளவு கூட்டத்தை பாஜக கூட்டுவது பெரிய்ய்ய்ய விசயம்தான்.

எச். ராஜா-வின் பாசையில் சொன்னால், “ரோசமுள்ள ஹிந்துக்கள்” தமிழகத்தில் மிகவும் குறைவுதான் போலும். ஆனால் ‘பேட்ட’ -க்கு பொங்காமல், லயோலாவுக்கு மட்டும் பொங்கும் எச்.ராஜாவின் ’ஹிந்து உணர்வு’ எப்படிப்பட்டது ?

எச். ராஜாவின் ‘ஹிந்து உணர்வின்’ யோக்கியதையை ஒரு அலைபேசி அழைப்பில் உலகிற்கு தெரியப் படுத்தியிருக்கிறார் சரித்திரன். யார் இந்த சரித்திரன்?

இவர் பிக் எஃப்.எம்-ல் சரித்திரனின் நரித்தனங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்துபவர். பிரபலங்களுக்கு அலைபேசியில் அழைத்து மற்றொரு பிரபலம் போல குரல் மாற்றி பேசி கலாய்ப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

அந்த வகையில் சரித்திரன் தமிழகத்தின் நம்பர் 1 சமூக வலைத்தள இழிபுகழ் பிரபலமான எச்.ராஜாவை தொடர்பு கொண்டு, குரலை மாற்றி ரஜினிகாந்த் போலப் பேசியிருக்கிறார். அதனை நம்பிய அறிஞர் எச்.ராஜா சுமார் 9 நிமிடங்கள் பேசியிருக்கிறார். சரியாகச் சொன்னால் ஆண்டவனிடம் முதுகு சொறிந்திருக்கிறார்.

சும்மா ரெண்டு புள்ளி விவரம் சொன்னதுக்காக மெர்சல் படத்தை தடை செய்ய வேண்டும் என சவுண்டு விட்டு சீன் போட்டார் எச்.ராஜா. ரஜினி நடித்த காலா படத்தில்  பாஜக வயிரெறியும் காட்சிகள் பல இருந்தாலும் படம் குறித்து பாஜக-வும் எச். ராஜாவும் வாயைத் திறக்கவில்லை. ஏன் ? அந்த ரகசியமும் இந்த வீடியோவில் அம்பலமாகியிருக்கிறது… சவண்டு விடும் எச்.ராஜாவின் ஆன்மாவில் இருப்பது நரித்தனமே என்பதை நிரூபித்திருக்கிறார் சரித்திரன், வாழ்த்துக்கள்!

கேளுங்கள் ! பகிருங்கள் ! மகிழுங்கள் !

ஆடியோ கேட்க :

ஆடியோ டவுன்லோடு செய்ய…

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

4 மறுமொழிகள்

  1. “ரோசமுள்ள ஹிந்துக்கள்” தமிழகத்தில் மிகவும் குறைவுதான் போலும்.

    இதை தவிர்க்கலாம். சும்மா இருக்கவனையும் நோண்டிவிடும் இது போன்ற வார்த்தைகள்.

    • வினவு கூட்டங்கள் தமிழ் நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாதிரி ஹிந்துக்களை அவமதிப்பது போல் செயல்படுகிறார்கள். இதே காரியத்தை இவர்கள் பாகிஸ்தானில் செய்து இருந்தால் இவர்களின் நிலையே வேறு…

      • எச்ச பேசுனத முழுசா கேட்டீங்களா மணி :> :> …அது ஏன் குசினி கிட்டஇப்புடி பம்முறாரு நம்ம எச்ச….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க