மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்

நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் காணொளி …

அவர் உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள் …

♦ நான் மருத்துவம் படித்த மாணவர்களிடம் கேட்கிறேன்… அனாடமி படிச்சிருக்க, பிசியாலஜி படிச்சிருக்க, பயோகெமிஸ்ட்ரி படிச்சிருக்க, 19 அறிவியல் பாடத்தையும் படிச்சிட்டு அப்புறமும் உன் கிளினிக்ல சாமிபடம் இருந்திச்சினா என்ன சொல்றது?

♦ கேள்வி மேல கேள்வி கேட்பான். இந்த தியரி தப்பு. நான் இங்க படிச்சேன். அங்கே படிச்சேன். அப்படினு சொல்லிட்டு வீட்ல பட்ட போட்டுட்டு தூங்குவான்.

♦ நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா. பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது.. நம்ம வருமானம் குறைஞ்சிட்டே போகுதே… அத கடவுள் பாத்துப்பாருப்பா.. சிரிப்பா இருக்கு… கோவமா இருக்கு…

♦ இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள்  நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

5 மறுமொழிகள்

 1. ஈ வெ ரா உலகின் முதல் பகுத்தறிவாதி. டாக்டர் எழிலன் உலகின் இரண்டாவது பகுத்தறிவாதி

  இந்தியாவில் மற்ற அனைவரும் தேவை இல்லாமல் பிறந்து விட்டார்கள்

   • இங்கு அனைவருக்குமே ஓரளவுக்காவது சிந்திக்கும் திறன் இருக்கிறது. பகுத்தறிவு என்கிற பெயரில் ‘மதம் மற்றும் கடவுள்’ இவை இரண்டை பற்றி மட்டுமே எப்படி பகுத்தறிவாக முடியும்

    இதில் வேறு ‘பகுத்தறிவு மாநாடு’ என்கிற பெயரில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுவது. இந்த டாக்டர் எழிலன் ‘நீயா நானாவில்’ ஜோதிடத்தை பற்றி சிந்திக்கும் திறனற்று கேட்கும் கேள்விகள் தான் பகுத்தறிவாதம் போல

    To be simple, bashing against ‘religion and other related activities’ and that too ‘selective bashing’ is known as Rationalism. Rationalism DOES NOT DEAL with anything else

 2. இங்கு அனைவருக்கும் நன்றாக சிந்திக்கும் திறன் இருக்கிறது. ஓரளவுக்காவது என்று குறுக்க வேண்டாம்.
  ஆனால் பலவிதமான கருத்துக்களைப்பற்றி, குறிப்பாக தினப்படி வாழ்வில் நம்மோடு தொடர்புடைய மற்றும் நம்மை ஆட்டுவிக்கிற கருத்துக்களைப்பற்றி சிந்திப்பதே கிடையாது.

  /‘மதம் மற்றும் கடவுள்’ இவை இரண்டை பற்றி மட்டுமே எப்படி பகுத்தறிவாக முடியும் / உங்களுடைய இந்த கூற்று சரியே. எனினும், மதம் மற்றும் கடவுள்’ இவை இரண்டிலுமுள்ள பொய்புறட்டுக்களைக் கட்டவிழ்த்துத்தான் பகுத்தறிவு என்னும் கோட்பாடு பிரசவித்தது.

  /ஜோதிடத்தை பற்றி சிந்திக்கும் திறனற்று கேட்கும் கேள்விகள் தான் பகுத்தறிவாதம் போல/ இது ஒரு புரட்டுவாதம். நகைப்புக்குரியது. எவ்வாறென்றால், ‘கடவுள் இல்லை’ என்று சொல்பவர்கள் அந்தக் கடவுளின் ஆணைப்படிதான் அவ்வாறன கருத்தைக் கொண்டிருக்கிறார்களென்பது போல.

  மருத்துவர் எழிலனோட சொற்பொழிவுல எந்தக்கருத்து பகுத்தறிடன் ஒத்துப்போகவில்லை? அதைக்குறிப்பிட்டுப் பின்னூட்டமிட வேண்டியதுதானே? அதைவிடுத்து மருத்துவர் எழிலனை ஏளனம் செய்வது போல, தந்தை பெரியாரின் பெயரை எதற்கு வம்புக்கிளுக்க வேண்டும்?

  நீங்கள் பார்ப்பனரல்லாதவராக இருப்பின் – மறக்க வேண்டாம், உங்களுடைய கல்வி, வேலை மற்றும் வாழ்வின் ஒவ்வொரு அங்கமும், தந்தை பெரியாரின் எழுபது வருட போராட்டத்தின் கொடை.

  • KKN,

   // உங்களுடைய இந்த கூற்று சரியே. எனினும், மதம் மற்றும் கடவுள்’ இவை இரண்டிலுமுள்ள பொய்புறட்டுக்களைக் கட்டவிழ்த்துத்தான் பகுத்தறிவு என்னும் கோட்பாடு பிரசவித்தது. //

   அது அவரவர் பார்வையை பொறுத்தது நம் முன்னோர்கள் எதையுமே நேரடியாக சொல்லவில்லை. அது தான் அவர்களுடைய மிக பெரிய தவறு. எல்லாவற்றையுமே நேரடியாக சொல்லி இருந்தால் ‘பகுத்தறிவு பேசும்’ கோஷ்டி தோன்றி இருக்காது

   ஜாபாலி காலத்தில் இருந்தே பகுத்தறிவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பகுத்தறிவை தி.க கோஷ்டியினர் ஒன்றும் கண்டுபிடிக்க அவசியமில்லை

   // மருத்துவர் எழிலனோட சொற்பொழிவுல எந்தக்கருத்து பகுத்தறிடன் ஒத்துப்போகவில்லை? அதைக்குறிப்பிட்டுப் பின்னூட்டமிட வேண்டியதுதானே? அதைவிடுத்து மருத்துவர் எழிலனை ஏளனம் செய்வது போல, தந்தை பெரியாரின் பெயரை எதற்கு வம்புக்கிளுக்க வேண்டும்? //

   இதே தளத்தில் நானே அதை பற்றி பின்னூட்டமிட்டு இருக்கிறேன். நீயா-நானாவில் இவர் விட்ட கப்ஸா

   “ராகு – கேது கிரங்கள் இல்லை. ஆனால் அவற்றை ஜோதிடம் கிரஹங்கள் என்று செல்கின்றது ”

   சாஸ்திரம் ‘ராகு – கேதுக்களை; சாயா கிரஹங்கள் என்றே தெளிவாக குறிப்பிடுகிறது. டாக்டர் எழிலன் எப்படி அடிப்படை புரிதல் ‘ஜோதிடத்தை பற்றி’ பேசலாம்

   தந்தை பெரியாரை யாரும் வம்புக்கு இழுக்கவில்லை

   ‘மானமும் அறிவும்’ தந்தவர் ;ஈ வெ ரா’ என்று நீங்கள் தான் ‘தமிழனின் அறிவை’ மட்டம் தட்டி கொண்டு இருக்கிறீர்கள். என்றைக்கு மனிதன் ‘இழை, தழைகளை’ உடுத்த ஆரம்பித்தானோ அப்போதே அவனுக்கு ‘மானமும், அறிவும்’ வேலை செய்ய துவங்கி விட்டது

   // நீங்கள் பார்ப்பனரல்லாதவராக இருப்பின் – மறக்க வேண்டாம், உங்களுடைய கல்வி, வேலை மற்றும் வாழ்வின் ஒவ்வொரு அங்கமும், தந்தை பெரியாரின் எழுபது வருட போராட்டத்தின் கொடை. //

   அதென்ன அது சொல்பவர்கள் எல்லாம் ‘ஈ வே ரா’ இல்லை என்றால் எதுவுமே எல்லை சொல்கிறார்கள்

   அப்போது ‘வைகுண்டர்’, ‘ரெட்டைமலை சீனிவாசன்’, ‘M C ராஜா’ இவர்கள் எல்லாம் யார்.?

   1) ஈ வெ ரா வால் தான் படிக்க நேர்ந்தது என்றால் இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ‘முத்துலட்சுமி ரெட்டி’ 1912ல் எப்படி டாக்டர் பட்டம் பெற்றார் ?வயதில்

   குறிப்பு : ஈ வெ ரா தன 25வது வயதில் தான் பொது வாழ்க்கைக்கு வருகிறார். அவர் பொது வாழ்க்கைக்கு வந்து ‘இரண்டு-மூன்று வருடங்களுக்கு’ உள்ளாகவே கல்வி துறையில் மாற்றம் கொண்டு வந்து ‘முத்துலட்சுமி ரெட்டி’ டாக்டர் பட்டம் பெற்று விட்டாரா ?

   2) ‘reservation systemம்’ இந்தியா ஸ்வதந்திரம் அடைவதற்கு முன்னிருந்து இருப்பது தான்.

   நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க