கேள்வி: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? இவை 85-வது முறையாக உடைந்தது என்று ஒரு புள்ளி விவரம்? கட்டுமானம் சரி இல்லையா ? இல்லை அறிவியல் பூர்வமான காரணம் ஏதும் உண்டா?

–  பா. அருண்

ன்புள்ள அருண்,
லண்டன் பாலம் உடைந்து விழுகிறது என்ற ஆங்கிலக் கவிதையை இனி சென்னை விமான நிலைய கண்ணாடி உடைகிறது என்று மாற்றி விடலாம். உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. சென்னையின் புதிய விமான நிலைய முனையத்தை 2013 ஆம் ஆண்டில் அப்போதைய துணைக் குடியரசுத் தலைவராக இருந்த அமீத் அன்சாரி திறந்து வைத்தார். ஆன செலவு 2,200 கோடி ரூபாய். இந்த புதிய முனையத்தில் செயற்கை கூரைகள், கண்ணாடிக் கதவுகள், கிரானைட் பலகைகள் என ஆடம்பரமாக கட்டியிருந்தார்கள்.

Chennai-AirportGlass-1பிறகு முனையம் திறந்து வைத்த பிறகு மாதத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடிக் கதவுகளும், கூரைகளும் விழுந்து உடைவது ஊடகங்களின் நிரந்த செய்தியாகி விட்டன. 2019-ம் ஆண்டு கணக்கை சில நாட்களுக்கு முன்பு விழுந்த கண்ணாடி கதவு துவங்கி வைத்திருக்கிறது. இதோடு உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.

சூழலுக்கு பொருத்தமாக அக்கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை என்பதால் உடைந்து விழுகின்றன. இது அறிவியல். உடைபடும் அளவிற்கு கண்ணாடிகளும், கட்டுமானமும் மோசமாக இருப்பதால் உடைகின்றன. இது யதார்த்தம். இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையின் சர்வதேச நுழைவாயிலாக இவ்விமான நிலையம் இருக்கிறது. சமீப ஆண்டுகளாக விமானப் போக்குவரத்தும் அதிகரித்திருக்கிறது. அதற்காகத்தான் பல கோடி செலவழித்து பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கட்டுமானத்துறையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் ஒரு அழகியலாக அறிமுகமானது. அதற்கு முன் கட்டிடக் கலையில் இருந்த பயன்பாட்டுவாத அணுகுமுறையை அழகியல் முறையாக மாற்றியது பின் நவீனத்துவ கட்டிடக் கலை. அப்படித்தான் இன்று நாம் காணும் கண்ணாடி மாளிகை வகை கட்டுமானங்களும், விதவிதமான தோற்றமுள்ள கட்டிடங்களும் கட்டப்பட்டன.

படிக்க:
♦ பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?
♦ பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இருக்கும் பணக்காரர்கள் மேற்குலகின் கட்டிடக் கலையைப் பார்த்து காப்பி அடித்து கட்டுகிறார்கள். அந்த காப்பியோடு கமிஷனும் சேர்கிறது. எட்டுவழிச்சாலையில் எடப்பாடியின் மாமனார் இருக்கிறார். வேதாந்தா நன்கொடைப் பட்டியலில் பாஜக இருக்கிறது. ஆதலால் கமிஷன் பற்றிய விசாரணைகளை நாம் செய்ய முடியாது.

தனியார்மயத்தின் முக்கியமான அம்சமே பொறுப்புத் துறப்புதான். அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் படி இங்கே அணு உலைகளில் விபத்து நடந்தால் அதற்கு அமெரிக்க நிறுவனங்கள் நிவாரணம் அளிக்கத் தேவையில்லை. இதை போபாலில் நடந்த யூனியன் கார்பைடு கொலை விபத்திலேயே பார்த்திருக்கிறோம். இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தின் நகரும் படிக்கட்டில் சிக்கி ஒருவர் இறந்து போக அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஏனெனில் ஒரு விமானநிலையத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற்று பணிபுரிகின்றன. தரையை பராமரிக்க ஒன்று, சாலையை பராமரிக்க ஒன்று, படிக்கட்டுகளுக்கு ஒன்று, பேருந்துகளுக்கு ஒன்று என பிரித்துப் பிரித்து வைத்திருப்பதால் இங்கிலாந்தில் யாரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தியாவிலும் அந்த நிலைமை பரவிவருகிறது.

சென்னை விமான நிலைய கட்டுமானத்தில் யார் இருந்தார்கள் என்பது நமக்கு குறிப்பாகத் தெரியவில்லை. கண்ணாடிகளை கான்ட்ராக்டு எடுத்தவர்கள் யாரெனவும் தெரியவில்லை. அம்மா ஆட்சியின் ஆசீர்வாதத்தோடு கூட அது நடந்திருக்கலாம். புதிய முனையத்தில் இப்படி கண்ணாடிகள் விழுந்து உடைவது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்திருக்கிறது. சில பல வழக்குகளும் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கின்றன. எனினும் இதுவரை ஏன் உடைகிறது, யார் காரணம் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.  இது விபத்து நடப்பதை விட பயங்கரமானது. நாம் சாவது கூட பிரச்சினையில்லை. ஆனால் ஏன் செத்தோம் என்று கூட இந்தியாவில் தெரிந்து கொள்ள முடியாது, இதுதான் மீப்பெரும் சோகம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க