ரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றிவிட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

‘’தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்‌ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையிதோ இல்லியோ நிகழ்ச்சியோட பேரக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி ‘’மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், ‘’கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’ என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர கலகம் செய்தனர். ‘’எக்ஸாம் ஸ்ட்ரசுக்கா நடத்துறியா? எலெக்சன் ஓட்டுக்கா நடத்துறியா?’’ என்ற முழக்கங்களை எழுப்பினர். முற்போக்கு மாணவர்களுக்கு ஆதரவாக, கூடியிருந்த மாணவர்கள் எழுப்பிய கரவொலியும் விசில் சத்தமும் காதை பிளந்தது. மோடியின் நேரலை நிகழ்வும் அத்தோடு நிறுத்தப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு கலைந்து சென்றனர்.

அரசு அதிகாரத்தை முறைகேடான நோக்கத்துக்கு பயன்படுத்த எத்தனிக்கிறது, மோடி அரசு.வினவு செய்திப் பிரிவு சங்கிகள் கொண்டையை மறைத்துவிட்டு வந்தாலும் தப்ப முடியாது என வச்சி செய்திருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள்.  கல்லூரியின் பெயரில் மட்டுமல்ல; பார்ப்பன எதிர்ப்பு மரபில் வந்தவர்கள் நாங்கள் என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். மோடிக்கு தமிழகத்தில் எங்கும் இடமில்லை.

தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்,
திருச்சி. தொடர்புக்கு: 99431 76246


இதையும் பாருங்க

எலே எங்க வந்து நடத்துற ரத யாத்திரை !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

7 மறுமொழிகள்

 1. நீ நேர வந்தா என்ன… நேரலைல வந்தா என்ன ?
  இங்கே வீசுவது உனக்கு எதிர்ப்பாலை

  நாங்கள் ஒன்னும் இரட்டை இலையோட எச்சிலை இல்லை
  தறுதலை என்று நீங்க சபிச்சாலும்
  எங்க உண்மையான உணர்ச்சியோ விடுதலை

  உனக்கு இருப்பது தேர்தல் ஸ்டிரெஸ்
  எங்களுக்கு இருப்பது எக்ஸாம் ஸ்டிரஸ் இல்லை
  நீ நாள்தோறும் கொடுக்கும் குடைச்சலை செய்யும் கெடுதலை
  அதிகாரத்தைக் கொண்டு எங்கள் கழுத்தை நெரித்தலை
  மீண்டு வருவது எப்படி என்கிற ஸ்டிரெஸ் தான்.

  நாங்க பக்கோட விற்க முத்ரா லோன் போட்டு
  அனில் அகர்வால் வீட்டு வாசப்படியில
  சுய தொழில் முதலாளியா நிற்கப் போறதில்ல
  அவன் எங்க பாக்கெட்டுல 200, 300 கோடிய செறுகப்போறதும் இல்ல.

  ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புன்னு
  பிரகாசமா புளுவி இளைஞர்களை ஏய்ச்சியே
  அவங்க கிட்ட போயி
  வருசத்துக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்காக ஓட்டுப்போட்ட ஆனா
  வந்ததோ 2 கேடிக்கு வேலை வாய்ப்பு அஞ்சு வருசத்துக்கு
  அத்தோடு இந்த சனியன தலைமுழுகுன்னு சொல்லணும்

  ஓம் மங்கி பாத்தெல்லாம் அயோத்தியில போயி சொல்லு
  இல்ல சீல்டு கவர்ல உட்டு உச்ச்ச்ச்ச நீதிமன்றத்துல கொடு
  இது பெரியார் காலேஜு பெரியாழ்வார் கலேஜு இல்ல.

  போர்க்குணத்தோடு எதிர்கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 2. ஐயோ பாவம் யாரு பெத்த பிள்ளைகளோ இப்படி மென்டலாக திரியுதுங்க… நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

 3. தமிழன் எப்படி தரம் தாழ்ந்து போனான் என்பதற்கு உதாரம் உங்கள் நடத்தை. கீழ்த்தரமான மாநிலம் தமிழ்நாடு இப்படி தரங்கெட்ட அரசியலால் என்பதை தமிழனாக நான் வெட்க்கி தலைகுனிந்து பகிர்கிறேன்

 4. திருக்குறளை பின்பற்றினால் விருந்தோம்பல் பற்றி தெரியும். விரோதியாய் இருந்தாலும் நம் வீடு தேடி வந்தொரை நாம் நன்கு உபசரிக்க வேண்டும். கீழ்த்தர அரசியல்வாதிகளால் தமிழன் மானம் சந்தி சிரிக்கிறது. நடத்துங்கள்

  • இதற்கு பெயர் தான் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சீ என்று வினவுகாரங்க சொல்கிறார்கள். இவர்களின் தரம் இவ்வுளவு தான்… ஆனால் இவர்களின் தரமற்ற செயல்காளால் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் தலைகுனிவு.

  • இவர்கள் எல்லாம் மார்க்சிஸ்ட் பெரியார் வழி வந்தவர்கள் திருக்குறள் இவர்களை பொறுத்தவரையில் தகுதியற்ற நூல்… இந்த கம்யூனிஸ்ட் பெரியார் கூட்டங்களுக்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க