‘‘சனாதனமா..? சனநாயகமா..?” என்ற தலைப்பில் “தேசம் காப்போம் மாநாடு’’  கடந்த 23.01.2019 அன்று திருச்சியில்  விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய முஸ்லிம் லீக், தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் சிறப்புரையாற்றிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் சனாதன தர்மத்தை தனது உரையில் அம்பலப்படுத்தி பேசியுள்ளார். வேதங்கள், இதிகாசங்கள் தொடங்கி இன்று வரையிலும் பார்ப்பனியம் நம்மை அடிமைப்படுத்துவதை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். அனைவரும் கேட்க வேண்டிய உரை. பாருங்கள்… பகிருங்கள்…

நன்றி : நக்கீரன்

1 மறுமொழி

  1. அனைத்து சந்தர்ப்பவாதிகளும் , ஆளும் வர்க்க அடிப்பொடிகளும் கூடிய இந்தக் கூட்டத்தில் , மதுரை இறையியல் கல்லூரியில் தயாரிக்கப்பட்ட இந்த “புரட்சியாளரும்” சிறப்புரை நிகழ்த்தினாராக்கும் …😂😂👍

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க