இந்து ராஷ்டிரம் நிலைநாட்டப்பட்டு வருகிறது, அதை வீழ்த்த ஒன்றிணைவோம்! | பாலன் | வீடியோ

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

மிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்கள் பேசிய உரையில், பாசிச அரசமைப்பு மக்கள் ஒடுக்குகிறது. யாருக்கு சேவை செய்கிறது. இந்த மாநாட்டின் 32 தீர்மானங்கள் இந்த ஆட்சியின் ஒடுக்குமுறையை எடுத்து கூறுகிறது. நீதித்துறையின் நடவடிக்கைகளும், பாராளுமன்றத்தின் கொண்டுவரும் சட்ட மசோதாக்களும், நடக்கும் கைதும், ஒடுக்குமுறைகளும் பாசிசம் வளர்ந்து ஆட்சியை கைப்பற்றி நாட்டிற்கு ஒரு பேரிடரை தோற்றுவித்து கொண்டிருக்கிறது என்பதை கண்ணுற்று வருகிறோம்.

கடந்த 30 ஆண்டுகாலமாக உங்கள் அமைப்பு எதிர்த்து வந்திருக்கிறது. பல்வேறு தீவிர பிரச்சாரங்களையும் செய்து வந்துள்ளீர்கள். கருவறை நுழைவு போராட்டம் முதல் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறீர்கள்.

பார்ப்பன பாசிச பயங்கரவாதம் இன்று நடைமுறையில் இருக்கிறது. அரச கட்டமைப்பு இயக்கும் சித்தாந்தமாக இருக்கிறது. இந்துத்துவ தேசியமாக மாறியுள்ள சூழலில் மிகவும் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களை ஏன் முறியடிக்க முடியவில்லை என்பதை நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி?

இஸ்லாமிய இயக்கங்கள், மார்க்சிய-லெனினிய இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் தனித்தனியாகதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு பொது மேடை ஏன் நாம் உருவாக்க முடியவில்லை? இதற்கான கேள்வியை எழுப்பி விடைக்காணும் வகையில் மக்கள் மத்தியில் சென்றால்தான் அவர்களை முறியடிக்க முடியும். சில குறிப்பிட்ட முதலாளிகளுக்குதான் மோடி கும்பல் வேலை செய்கிறது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் கைக் கோர்ப்போம்! பாசிசத்தை முறியடிப்போம்! என்று பேசினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க